என் மலர்tooltip icon
    • பெரிய கல்லை தன்னுடைய கால் மீது போட்டு காவலர்கள் காலை உடைத்து விட்டதாக தெரிவித்துள்ளார்.
    • காவல்துறையில் இது போன்ற அத்துமீறிய அராஜகமான நடவடிக்கைகள் தொடர்கிறது.

    மானாமதுரை லாக்கப் படுகொலை சம்பவத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும், காவலர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்திடவும் வலியுறுத்தல் செய்யப்பட்டுள்ளது.

    இதுகுறித்து சிபிஎம் மாநில செயலாளர் பெ. சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை கிருஷ்ணராஜபுரத்தைச் சார்ந்த கண்ணன் மகன் ஆகாஷ் (26) என்கிற பட்டியல் சமூகத்தை சேர்ந்தவரும் அவரது நண்பர்கள் குணா, அலெக்ஸ், சரவணன் முகேஷ் கண்ணன் ஆகியோர்களுக்கும் ரயில்வே காலணியைச் சேர்ந்த ஜெயக்குமார் ஆதனூரைச் சேர்ந்த ஆழகர் ஆகியோர்களுக்கும் 5.3.2026 அன்று மாலையில் கிருஷ்ணராஜபுரத்தில் தகராறு நடந்துள்ளது.

    அன்று இரவு மானாமதுரை சியோன்நகர் அருகில் மேற்படி ஜெய்குமார் மற்றும் ஆழகர் ஆகியோர் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது கிருஷ்ணராஜபுரத்தைச் சேர்ந்த மேற்படி ஐந்து பேரும் கத்தி போன்ற ஆயுதத்தை வைத்து தாக்கியுள்ளனர்.

    இதில் காயமடைந்த ஜெய்குமார், ஆழகர் இருவரும் மானாமதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இந்நிலையில் 6.3.2026 பிற்பகல் 12 மணி அளவில் ஆகாஷ் மற்றும் நான்கு பேரையும் காவல்துறை கைது செய்துள்ளது. இவர்களை காவல்துறையினர் எங்கு வைத்துள்ளனர் என்ற விபரம் பெற்றோர்களுக்கு தெரிவிக்கப்படவில்லை.

    திடீரென 7.3.26 அன்று இரவு ஆகாஷ் பெற்றோர்களைத் தொடர்பு கொண்ட காவல்துறையினர் ஆகாஷ் மதுரை அரசு இராஜாஜி மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக கூறியுள்ளனர்.

    பதறியடித்து பெற்றோர்கள் மதுரை ராஜாஜி மருத்துவமனையில் ஆகாசை பார்த்து உள்ளனர். அப்போது ஆகாசினுடைய கால் முறிக்கப்பட்டு இருந்தது. இது தொடர்பாக ஆகாஷ் தன்னுடைய பெற்றோர்களிடம் பெரிய கல்லை தன்னுடைய கால் மீது போட்டு காவலர்கள் காலை உடைத்து விட்டதாக தெரிவித்துள்ளார்.

    மகனுக்கு ஆறுதல் தெரிவித்து விட்டு உணவு தயார் செய்து வருவதற்காக பெற்றோர்கள் வீடு திரும்பி இருக்கின்றனர். ஆனால் 8.3.26 அன்று காலையில் பெற்றோர்களுக்கு ஆகாஷ் இறந்து விட்டதாக காவல்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.

    மேலும் அவரோடு கைது செய்யப்பட்ட நான்கு பேரையும் இராமநாதபுரம் சிறையில் அடைத்திருப்பதாக காவலர்கள் தெரிவித்துள்ளனர்.

    இந்த கொடூரமான லாக்கப் படுகொலையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிக்கிறது. ஆகாஷ் படுகொலை செய்யப்படுவதற்கு முன்னால் அவர் மிக கடுமையான சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டு இருக்கிறார் என்பது அவர் கால் உடைந்ததிலிருந்து தெரிய வருகிறது. காவல்துறையில் இது போன்ற அத்துமீறிய அராஜகமான நடவடிக்கைகள் தொடர்கிறது.

    மனித உரிமைக்கு எதிரான இந்த கொடூரச் குற்றச்செயலில் ஈடுபட்ட அப்போது நிலையத்தில் பணியில் இருந்த அனைத்து காவலர்துறையினர் மீதும் உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.

