என் மலர்tooltip icon
    • டி20 உலகக் கோப்பை தொடரின் ஐசிசி தூதராக ரோகித் சர்மா உள்ளார்.
    • அறிமுக டி20 உலகக் கோப்பை வென்றவர் எம்.எஸ். தோனி ஆவார்.

    டி20 உலகக் கோப்பையின் இறுதிப் போட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் தொடங்கியுள்ளது. இதில் இந்தியா- நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்த போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டதில் நியூசிலாந்து கேப்டன் சான்ட்னெர் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார்.

    இந்திய அணியில் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை. இங்கிலாந்துக்கு எதிராக அரையிறுதியில் விளையாடிய அதே வீரர்கள் இடம் பிடித்துள்ளனர். நியூசிலாந்து அணியில் ஜேக்கப் டஃபி அணியில் இடம் பிடித்துள்ளார். மெக்கோன்சி நீக்கப்பட்டுள்ளார்.

    இந்திய அணி அரையிறுதியில் இங்கிலாந்தையும், நியூசிலாந்து தென்ஆப்பிரிக்காவையும் வீழ்த்தியிருந்தன.

    போட்டி தொடங்குவதற்கு முன் இருநாட்டு தேசிய கீதம் பாடப்படும். அப்போது டி20 உலகக் கோப்பை ரசிகர்கள் பார்வைக்காக மைதானத்தின் நடுவில் வைக்கப்பட்டது. அந்த உலகக் கோப்பையை இந்திய அணியின் முன்னாள் கேப்டன்களான எம்.எஸ். தோனி மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் கொண்டு வந்தனர்.

    ரோகித் சர்மா ஐசிசி டி20 உலகக் கோப்பையின் தூதராக உள்ளார். மேலும், கடந்த முறை சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணியின் கேப்டனாகவும் இருந்துள்ளார்.

    எம்.எஸ். தோனி தலைமையில்தான் இந்திய அணி முதன்முறையாக டி20 உலகக் கோப்பையை வென்றது. மேலும், அறிமுக டி20 உலகக் கோப்பையையும் வென்றவரும் இவரே ஆவார்.

    • இந்திய அணி அரையிறுதியில் இங்கிலாந்தை வீழ்த்தியிருந்தது.
    • நியூசிலாந்து அணி தென்ஆப்பிரிக்காவை வீழ்த்தியிருந்தது.

    டி20 உலகக் கோப்பையின் இறுதிப் போட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் தொடங்கியுள்ளது. இதில் இந்தியா- நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்த போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டதில் நியூசிலாந்து கேப்டன் சான்ட்னெர் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார்.

    இந்திய அணியில் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை. இங்கிலாந்துக்கு எதிராக அரையிறுதியில் விளையாடிய அதே வீரர்கள் இடம் பிடித்துள்ளனர்.

    இந்திய அணி அரையிறுதியில் இங்கிலாந்தையும், நியூசிலாந்து தென்ஆப்பிரிக்காவையும் வீழ்த்தியிருந்தன.

    நியூசிலாந்து அணியில் ஜேக்கப் டஃபி அணியில் இடம் பிடித்துள்ளார். மெக்கோன்சி நீக்கப்பட்டுள்ளார்.

    • ரிஷப் பண்ட் ஃபார்ம் இன்றி தவித்து வருவதால் டி20 உலகக் கோப்பைக்கான அணியில் இடம் கிடைக்கவில்லை.
    • ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாட வேண்டும் என்ற முனைப்பில் பயிற்சி மேற்கொண்டு வருகிறார்.

    இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக திகழ்ந்து வருபவர் ரிஷப் பண்ட். அதிரடி வீரரான ரிஷப் பண்ட்டின் ஆட்டத்தில் சமீப காலமாக தொய்வு ஏற்பட்டது. இதனால் டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இருந்து கழற்றி விடப்பட்டார்.

    வருகிற 28-ந்தேதி ஐ.பி.எல். கிரிக்கெட் தொடங்குகிறது. ரிஷப் பண்ட் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் கேப்டனாக உள்ளார். இழந்த ஃபார்மை ஐபிஎல் மூலம் மீட்டெடுக்க தீவிர பயிற்சி மேற்கெண்டு கொண்டு வருகிறார்.

