என் மலர்
நீங்கள் தேடியது "லாக்கப் மரணம்"
- பெரிய கல்லை தன்னுடைய கால் மீது போட்டு காவலர்கள் காலை உடைத்து விட்டதாக தெரிவித்துள்ளார்.
- காவல்துறையில் இது போன்ற அத்துமீறிய அராஜகமான நடவடிக்கைகள் தொடர்கிறது.
மானாமதுரை லாக்கப் படுகொலை சம்பவத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும், காவலர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்திடவும் வலியுறுத்தல் செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து சிபிஎம் மாநில செயலாளர் பெ. சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை கிருஷ்ணராஜபுரத்தைச் சார்ந்த கண்ணன் மகன் ஆகாஷ் (26) என்கிற பட்டியல் சமூகத்தை சேர்ந்தவரும் அவரது நண்பர்கள் குணா, அலெக்ஸ், சரவணன் முகேஷ் கண்ணன் ஆகியோர்களுக்கும் ரயில்வே காலணியைச் சேர்ந்த ஜெயக்குமார் ஆதனூரைச் சேர்ந்த ஆழகர் ஆகியோர்களுக்கும் 5.3.2026 அன்று மாலையில் கிருஷ்ணராஜபுரத்தில் தகராறு நடந்துள்ளது.
அன்று இரவு மானாமதுரை சியோன்நகர் அருகில் மேற்படி ஜெய்குமார் மற்றும் ஆழகர் ஆகியோர் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது கிருஷ்ணராஜபுரத்தைச் சேர்ந்த மேற்படி ஐந்து பேரும் கத்தி போன்ற ஆயுதத்தை வைத்து தாக்கியுள்ளனர்.
இதில் காயமடைந்த ஜெய்குமார், ஆழகர் இருவரும் மானாமதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் 6.3.2026 பிற்பகல் 12 மணி அளவில் ஆகாஷ் மற்றும் நான்கு பேரையும் காவல்துறை கைது செய்துள்ளது. இவர்களை காவல்துறையினர் எங்கு வைத்துள்ளனர் என்ற விபரம் பெற்றோர்களுக்கு தெரிவிக்கப்படவில்லை.
திடீரென 7.3.26 அன்று இரவு ஆகாஷ் பெற்றோர்களைத் தொடர்பு கொண்ட காவல்துறையினர் ஆகாஷ் மதுரை அரசு இராஜாஜி மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக கூறியுள்ளனர்.
பதறியடித்து பெற்றோர்கள் மதுரை ராஜாஜி மருத்துவமனையில் ஆகாசை பார்த்து உள்ளனர். அப்போது ஆகாசினுடைய கால் முறிக்கப்பட்டு இருந்தது. இது தொடர்பாக ஆகாஷ் தன்னுடைய பெற்றோர்களிடம் பெரிய கல்லை தன்னுடைய கால் மீது போட்டு காவலர்கள் காலை உடைத்து விட்டதாக தெரிவித்துள்ளார்.
மகனுக்கு ஆறுதல் தெரிவித்து விட்டு உணவு தயார் செய்து வருவதற்காக பெற்றோர்கள் வீடு திரும்பி இருக்கின்றனர். ஆனால் 8.3.26 அன்று காலையில் பெற்றோர்களுக்கு ஆகாஷ் இறந்து விட்டதாக காவல்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.
மேலும் அவரோடு கைது செய்யப்பட்ட நான்கு பேரையும் இராமநாதபுரம் சிறையில் அடைத்திருப்பதாக காவலர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த கொடூரமான லாக்கப் படுகொலையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிக்கிறது. ஆகாஷ் படுகொலை செய்யப்படுவதற்கு முன்னால் அவர் மிக கடுமையான சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டு இருக்கிறார் என்பது அவர் கால் உடைந்ததிலிருந்து தெரிய வருகிறது. காவல்துறையில் இது போன்ற அத்துமீறிய அராஜகமான நடவடிக்கைகள் தொடர்கிறது.
மனித உரிமைக்கு எதிரான இந்த கொடூரச் குற்றச்செயலில் ஈடுபட்ட அப்போது நிலையத்தில் பணியில் இருந்த அனைத்து காவலர்துறையினர் மீதும் உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.
குற்றம் இழைத்த காவல்துறையினர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு அவர்கள் கைது செய்யப்பட வேண்டும் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக் கொள்கிறது. அதேபோல் உயிரிழந்திருக்கிற ஆகாஷ் குடும்பத்தினருக்கு வன்கொடுமைகள் தடுப்பு சட்டத்தின் கீழ் கிடைக்க வேண்டிய அரசு வேலை உள்ளிட்ட அனைத்து விதமான தீருதவிகளையும் அரசு வழங்கிட வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
- திமுக ஆட்சியில் மட்டும் இதுவரை 27 காவல்நிலையச் சாவுகள் நடந்துள்ளன.