    குற்றம் இழைத்த காவல்துறையினர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு அவர்கள் கைது செய்யப்பட வேண்டும் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக் கொள்கிறது. அதேபோல் உயிரிழந்திருக்கிற ஆகாஷ் குடும்பத்தினருக்கு வன்கொடுமைகள் தடுப்பு சட்டத்தின் கீழ் கிடைக்க வேண்டிய அரசு வேலை உள்ளிட்ட அனைத்து விதமான தீருதவிகளையும் அரசு வழங்கிட வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஷிவம் துபே கடைசி ஓவரில் 2 சிக்ஸ், 3 பவுண்டரிகள் விளாசினார்.
    • 16 முதல் 19 ஓவர் வரை இந்தியா 27 ரன்கள் மட்டுமே கிடைத்தன.

    இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான டி20 உலகக் கோப்பையின் இறுதிப் போட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்று வருகின்றன. டாஸ் வென்ற நியூசிலாந்து கேப்டன் சான்ட்னெர் பந்து வீச்சை தேர்வு செய்தார். இந்திய அணியில் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை. நியூசிலாந்து அணியில் மெக்கோன்சி நீக்கப்பட்டு டஃபி சேர்க்கப்பட்டார்.

    தொடக்க வீரர்களாக களம் இறங்கிய அபிஷேக் சர்மா மற்றும் சஞ்சு சாம்சன் ஆகியோர் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அபிஷேக் சர்மா 18 பந்தில் அரைசதம் அடித்தார். அவர் 21 பந்தில் 6 பவுண்டரி, 3 சிக்சருடன் 52 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 7.1 ஓவரில் 98 ரன்கள் குவித்தது.

    அடுத்து சஞ்சு சாம்சன் உடன் இஷான் கிஷன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடியும் அபாரமாக விளையாடியது, இதனால் இந்தியா 7.2 ஓவரில் 100 ரன்களைத் தொட்டது.

    சஞ்சு சாம்சன் சிறப்பாக விளையாடி 33 பந்தில் 4 பவுண்டரி, 3 சிக்சருடன் அரைசதம் அடித்தார். தொடர்ந்து சஞ்சு சாம்சன் வாணவேடிக்கை நிகழ்த்தினார். இந்தியா 11.3 ஓவரில் 150 ரன்களைத் தொட்டது.

    ரச்சின் ரவீந்திரா வீசிய 14-வது ஓவரில் சஞ்சு சாம்சன் தொடர்ந்து 3 சிக்சர்கள் பறக்கவிட்டார். மறுமுனையில் சஞ்சு சாம்சன் 23 பந்தில் 3 பவுண்டரி, 4 சிக்சருடன் அரைசதம் அடித்தார்.

    இந்தியா 15 ஓவரில் 204 ரன்களைத் தொட்டது. இந்தியா 300 ரன்களைத் தொடும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

    16-வது ஓவரை நீஷம் வீசினார். இந்த ஓவரில் இந்தியாவுக்கு மிகப்பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. முதல் பந்தில் சஞ்சு சாம்சன் ஆட்டமிழந்தார். அவர் 46 பந்தில் 5 பவுண்டரி, 8 சிக்சருடன் 89 ரன்கள் குவித்தார். 5-வது பந்தில் இஷான் கிஷன் 25 பந்தில் 4 பவுண்டரி, 4 சிக்சருடன் 54 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். அடுத்து வந்த கேப்டன் சூர்யகுமார் யாதவ் கடைசி பந்தில், தான் சந்தித்த முதல் பந்திலேயே வெளியேறினார். இந்த ஓவரில் 3 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார். அடுத்து ஹர்திக் பாண்ட்யா உடன் திலக் வர்மா ஜோடி சேர்ந்தார்.

    அடுத்த ஓவரை டஃபி வீசினார். திலக் வர்மா கொடுத்த கேட்சை ஃபின் ஆலன் பிடிக்க தவறினார். பிடித்திருந்தால் திலக் வர்மா முதல் பந்திலேயே ஆட்டமிழந்திருப்பார்.

    19-வது ஓவரை ஹென்றி வீசினார். முதல் பந்தை சிக்சருக்கு தூக்கிய ஹர்திக் பாண்ட்யா, அடுத்த பந்தில் ஆட்டமிழந்தார். அவர் 13 பந்தில் 18 ரன்கள் எடுத்தார். அப்போது இந்தியா 5 விக்கெட் இழப்பிற்கு 226 ரன்கள் எடுத்திருந்தது.