    இந்த நிலையில் இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர சுழற்பந்து வீச்சு ஆல்ரவுண்டரான யுவராஜ் சிங்கிடம், சிறப்பாக விளையாடுவதற்கான டிப்ஸை பெற்றுள்ளார். யுவராஜ் சிங்கியும் அவருக்கு பயிற்சி கொடுத்துள்ளார்.

    இந்த அணியில் விளையாடும் அபிஷேக் சர்மா, யுவராஜ் சிங்கிடம் அடிக்கடி ஆலோசனை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

    • உலகமகளிர்தினம்- ஆன இன்று, அதிர்ச்சி அளிக்கும் செய்தி வந்துள்ளது.
    • சிறுமி முதல் மூதாட்டி வரை யாருக்கும் எங்கும் பாதுகாப்பு இல்லை.

    நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை சம்பவத்திற்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து இபிஎஸ் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:-

    நாமக்கல் மாவட்டம், குமாரபாளையத்தில் தெருவில் விளையாடிக் கொண்டிருந்த 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு , உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கபட்டுள்ளதாக , #உலகமகளிர்தினம்- ஆன இன்று, அதிர்ச்சி அளிக்கும் செய்தி வந்துள்ளது.

    ஸ்டாலின் அரசின் ஒட்டுமொத்த நிர்வாகச் சீர்கேட்டால், சிறுமி முதல் மூதாட்டி வரை யாருக்கும் எங்கும் பாதுகாப்பு இல்லை.

    இப்படி ஒரு கேவலமான ஆட்சிக்கு பொறுப்பான நீங்கள், எந்த முகத்தை வைத்துக் கொண்டு மக்களிடம் இன்னொரு முறை ஆட்சி செய்ய கேட்கிறீர்கள் மு.க.ஸ்டாலின் அவர்களே?

    ஒரு 7 வயது சிறுமிக்கு தெருவில் பாதுகாப்பு இல்லாத ஆட்சிக்கு, "வெல்லும் தமிழ்ப் பெண்கள்" என்ற வெற்று விளம்பரம் ஒரு கேடா?

    குமாரபாளையம் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளி மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்கவும் ,

    அப்பச்சிளம் குழந்தைக்கு முறையான சிகிச்சை அளிக்கவும் , ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஆந்த்ரோபிக் நிறுவனத்தை பென்டகன் தனது 'சப்ளை செயின் ரிஸ்க்' பட்டியலில் சேர்த்து அதன் செயல்பாடுகளை பகுதியளவு முடக்கியுள்ளது.
    • டிரம்ப் குறித்து தான் முன்வைத்த விமர்சனங்களுக்கு மன்னிப்பு கேட்டுள்ளார்.

    ராணுவ உளவு வேலைகளுக்கு ஏஐ உடைய முழு அணுகலையும் வழங்க முடியாது என கூறி ஆந்ரோபிக் நிறுவனம் அண்மையில் அமெரிக்க பாதுகாப்புத் துறையான பென்டகனுடனான ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறியது. அதன்பின் அந்த ஒப்பந்தத்தை ஓபன் ஏஐ நிறுவனம் கைப்பற்றியது.

    இந்நிலையில் பென்டகனுடன் செய்துகொண்ட ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஓபன் ஏஐ நிறுவனத்தின் ரோபோடிக்ஸ் பிரிவு தலைவரான கைட்லின் கலினோவ்ஸ்கி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

    இவர் கடந்த 2024 நவம்பரில்தான் மெட்டா நிறுவனத்திலிருந்து விலகி ஓபன் ஏஐ இல் இணைந்தார்.

    பென்டகனின் ரகசிய நெட்வொர்க்குகளில் ஓபன் ஏஐ-இன் ஏஐ மாடல்களைப் பயன்படுத்துவதற்கான நிறுவனத்தின் முடிவில் தனக்கு உடன்பாடு இல்லை என கைட்லின் தெரிவித்துள்ளார்.

