திருப்பூரில் குடிபோதையில் தகராறு: தள்ளுவண்டி கடை உரிமையாளர் உள்பட 2 பேருக்கு கத்திக்குத்து - 3 பேரை பிடித்து போலீஸ் விசாரணை

குடி போதையில் வந்த கும்பல் உணவு சரியில்லை என கூறி சாப்பாடு தட்டை வீசி தகராறு செய்துள்ளனர்.புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
காயமடைந்தவர்கள் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் காட்சி. 
காயமடைந்தவர்கள் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் காட்சி. 
Published on

திருப்பூர் :

திருப்பூர் ராமமூர்த்தி நகர் பகுதியை சேர்ந்தவர் சுல்தான் (வயது 37). இவர் மில்லர் பஸ் நிறுத்தம் அருகே தள்ளுவண்டி கடையில் உணவகம் நடத்தி வருகிறார். இந்த கடையில் அவருக்கு உதவியாக அவரது சகோதரர் இதயத்துல்லா (35) என்பவரும் வேலை செய்து வந்தார். இந்நிலையில் நேற்று இரவு 9 மணியளவில் தள்ளுவண்டி கடையில் ஏராளமானவர்கள் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். அப்போது மோட்டார் சைக்கிள்களில் 6 பேர் கொண்ட கும்பல் சாப்பிட வந்தது.

குடி போதையில் வந்த கும்பல் சுல்தான் மற்றும் இதயத்துல்லாவிடம் உணவு சரியில்லை என கூறி சாப்பாடு தட்டை வீசி தகராறு செய்துள்ளனர். இதனை சுல்தான் மற்றும் இதயதுல்லா ஆகியோர் தட்டிக் கேட்டுள்ளனர். தொடர்ந்து ஆத்திரமடைந்த அந்த கும்பல் சுல்தான் மற்றும் இதயத்துல்லா இருவரையும் கத்தியால் குத்தியும், வெட்டியும் அடித்து உதைத்து தாக்கவும் செய்துள்ளனர். இதனால் வலியால் அவர்கள் அலறி துடித்தனர். தொடர்ந்து பொதுமக்கள் அந்த பகுதியில் திரண்டனர். அதற்குள் அந்த கும்பல் மோட்டார் சைக்கிளில் ஏறி தப்பிச் சென்றது.

படுகாயமடைந்த சுல்தான் மற்றும் இதயதுல்லா ஆகியோர் திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். சம்பவம் குறித்து சுல்தான் திருப்பூர் வடக்கு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com