    6-வது விக்கெட்டுக்கு திலக் வர்மா உடன் ஷிவம் துபே ஜோடி சேர்ந்தார். இந்தியா 16 முதல் 19 ஓவர் வரை 4 ஓவரில் 27 ரன்கள் மட்டுமே அடித்தது.

    கடைசி ஓவரை நீஷம் வீசினார். இந்த ஓவரின் முதல் பந்தை பவுண்டரிக்கு விரட்டிய துபே, அடுத்த 2 பந்துகளையும் சிக்சருக்கு தூக்கினார். 4-வது பந்தில் பவுண்டரி அடித்தார். அடுத்த பந்தில் ரன்ஏதும் அடிக்கவில்லை. கடைசி பந்தையும் பவுண்டரிக்கு விரட்ட இந்தியாவுக்கு இந்த ஓவரில் 24 ரன்கள் கிடைத்தன.

    இதனால் இந்தியா 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 255 ரன்கள் குவித்துள்ளது. ஷிவம் துபே 8 பந்தில் 26 ரன்களும், திலக் வர்மா 8 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

    • 16-வது ஓவரில் நீஷம் சஞ்சு சாம்சன், இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ் ஆகியோரை வீழ்த்தினார்.
    • 3 ரன்கள் மட்டுமே கொடுத்து திருப்புமுனை ஏற்படுத்தினார்.

    இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான டி20 உலகக் கோப்பையின் இறுதிப் போட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்று வருகின்றன. டாஸ் வென்ற நியூசிலாந்து கேப்டன் சான்ட்னெர் பந்து வீச்சை தேர்வு செய்தார். இந்திய அணியில் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை. நியூசிலாந்து அணியில் மெக்கோன்சி நீக்கப்பட்டு டஃபி சேர்க்கப்பட்டார்.

    தொடக்க வீரர்களாக களம் இறங்கிய அபிஷேக் சர்மா மற்றும் சஞ்சு சாம்சன் ஆகியோர் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அபிஷேக் சர்மா 18 பந்தில் அரைசதம் அடித்தார். அவர் 21 பந்தில் 6 பவுண்டரி, 3 சிக்சருடன் 52 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 7.1 ஓவரில் 98 ரன்கள் குவித்தது.

    அடுத்து சஞ்சு சாம்சன் உடன் இஷான் கிஷன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடியும் அபாரமாக விளையாடியது, இதனால் இந்தியா 7.2 ஓவரில் 100 ரன்களைத் தொட்டது.

    சஞ்சு சாம்சன் சிறப்பாக விளையாடி 33 பந்தில் 4 பவுண்டரி, 3 சிக்சருடன் அரைசதம் அடித்தார். தொடர்ந்து சஞ்சு சாம்சன் வாணவேடிக்கை நிகழ்த்தினார். இந்தியா 11.3 ஓவரில் 150 ரன்களைத் தொட்டது.

    ரச்சின் ரவீந்திரா வீசிய 14-வது ஓவரில் சஞ்சு சாம்சன் தொடர்ந்து 3 சிக்சர்கள் பறக்கவிட்டார். மறுமுனையில் சஞ்சு சாம்சன் 23 பந்தில் 3 பவுண்டரி, 4 சிக்சருடன் அரைசதம் அடித்தார்.

    இந்தியா 15 ஓவரில் 203 ரன்களைத் தொட்டது. இந்தியா 300 ரன்களைத் தொடும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

    16-வது ஓவரை நீஷம் வீசினார். இந்த ஓவரில் இந்தியாவுக்கு மிகப்பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. முதல் பந்தில் சஞ்சு சாம்சன் ஆட்டமிழந்தார். அவர் 46 பந்தில் 5 பவுண்டரி, 8 சிக்சருடன் 89 ரன்கள் குவித்தார். 5-வது பந்தில் இஷான் கிஷன் 25 பந்தில் 4 பவுண்டரி, 4 சிக்சருடன் 54 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். அடுத்து வந்த கேப்டன் சூர்யகுமார் யாதவ் கடைசி பந்தில், தான் சந்தித்த முதல் பந்திலேயே வெளியேறினார். இந்த ஓவரில் 3 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார்.

    அடுத்த ஓவரை டஃபி வீசினார். திலக் வர்மா கொடுத்த கேட்சை ஃபின் ஆலன் பிடிக்க தவறினார். பிடித்திருந்தால் திலக் வர்மா முதல் பந்திலேயே ஆட்டமிழந்திருப்பார்.