    சட்ட மேற்பார்வையின்றி அமெரிக்க குடிமக்களை ஏஐ மூலம் உளவு பார்ப்பது மற்றும் மனிதக் கட்டுப்பாடு இல்லாத தானியங்கி ஆயுதங்களில் ஏஐ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது குறித்து இன்னும் ஆழமான விவாதங்கள் தேவை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

    இந்த விவகாரம் குறித்து ஓபன் ஏஐ தரப்பு கூறுகையில், "தேசிய பாதுகாப்பிற்காக ஏஐ தொழில்நுட்பத்தை பொறுப்புணர்வுடன் பயன்படுத்துவதற்காகவே பாதுகாப்புத் துறையுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

    உள்நாட்டு உளவு வேலைகளுக்கோ அல்லது தானியங்கி ஆயுதங்கள் தயாரிப்பதற்கோ எங்களது தொழில்நுட்பம் பயன்படுத்தப்படாது.

    இது தொடர்பாக அரசு மற்றும் பொது அமைப்புகளுடன் தொடர்ந்து ஆலோசனைகள் நடத்தப்படும்" என்று தெரிவித்துள்ளது.

    இதற்கிடையே ஆந்த்ரோபிக் நிறுவனம் ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறியதால் டிரம்ப் ஆத்திரமடைந்தார்.

    எனவே ஆந்த்ரோபிக் நிறுவனத்தை பென்டகன் தனது 'சப்ளை செயின் ரிஸ்க்' பட்டியலில் சேர்த்து அதன் செயல்பாடுகளை பகுதியளவு முடக்கியுள்ளது.

    இந்தப் பட்டியலிலிருந்து விலக்கு அளிக்க வேண்டி, ஆந்த்ரோபிக் நிறுவனத்தின் சிஇஓ டாரியோ அமோடி, கடந்த காலங்களில் அதிபர் டிரம்ப் குறித்து தான் முன்வைத்த விமர்சனங்களுக்கு மன்னிப்பு கேட்டுள்ளார்.

    முன்னதாக மனிதத் தலையீடு இல்லாத ஆயுதங்கள் மற்றும் மக்கள் மீதான கண்காணிப்பு போன்றவற்றுக்குத் தங்கள் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது தார்மீக ரீதியாகவும் தொழில்நுட்ப ரீதியாகவும் சரியல்ல என்று ஆந்த்ரோபிக் சிஇஓ டாரியோ அமோடியும் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

    • பூம்புகார் நகரில் கிடைத்த செங்கற்களை ஒத்திருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.
    • கோவிலுக்கு அருகிலேயே பெரிய தீர்த்தக்குளம் இருந்தது என்றும் வரலாற்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

    திருக்காஞ்சி தலம் சங்க காலம் முதலே புகழ் பெற்றுத் திகழ்ந்தது என்பதற்குச் சங்கராபரணி ஆற்றின் இருகரைகளிலும் காணப்படும் செங்கற்களே ஆதாரமாக உள்ளன. இவை யவனர்கள் குடியிருந்த அரிக்கமேடு மற்றும் புதையுண்ட பூம்புகார் நகரில் கிடைத்த செங்கற்களை ஒத்திருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.

    மேலும் இங்கு கிடைத்த பழமையான முதுமக்கள் தாழிகளும் சிறுவர்கள் விளையாடும் சிறு பொம்மைகளும் பெரிய கட்டிடங்களின் சிதைவுற்ற அடித்தளங்களும் இப்பகுதியின் பழமையையும் சங்க காலத் தொடர்பையும் உறுதிப்படுத்துகின்றன. கி.பி. 6-ம் நூற்றாண்டிற்குப் பிறகு ஆழ்வார்களாலும் நாயன்மார்களாலும் இந்து சமயத்தில் மிகப்பெரிய மறுமலர்ச்சி ஏற்பட்டதால் சோழ மன்னர்களின் காலத்தில் திருக்காஞ்சி தலத்திற்கு பல திருப்பணிகள் செய்யப்பட்டுள்ளன.

    திருக்காஞ்சி திருத்தலம் ஊழிக்கால வெள்ளத்தில் பாதிக்கப்படுவதற்கு முன்பாக மூலவர் அருள்பாலித்த கருவறை தஞ்சைப் பெரிய கோவில், கங்கை கொண்ட சோழபுரம் கோவில் மற்றும் திருவதிகை கோவில் ஆகிய கோவில்களின் கருவறையை ஒத்திருந்துள்ளது. நாற்புறமும் மிகப்பெரிய மதில்களால் சூழப்பட்டிருந்தது என்றும் கோவிலுக்கு அருகிலேயே பெரிய தீர்த்தக்குளம் இருந்தது என்றும் வரலாற்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

    மேலும் தற்போது அமைந்துள்ள காமாட்சி அம்பிகையின் கோவில் கருவறை, அர்த்தமண்டபம், மகாமண்டபம், முக மண்டபம் என தனிச் சந்நிதியாக அமைந்திருந்தது என்றும் இக்கோவில் "திருக்காமகோட்ட நாச்சியார் கோவில்" என்று அழைக்கப்பட்டதாகவும் தெரிவிக்கின்றனர்.