- திமுக ஆட்சியில் மனித உயிர்களுக்கும், மனித உரிமைகளுக்கும் மரியாதை இல்லை என்பதையே இது காட்டுகிறது.
பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை காவல்நிலைய காவலர்களால் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட ஆகாஷ் கைது விசாரணை என்ற பெயரில் துன்புறுத்தி கொலை செய்யப்பட்டிருக்கிறார். மனித உயிர்களும், மனித உரிமைகளுக்கும் கிஞ்சிற்றும் மதிப்பளிக்காமல் திமுக அரசும், காவல்துறையும் செயல்பட்டு வருவது கண்டிக்கத்தக்கது ஆகும்.
மானாமதுரையில் கடந்த 6-ம் தேதி இருவரை அரிவாளால் வெட்டிய வழக்கில் ஆகாஷ் உள்ளிட்ட இருவர் கைது செய்யப்பட்டனர். அடுத்த சில மணி நேரங்களில் கால் முறிந்த நிலையில் ஆகாஷ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
ஆனால், வழக்கம்போலவே காவல்துறையினரின் பிடியிலிருந்து தப்பி ஓடும்போது பாலத்திலிருந்து விழுந்து கால் முறிந்து விட்டதாக காவல்துறை கூறியது. மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று மதுரை சிறைக்கு அழைத்துச் செல்லும்போது நன்றாக இருந்த ஆகாசுக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்து விட்டதாக காவல்துறை சார்பில் கதை எழுதப்படுகிறது.
ஆனால், ஆகாஷ் கைது செய்யப்பட்டது முதல் உயிரிழக்கும் வரை காவல் நிலையத்திற்கே அழைத்துச் செல்லப்படவில்லை என்றும், அவரை ரகசிய இடத்தில் வைத்து கொடுமைப்படுத்தி காவல்துறையினர் படுகொலை செய்து விட்டதாகவும் குடும்பத்தினர் குற்றஞ்சாட்டியுள்ளனர். காவல்துறையினருக்கு எதிராக ஆகாஷ் உறவினர்கள் நடத்தும் சாலை மறியல் போராட்டத்தால் மதுரை- ராமேஸ்வரம் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் நடைபெறும் குற்றங்களைத் தடுக்கத் திறனற்ற அரசும், காவல்துறையும் அரசுக்கு எதிரான மனநிலை மக்களிடம் ஏற்படும் போதெல்லாம் அதை திசை திருப்புவதற்காக கைதிகளை சுட்டுக்கொல்வது, காலை முறிப்பது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றன. வழக்குகளை முறையாக விசாரித்து தண்டனை பெற்றுத் தருவதற்கு பதிலாக கைதிகளை சித்திரவதை செய்து கொலை செய்யும் போக்கு திமுக ஆட்சியில் அதிகரித்து வருகிறது.
கடந்த ஆண்டில் சிவகங்கை மாவட்டம் மானாமதுரை வட்டம் திருப்புவனம் காவல்நிலையத்தில் மடப்புரம் அஜித்குமார் அடித்து கொலை செய்யப்பட்ட நிலையில், இப்போது மானாமதுரையில் ஆகாஷ் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
ஆகாஷ் சித்திரவதைக் கொலைக்கு காரணமான காவல்துறையினர் அனைவரும் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்தி தண்டிக்கப்பட வேண்டும். ஆகாஷ் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் இழப்பீடாக வழங்கப்பட வேண்டும்.
இவ்வாறு அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
டிடிவி தினகரன் கண்டனம்
அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக இருவரை அரிவாளால் வெட்டிய வழக்கில் கைதான ஆகாஷ் எனும் இளைஞர் காவல்துறையினரின் சட்டவிரோத துன்புறுத்தலால் உயிரிழந்திருப்பதாக ஊடகங்களிலும், நாளிதழ்களிலும் செய்திகள் வெளியாகியுள்ளன.