    • அபிஷேக் சர்மா மற்றும் சஞ்சு சாம்சன் ஆகியோர் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
    • 14-வது ஓவரில் சஞ்சு சாம்சன் தொடர்ந்து 3 சிக்சர்கள் பறக்கவிட்டார்.

    இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான டி20 உலகக் கோப்பையின் இறுதிப் போட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்று வருகின்றன.

    டாஸ் வென்ற நியூசிலாந்து கேப்டன் சான்ட்னெர் பந்து வீச்சை தேர்வு செய்தார். இந்திய அணியில் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை. நியூசிலாந்து அணியில் மெக்கோன்சி நீக்கப்பட்டு டஃபி சேர்க்கப்பட்டார்.

    தொடக்க வீரர்களாக களம் இறங்கிய அபிஷேக் சர்மா மற்றும் சஞ்சு சாம்சன் ஆகியோர் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

    அடுத்து சஞ்சு சாம்சன் உடன் இஷான் கிஷன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடியும் அபாரமாக விளையாடியது, இதனால் இந்தியா 7.2 ஓவரில் 100 ரன்களைத் தொட்டது.

    சஞ்சு சாம்சன் சிறப்பாக விளையாடி 33 பந்தில் 4 பவுண்டரி, 3 சிக்சருடன் அரைசதம் அடித்தார். தொடர்ந்து சஞ்சு சாம்சன் வாணவேடிக்கை நிகழ்த்தினார். இந்தியா 11.3 ஓவரில் 150 ரன்களைத் தொட்டது.

    ரச்சின் ரவீந்திரா வீசிய 14-வது ஓவரில் சஞ்சு சாம்சன் தொடர்ந்து 3 சிக்சர்கள் பறக்கவிட்டார். மறுமுனையில் சஞ்சு சாம்சன் 23 பந்தில் 3 பவுண்டரி, 4 சிக்சருடன் அரைசதம் அடித்தார். இந்தியா 15 ஓவரில் 203 ரன்களைத் தொட்டது.

    இந்நிலையில், ரசிகர்கள் டி20 உலக கோப்பையின் இறுதிப்போட்டியை காணும் வகையில், மெரினா கடற்கரையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இறுதிப் போட்டி ஒளிபரப்பை ஏராளமான ரசிகர்கள் ரசித்து வருகின்றனர்.

    • 33 பந்தில் அரைசதம் அடித்த சஞ்சு சாம்சன் 89 ரன்களில் ஆட்டமிழந்தார்.
    • இஷான் கிஷன் 23 பந்தில் அரைசதம் அடித்தார்.

    இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான டி20 உலகக் கோப்பையின் இறுதிப் போட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்று வருகின்றன. டாஸ் வென்ற நியூசிலாந்து கேப்டன் சான்ட்னெர் பந்து வீச்சை தேர்வு செய்தார். இந்திய அணியில் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை. நியூசிலாந்து அணியில் மெக்கோன்சி நீக்கப்பட்டு டஃபி சேர்க்கப்பட்டார்.

    தொடக்க வீரர்களாக களம் இறங்கிய அபிஷேக் சர்மா மற்றும் சஞ்சு சாம்சன் ஆகியோர் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அபிஷேக் சர்மா 18 பந்தில் அரைசதம் அடித்தார். அவர் 21 பந்தில் 6 பவுண்டரி, 3 சிக்சருடன் 52 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 7.1 ஓவரில் 98 ரன்கள் குவித்தது.

    அடுத்து சஞ்சு சாம்சன் உடன் இஷான் கிஷன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடியும் அபாரமாக விளையாடியது, இதனால் இந்தியா 7.2 ஓவரில் 100 ரன்களைத் தொட்டது.

    சஞ்சு சாம்சன் சிறப்பாக விளையாடி 33 பந்தில் 4 பவுண்டரி, 3 சிக்சருடன் அரைசதம் அடித்தார். தொடர்ந்து சஞ்சு சாம்சன் வாணவேடிக்கை நிகழ்த்தினார். இந்தியா 11.3 ஓவரில் 150 ரன்களைத் தொட்டது.

    ரச்சின் ரவீந்திரா வீசிய 14-வது ஓவரில் சஞ்சு சாம்சன் தொடர்ந்து 3 சிக்சர்கள் பறக்கவிட்டார். மறுமுனையில் சஞ்சு சாம்சன் 23 பந்தில் 3 பவுண்டரி, 4 சிக்சருடன் அரைசதம் அடித்தார்.