    இத்தலத்திலிருந்த ஆயிரங்கால் மண்டபமும் ஆற்று வெள்ளத்தால் சிதைக்கப்பட்டுவிட்டது. கோவிலின் புனித தீர்த்தம் முதலாம் குலோத்துங்க சோழனால் செப்பனிடப்பட்டது என்பதை இக்கோவிலின் சிதைந்த கல்வெட்டுகள் உறுதிப்படுத்துகின்றன.

    • 26 வயதாகும் பிரித்வி ஷா, 2018-ம் ஆண்டு தனது 18 வயதிலேயே இந்திய அணியில் இடம் பிடித்தார்.
    • இந்திய அணிக்காக 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 339 ரன்கள் அடித்துள்ளார்.

    இந்திய கிரிக்கெட் அணிக்காக விளையாடியவர்களில் ஒருவர் பிரித்வி ஷா. தற்போது 26 வயதாகும் பிரித்வி ஷா, 2018-ம் ஆண்டு தனது இளம் வயதிலேயே இந்திய அணியில் அறிமுகம் ஆனார்.

    வலது கை தொடக்க வீரரான இவர் நீண்ட காலமாக இந்திய அணியில் நட்சத்திர வீரராக ஜொலிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி 2021-ம் ஆண்டுக்குப் பிறகு இந்திய அணியில் இடம் கிடைக்கவில்லை.

    முதல் தர போட்டிகள் மற்றும் ஐபிஎல் கிரிக்கெட்டில் விளையாடி வருகிறார். இந்த நிலையில் அவருடைய நிச்சயதார்த்த படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். அக்ரிதி அகர்வாலுடன் நிச்சயதார்த்தம் முடிவடைந்துள்ள நிலையில் படத்தை பகிர்ந்துள்ளார். அத்துடன் "மைதானத்தில் சிக்சர்கள் முதல் வாழ்நாள் முழுவதும் ஹிட்ஸ் வரை. அவள்தான் என்னுடைய Perfect இன்னிங்ஸ்!? #justengaged" எனக் குறிப்பிட்டுள்ளார்.

    இந்திய அணிக்காக 5 டெஸ்ட் போட்டிகளில் 9 இன்னிங்சில் பேட்டிங் செய்து 339 ரன்கள் சேர்த்துள்ளார். இதில் 1 சதம், 2 அரைசதங்கள் அடங்கும். சராசரி 42.37 வைத்துள்ளார்.

    ஆறு 50 ஓவர் மற்றும் ஒரேயோரு டி20 போட்டியில் விளையாடியுள்ளார். ஒருநாள் போட்டியில் 189 ரன்களும், டி20-யில் முதல் பந்திலேயே அவுட்டும் ஆகியுள்ளார்.

    ஐ.பி.எல். கிரிக்கெட்டில் டெல்லி அணி அவரை 75 லட்சம் ரூபாய்க்கு ஏலம் எடுத்துள்ளது. முதலில் அவர் ஏலம் போகவில்லை. பின்னர் பேட்டிங் லைன்-அப்பை வலுப்படுத்த டேல்லி கேப்பிட்டல்ஸ் அவரை வாங்கியுள்ளது.

    இவரது தலைமையில் இந்திய இளையோர் அணி உலகக் கோப்பை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இவரது தலைமையில் சுப்மன் கில் விளையாடியது குறிப்பிடத்தக்கது.

    • தீப்பற்றி எரியும் எண்ணெய் கிடங்கில் இருநு்து அதிகளவில் கரும்புகை வெளியாகிறது.
    • அமில மழை பெய்து பெரும் ஆபத்தை உருவாக்க வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை.

    ஈரான் தலைநகர் தெஹ்ரானில் இஸ்ரேலின் வான்வழி தாக்குதல் நடத்தியதில் எரிபொருள் கிடங்கு தீப்பற்றி எரிகிறது.