ஆகாஷை கைது செய்த காவல்துறையினர், அவரை காவல் நிலையத்திற்கே அழைத்துச் செல்லாமல் சட்டவிரோதமாக அடித்துத் துன்புறுத்தியதோடு, தொடர் சித்ரவதைக்கு உள்ளாக்கப்பட்டதே ஆகாஷின் உயிரிழப்புக்குக் காரணம் எனக்கூறி அவரின் குடும்பத்தினரும், உறவினர்களும் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
காவல்துறையினரின் பிடியிலிருந்து தப்பிக்க முயன்றதாகக் கால் முறிந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும், சிகிச்சைக்குப் பின் மதுரை சிறைக்கு அழைத்துச் செல்லும்போது நன்றாக இருந்த கைதி, திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு உயிரிழந்துவிட்டதாகவும் காவல்துறையிலிருந்து அளித்திருக்கும் விளக்கம் ஏற்புடையதாக அல்ல என அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் அன்றாடம் அரங்கேறும் குற்றச்சம்பவங்களைத் தடுக்க திறனற்ற திமுக அரசு, ஒவ்வொரு கொலைச் சம்பவத்திற்கும் புதுப்புது காரணங்களை அடுக்குவதையும், மக்கள் மீது அதிகரிக்கும் அதிருப்தியைத் திசைதிருப்பக் கைதிகள் மீது இதுபோன்ற சித்ரவதைகளை அரங்கேற்றுவதையுமே வாடிக்கையாகக் கொண்டிருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
எனவே, காவல்துறையினரின் சித்ரவதைக்குள்ளாகி உயிரிழந்திருப்பதாகக் கூறப்படும் கைதி ஆகாஷின் குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடு வழங்கிடுவதோடு, இவ்வழக்கை விரிவாக விசாரித்து காவல்துறையினர் சட்டவிரோதமாகச் செயல்பட்டிருப்பது உறுதியாகும் பட்சத்தில் அவர்கள் அனைவரின் மீதும் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
- குற்றங்கள் நடக்காமல் தடுக்கப்பட வேண்டும்.
- போதைப் பொருள் - கள்ளச்சாராயம் - பெண்கள் பாதுகாப்பு - லாக்கப் மரணங்கள் போன்றவற்றில் யார் கடமை தவறினாலும் அரசின் நடவடிக்கை மிக மிக கடுமையாக இருக்கும்.
தமிழக முதல்வர் முக ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
குற்றங்கள் நடக்காமல் தடுக்கப்பட வேண்டும். மீறி நடந்தால் அதில் ஈடுபட்டவர் ரவுடியானாலும், அரசியல் பின்புலம் கொண்டவரானாலும், காவலரே ஆனாலும் அதற்கான தண்டனையை விரைவில் பெற்றுத் தந்து நீதி நிலைநாட்டப்படும் ஆட்சியாகத்தான் திராவிட மாடல் அரசு திகழ்ந்து வருகிறது.
"போதைப் பொருள் - கள்ளச்சாராயம் - பெண்கள் பாதுகாப்பு - லாக்கப் மரணங்கள் போன்றவற்றில் யார் கடமை தவறினாலும் அரசின் நடவடிக்கை மிக மிக கடுமையாக இருக்கும்" என்பதைச் சட்டம் - ஒழுங்கு குறித்த இன்றைய ஆய்வுக் கூட்டத்தில் வலியுறுத்தினேன்.
- தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு கட்டுப்பாடின்றி இருக்கிறதா? என அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார்.
- சிபிசிஐடிக்கு இந்த வழக்கை உடனடியாக மாற்றி குற்றவாளிகளுக்குத் தண்டனை பெற்றுத் தரவேண்டும்.
கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் காவல்நிலைத்தில் கையெழுத்திட்டு போடச் சென்ற அஜித் என்ற இளைஞரை போலீசார் காவல் நிலையத்தில் வைத்து சித்ரவதை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-
கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் அருகே காவல்நிலையத்தில் கையெழுத்துப் போடச் சென்ற 22 வயது இளைஞர் அஜித் என்பவர் காவல்நிலையத்தில் வைத்து சித்திரவதை செய்யப்பட்டு மரணித்ததாக வரும் செய்திகள் அதிர்ச்சியளிக்கிறது. இறந்தவர் குடும்பத்திற்கு தமிழக பாஜக ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கிறது.
இறந்த இளைஞனின் தாயின் வேதனையைப் போக்க இழப்பீடு மட்டும் போதாது. திமுக ஆட்சி அமைத்த நாள் முதல் தமிழகத்தில் லாக்கப் மரணங்கள் தொடர்கதையாகிவிட்டது. கட்டுப்பாடின்றி இருக்கிறதா தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு என்ற சந்தேகத்தையும் இதுபோன்ற சம்பவங்கள் எழுப்புகிறது. சிபிசிஐடிக்கு இந்த வழக்கை உடனடியாக மாற்றி குற்றவாளிகளுக்குத் தண்டனை பெற்றுத் தர இந்த அரசு நடவடிக்கை எடுக்கும் என்று நம்புவோம்.
இவ்வாறு அண்ணாமலை கூறி உள்ளார்.