    இந்தியா 15 ஓவரில் 203 ரன்களைத் தொட்டது. 16-வது ஓவரை நீஷம் வீசினார். இந்த ஓவரின் முதல் பந்தில் சஞ்சு சாம்சன் ஆட்டமிழந்தார். அவர் 46 பந்தில் 5 பவுண்டரி, 8 சிக்சருடன் 89 ரன்கள் குவித்தார்.  5 -வது பந்தில் இஷான் கிஷன் ஆட்டமிழந்தார். அவர் 25 பந்தில் 54 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

    • அப்பா”-வின் ஆட்சியில் பாலியல் இச்சைக்கு பலியான அடுத்த குழந்தை.
    • மன அழுத்தத்திலும் தவித்துக் கொண்டிருப்பது தான் “நாடு போற்றும் நல்லாட்சி”யின் லட்சணமா?

    திமுக ஆட்சியில் பாலியல் வேட்டையாடப்பட்ட பெண் பிள்ளைகள் என தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து நயினார் நாகேந்திரன் எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது:-

    "அப்பா"-வின் ஆட்சியில் பாலியல் இச்சைக்கு பலியான அடுத்த குழந்தை!

    நாமக்கல் மாவட்டம் அருகேயுள்ள குமாரபாளையம் பகுதியில், வீட்டிற்கு அருகில் விளையாடிக் கொண்டிருந்த 7 வயது சிறுமியை கடத்தி இளைஞன் ஒருவன் பாலியல் வன்கொடுமை செய்துள்ள சம்பவம் பதை பதைக்க வைக்கின்றது.

    ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பாதிக்கப்பட்ட சிறுமி முழு மன மற்றும் உடல் ஆரோக்கியத்துடன் விரைவில் குணமடைய நாம் அனைவரும் உறுதுணையாக நிற்போம்.

    சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கும் திமுக வின் அவல ஆட்சியில், பொதுமக்கள் நடமாட்டம் நிறைந்த பகுதியில் வீட்டருகே விளையாடிக் கொண்டிருந்த பெண் குழந்தையைக் கடத்தி பாலியல் வன்கொடுமை செய்யுமளவிற்கு குற்றவாளிக்குத் துணிச்சல் மிகுந்துள்ளது வெட்கக்கேடானது.

    தம்மை நம்பி வாக்களித்த பெண்களையும், அவர்களின் குழந்தைகளையும் பாதுகாக்கத் தவறிய முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், இனி எந்த முகத்தை வைத்துக் கொண்டு தமிழகப் பெண்களை எதிர்கொள்வார்? திமுகவின் கேடுகெட்ட நிர்வாகத்தால் பெண் பிள்ளைகளைப் பெற்றவர்கள் ஒவ்வொரு நாளும் அதீத அச்சத்திலும், மன அழுத்தத்திலும் தவித்துக் கொண்டிருப்பது தான் "நாடு போற்றும் நல்லாட்சி"யின் லட்சணமா?

    திமுக ஆட்சியில் பாலியல் வேட்டையாடப்பட்ட பெண் பிள்ளைகளின் உளக் காயங்களை "வெல்லும் தமிழ்ப் பெண்கள்" என்ற விளம்பர விழா மூலம் மூடி மறைத்து விட முடியுமா? திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் அரசியல்வாதியாக அல்லாமல் உண்மையிலேயே "ஒரு அப்பா" ஸ்தானத்தில் இருந்து யோசித்துப் பார்த்தால், "திராவிட மாடல்" போன்றதொரு பெண்கள் விரோத அரசை அவர் மன்னிப்பாரா?

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அதிமுகவில் சாதாரண தொண்டனும் முதலமைச்சர் ஆகலாம்.
    • திமுகவில் உள்ள தொண்டர்கள் உயர்ந்த பதவி, ஆட்சி அதிகாரத்திற்கு வர முடியாது.

    ஈரோடு பெருந்துறையில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தொண்டர்கள் மத்தியில் பேசியதாவது:-

    எவராலும் அதிமுகவை விழுங்கவோ, அழிக்கவோ முடியாது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

    சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபித்தபோது அதிமுகவிற்கு எதிராக வாக்களித்தவர் ஓபிஎஸ்.