    ஈரான் தலைநகர் தெஹ்ரானில் தீப்பற்றி எரியும் எண்ணெய் கிடங்கில் இருநு்து அதிகளவில் கரும்புகை வெளியாகிறது.

    இதனால், ஈரான் தலைநகர் தெஹ்ரானில் அமில மழை பெய்து பெரும் ஆபத்தை உருவாக்க வாய்ப்புள்ளதாக அந்நாட்டு அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

    இஸ்ரேல் தாக்குதலில் எண்ணெய் கிடங்கு தீப்பிடித்ததால் காற்றில் அதிகளவு கரும்புகை கலந்ததால் ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    • விடுதியில் சக மாணவர்களுடன் சிறுவனுக்கு சிறிய விஷயத்தால் தகராறு ஏற்பட்டுள்ளது.
    • விடுதி வார்டனையும் தாக்கிவிட்டு சிறுவன் அங்கிருந்து தப்பியோடிவிட்டான்.

    கர்நாடக மாநிலம் பெல்லாரி மாவட்டத்தில் குருகல் இன்டர்நேஷனல் என்ற தனியார் பள்ளி இயங்கி வருகிறது.

    இந்த பள்ளியின் விடுதியில் தங்கி சிறுவன் ஒருவன் 9 வகுப்பு படித்து வந்தான். விடுதியில் சக மாணவர்களுடன் சிறுவனுக்கு சிறிய விஷயத்தால் தகராறு ஏற்பட்டுள்ளது.

    இதனால் ஆத்திரமடைந்த சிறுவன், இரவில் சக மாணவர்கள் தங்கள் அறைகளில் அனைவரும் உறங்கிக் கொண்டிருந்தபோது இரும்புக் கம்பியுடன் சென்று அவர்களை சரமாரியாக தங்கியுள்ளான்.

    இதில் 8 மாணவர்கள் படுகாயமடைந்தனர். விடுதி வார்டனையும் தாக்கிவிட்டு சிறுவன் அங்கிருந்து தப்பியோடிவிட்டான். 

    பள்ளி நிர்வாகம் அந்த மாணவர் இரும்புத் கம்பியை பயன்படுத்தியதாகக் கூறுகிறது. ஆனால், பாதிக்கப்பட்டவர்களின் பெற்றோர், அவர்கள் கத்தியால் குத்தப்பட்டதாகக் குற்றம் சாட்டியுள்ளனர்.

    இத்தாக்குதலில் படுகாயமடைந்த ஒரு மாணவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். காயமடைந்த மற்ற ஏழு மாணவர்கள் பெல்லாரியில் உள்ள விம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.

    தப்பியோடிய மாணவனை தேடும் பணியில் காவல்துறை தீவிரமாக தேடி வருகிறது.   

    • இந்தியா- நியூசிலாந்து மோதும் இறுதிப் போட்டி 7 மணிக்கு தொடங்குகிறது.
    • மதியம் 1 மணியில் இருந்தே ரசிகர்கள் குவியத் தொடங்கியுள்ளனர்.

    இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்று வரும் டி20 உலகக் கோப்பை இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இந்தியா- நியூசிலாந்து மோதும் இறுதிப் போட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இன்று இரவு 7 மணிக்கு நடக்கிறது.

    சொந்த மைதானத்தில் என்பதால் இந்தியாவுக்கு வாய்ப்பு அதிகம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே நியூசிலாந்தும் நல்ல போட்டி கொடுக்க தயாராக உள்ளது. இதனால் போட்டி மிகவும் சுவாரஸ்சியமாகவும், விறுவிறுப்பாகவும், பரபரப்பாகவும் இருக்கும்.

    இந்த மைதானத்தில் 90 ஆயிரம் ரசிகர்களுக்கு மேல் அமர்ந்து போட்டியை நேரில் கண்டு ரசிக்கலாம். இப்போட்டியை காண டிக்கெட் முன்பதிவு செய்திருந்த ரசிகர்கள் மைதானத்திற்கு வரத் தொடங்கியுள்ளனர். மதியம் 1 மணியில் இருந்து அவர்கள் ஸ்டேடியம் முன் குவியத் தொடங்கியுள்ளனர்.

    ×