    அதிமுகவை வீழ்க்க பார்த்த ஓபிஎஸ் வீழ்ந்து விட்டார். திமுக உடன் சேர்ந்து அதிமுக அரசை கவிழ்க்க பார்க்க ஓ.பன்னீர்செல்வம் வீழ்ந்துவிட்டார்.

    எம்ஜிஆர் அழிக்க நினைத்த கட்சியில் ஓ.பன்னீர்செல்வம் அடைக்கலம் புகுந்துள்ளார்.

    ஓ.பன்னீசெல்வம் சென்ற இடம் ஆமை புகுந்த வீடு போல மாறிவிடும்.

    அதிமுக அரசுக்கு இடையூறாக இருந்த ஓ.பன்னீர்செல்வத்தை ஜெயலலிதா ஆன்மா விரட்டிவிட்டது.

    அதிமுகவில் சாதாரண தொண்டனும் முதலமைச்சர் ஆகலாம்.

    திமுகவில் உள்ள தொண்டர்கள் உயர்ந்த பதவி, ஆட்சி அதிகாரத்திற்கு வர முடியாது.

    திமுகவுக்காக உதயநிதி ஸ்டாலின் உழைத்தாரா? சிறைக்கு சென்றாரா?

    திமுகவில் உதயநிதிக்கு மட்டும் துணை முதலமைச்சர் பதவி கொடுக்கப்பட்டுள்ளது.

    திமுக ஆட்சியில் இருக்கும் வரை மக்களுக்கு நல்லது நடக்காது. துன்பம் தான் கிடைக்கும்.

    தமிழகத்தில் கஞ்சா, போதை ஆசாமிகளால் முதியவர்கள், பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் போதை நடமாட்டம் முழுவதுமாக தடுத்து நிறுத்தப்படும். திமுக ஆட்சியில் சிறுமிகள், பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை.

    உலக மகளிர் தினத்தன்று கூட நாமக்கல்லில் சிறுமி பாலியல் வன்கொடுமை என செய்தி வந்துள்ளது.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • சஞ்சு சாம்சன் 17 பந்தில் 33 ரன்கள்.
    • அபிஷேக் சர்மா 19 பந்தில் 51 ரன்கள்.

    இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான டி20 உலகக் கோப்பையின் இறுதிப் போட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்று வருகின்றன. டாஸ் வென்ற நியூசிலாந்து கேப்டன் சான்ட்னெர் பந்து வீச்சை தேர்வு செய்தார். இந்திய அணியில் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை. நியூசிலாந்து அணியில் மெக்கோன்சி நீக்கப்பட்டு டஃபி சேர்க்கப்பட்டார்.

    சஞ்சு சாம்சன் மற்றும் அபிஷேக் சர்மா ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார். முதல் ஓவரை டஃபி வீசினார். சஞ்சு சாம்சன் முதல் 4 பந்துகளில் ரன்ஏதும் எடுக்கவில்லை. 5-வது பந்தை சிக்சருக்கு தூக்கினார். கடைசி பந்தில ஒரு ரன் எடுத்தார். இதனால் இந்தியாவுக்கு முதல் ஓவரில் 7 ரன்கள் கிடைத்தன.

    2-வது ஓவரை பிளிப்ஸ் வீசினார். இந்த ஓவரில் அபிஷேக் சர்மா கவனமாக விளையாடினார். இந்த ஓவரில் பவுண்டரி அல்லது சிக்சர் கிடைக்கவில்லை. இதனால் 5 ரன்கள் மட்டுமே கிடைத்தன.

    3-வது ஓவரை டஃபி வீசினார். இந்த ஓவரில் அபிஷேக் சர்மா 2 பவுண்டரியும், சஞ்சு சாம்சன் ஒரு பவுண்டரியும் அடித்தனர். இதனால் இந்தியாவுக்கு 15 ரன்கள் கிடைத்தன.

    4-வது ஓவரை பெர்குசன் வீசினார். முதல் பந்தை பவுண்டரிக்கு விரட்டிய அபிஷேக் சர்மா, அடுத்த பந்தை சிக்சருக்கு தூக்கினார். 4-வது பந்தை சஞ்சு சாம்சன் சிக்சருக்கு தூக்கினார். ஆஃப்சைடு அடிக்க முயன்ற பந்து எட்ஜ் ஆகி லெக்சைடு சிக்சருக்கு பறந்தது. கடைசி பந்தை சாம்சன் பவுண்டரிக்க விரட்டினார். இந்த ஓவரில் இந்தியாவுக்கு 24 ரன்கள் கிடைத்தன. இதனால் 4 ஓவர் முடிவில் விக்கெட் இழப்பின்றி 51 ரன்கள் குவித்தது.

    5-வது ஓவரை ஹென்றி வீசினார். இந்த ஓவரில் 4 வைடு வீசினார். அபிஷேக் மற்றும் சஞ்சு தலா ஒரு சிக்ஸ் அடித்தனர். இதனால் 21 ரன்கள் கிடைத்தன. 5 ஓவரில் இந்தியா 72 ரன்கள் குவித்தது.

    6-வது ஓவரை டஃபி வீசினார். முதல் பந்தை பவுண்டரிக்கு விரட்டிய அபிஷேக் சர்மா, அடுத்த பந்தை சிக்சருக்கு தூக்கினார். அடுத்த பந்தை தூக்கி அடித்தார். பந்து வானத்தை நோக்கி சென்றது. ஆனால் பீல்டரால் அதை பிடிக்க முடியவில்லை. அடுத்த பந்தையும் அதேபோல் அடித்தார். பீல்டர் பிடிக்கவில்லை. 5-வது பந்தை பவுண்டரிக்கு விரட்டி 18 பந்தில் அரைசதம் விளாசினார். கடைசி பந்தில் ரன்ஏதும் எடுக்கவில்லை.

    இந்தியா பவர்பிளேயான முதல் 6 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 92 ரன்கள் குவித்தது. இந்த உலகக் கோப்பையில் பவர்பிளேயில் அதிகப்படியான ஸ்கோர் இதுவாகும். சஞ்சு சாம்சன் 17 பந்தில் 33 ரன்களுடனும், அபிஷேக் சர்மா 19 பந்தில் 51 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

    • 6 பவுண்டரி, 3 சிக்சர்கள் மூலம் அரைசதம் அடித்தார்.
    • இந்த உலகக் கோப்பையில் அவரின் 2-வது அரைசதம் இதுவாகும்.

    இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான டி20 உலகக் கோப்பையின் இறுதிப் போட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்று வருகின்றன. டாஸ் வென்ற நியூசிலாந்து கேப்டன் சான்ட்னெர் பந்து வீச்சை தேர்வு செய்தார். இந்திய அணியில் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை. நியூசிலாந்து அணியில் மெக்கோன்சி நீக்கப்பட்டு டஃபி சேர்க்கப்பட்டார்.

    சஞ்சு சாம்சன் மற்றும் அபிஷேக் சர்மா ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார். முதல் ஓவரை டஃபி வீசினார். சஞ்சு சாம்சன் முதல் 4 பந்துகளில் ரன்ஏதும் எடுக்கவில்லை. 5-வது பந்தை சிக்சருக்கு தூக்கினார். கடைசி பந்தில ஒரு ரன் எடுத்தார். இதனால் இந்தியாவுக்கு முதல் ஓவரில் 7 ரன்கள் கிடைத்தன.

    2-வது ஓவரை பிளிப்ஸ் வீசினார். இந்த ஓவரில் அபிஷேக் சர்மா கவனமாக விளையாடினார். இந்த ஓவரில் பவுண்டரி அல்லது சிக்சர் கிடைக்கவில்லை. இதனால் 5 ரன்கள் மட்டுமே கிடைத்தன.

    3-வது ஓவரை டஃபி வீசினார். இந்த ஓவரில் அபிஷேக் சர்மா 2 பவுண்டரியும், சஞ்சு சாம்சன் ஒரு பவுண்டரியும் அடித்தனர். இதனால் இந்தியாவுக்கு 15 ரன்கள் கிடைத்தன.

    4-வது ஓவரை பெர்குசன் வீசினார். முதல் பந்தை பவுண்டரிக்கு விரட்டிய அபிஷேக் சர்மா, அடுத்த பந்தை சிக்சருக்கு தூக்கினார். 4-வது பந்தை சஞ்சு சாம்சன் சிக்சருக்கு தூக்கினார். ஆஃப்சைடு அடிக்க முயன்ற பந்து எட்ஜ் ஆகி லெக்சைடு சிக்சருக்கு பறந்தது. கடைசி பந்தை சாம்சன் பவுண்டரிக்க விரட்டினார். இந்த ஓவரில் இந்தியாவுக்கு 24 ரன்கள் கிடைத்தன. இதனால் 4 ஓவர் முடிவில் விக்கெட் இழப்பின்றி 51 ரன்கள் குவித்தது.

    5-வது ஓவரை ஹென்றி வீசினார். இந்த ஓவரில் 4 வைடு வீசினார். அபிஷேக் மற்றும் சஞ்சு தலா ஒரு சிக்ஸ் அடித்தனர். இதனால் 21 ரன்கள் கிடைத்தன. 5 ஓவரில் இந்தியா 72 ரன்கள் குவித்தது.

    6-வது ஓவரை டஃபி வீசினார். முதல் பந்தை பவுண்டரிக்கு விரட்டிய அபிஷேக் சர்மா, அடுத்த பந்தை சிக்சருக்கு தூக்கினார். அடுத்த பந்தை தூக்கி அடித்தார். பந்து வானத்தை நோக்கி சென்றது. ஆனால் பீல்டரால் அதை பிடிக்க முடியவில்லை. அடுத்த பந்தையும் அதேபோல் அடித்தார். பீல்டர் பிடிக்கவில்லை. 5-வது பந்தை பவுண்டரிக்கு விரட்டி 18 பந்தில் அரைசதம் விளாசினார்.

    • டி20 உலகக் கோப்பை தொடரின் ஐசிசி தூதராக ரோகித் சர்மா உள்ளார்.
    • அறிமுக டி20 உலகக் கோப்பை வென்றவர் எம்.எஸ். தோனி ஆவார்.

    டி20 உலகக் கோப்பையின் இறுதிப் போட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் தொடங்கியுள்ளது. இதில் இந்தியா- நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்த போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டதில் நியூசிலாந்து கேப்டன் சான்ட்னெர் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார்.

    இந்திய அணியில் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை. இங்கிலாந்துக்கு எதிராக அரையிறுதியில் விளையாடிய அதே வீரர்கள் இடம் பிடித்துள்ளனர். நியூசிலாந்து அணியில் ஜேக்கப் டஃபி அணியில் இடம் பிடித்துள்ளார். மெக்கோன்சி நீக்கப்பட்டுள்ளார்.

    இந்திய அணி அரையிறுதியில் இங்கிலாந்தையும், நியூசிலாந்து தென்ஆப்பிரிக்காவையும் வீழ்த்தியிருந்தன.

    போட்டி தொடங்குவதற்கு முன் இருநாட்டு தேசிய கீதம் பாடப்படும். அப்போது டி20 உலகக் கோப்பை ரசிகர்கள் பார்வைக்காக மைதானத்தின் நடுவில் வைக்கப்பட்டது. அந்த உலகக் கோப்பையை இந்திய அணியின் முன்னாள் கேப்டன்களான எம்.எஸ். தோனி மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் கொண்டு வந்தனர்.

    ரோகித் சர்மா ஐசிசி டி20 உலகக் கோப்பையின் தூதராக உள்ளார். மேலும், கடந்த முறை சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணியின் கேப்டனாகவும் இருந்துள்ளார்.

    எம்.எஸ். தோனி தலைமையில்தான் இந்திய அணி முதன்முறையாக டி20 உலகக் கோப்பையை வென்றது. மேலும், அறிமுக டி20 உலகக் கோப்பையையும் வென்றவரும் இவரே ஆவார்.

    • இந்திய அணி அரையிறுதியில் இங்கிலாந்தை வீழ்த்தியிருந்தது.
    • நியூசிலாந்து அணி தென்ஆப்பிரிக்காவை வீழ்த்தியிருந்தது.

    டி20 உலகக் கோப்பையின் இறுதிப் போட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் தொடங்கியுள்ளது. இதில் இந்தியா- நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்த போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டதில் நியூசிலாந்து கேப்டன் சான்ட்னெர் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார்.

    இந்திய அணியில் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை. இங்கிலாந்துக்கு எதிராக அரையிறுதியில் விளையாடிய அதே வீரர்கள் இடம் பிடித்துள்ளனர்.

    இந்திய அணி அரையிறுதியில் இங்கிலாந்தையும், நியூசிலாந்து தென்ஆப்பிரிக்காவையும் வீழ்த்தியிருந்தன.

    நியூசிலாந்து அணியில் ஜேக்கப் டஃபி அணியில் இடம் பிடித்துள்ளார். மெக்கோன்சி நீக்கப்பட்டுள்ளார்.

    ×