என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "sexual harass"

    • பாலியல் தொல்லை வழக்கில் சாட்சியை மாற்றி கூறும்படி மாணவிக்கு மிரட்டல் வருகிறது.
    • இந்த சம்பவம் முதுகுளத்தூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    முதுகுளத்தூர்

    ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே உள்ள திருவரங்கம் பகுதியை சேர்ந்த மாணவி ஒருவர், அதே பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார்.

    அவருக்கு, அங்கு பணிபுரியும் ஒரு ஆசிரியர் பாலியல் ெதால்லை கொடுத்ததாக கூறப்படு கிறது. இது தொடர்பாக அதே பள்ளியில் படிக்கும் மற்றொரு மாணவி, பாதிக்கப்பட்ட மாணவிக்கு ஆதரவாக சாட்சி கூறி இருந்தார்.

    இந்த நிலையில் இந்த வழக்கை விசாரித்து வரும் முதுகுளத்தூர் மகளிர் போலீசார், ஆசிரியருக்கு எதிராக சாட்சி கூறிய மாணவியை மிரட்டி அவரது புகாரை மாற்றி கூறும்படி வற்புறுத்தியதாக புகார் தெரிவித்துள்ளார்.

    இந்த சம்பவம் முதுகுளத்தூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • இளம்பெண் வள்ளியம்பட்டியில் உள்ள கணவர் குடும்பத்துடன் தங்கி இருந்தார்.
    • உறவினர்கள் பரமத்திவேலூர் மகளிர் போலீஸ் நிலையத்தில் இதுகுறித்து புகார் செய்தனர்.

    பரமத்திவேலூர்:

    திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை பகுதியை சேர்ந்த 20 வயது இளம்பெண்ணை நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா வள்ளியம்பட்டியை சேர்ந்த வாலிபருக்கு திருமணம் செய்து கொடுத்தனர்.

    வாலிபர் கேட்டரிங் முடித்து அமெரிக்காவில் வேலை பார்த்து வரும் நிலையில் இளம்பெண் வள்ளியம்பட்டியில் உள்ள கணவர் குடும்பத்துடன் தங்கி இருந்தார்.

    இந்நிலையில் இளம்பெண் வீட்டில் தனியாக இருக்கும் நேரத்தில் அவரது மாமனார் அவருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த இளம்பெண் இது குறித்து தனது பெற்றோரிடம் தெரிவித்தார்.

    இதையடுத்து இளம்பெண்ணின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் பரமத்திவேலூர் மகளிர் போலீஸ் நிலையத்தில் இதுகுறித்து புகார் செய்தனர். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் இந்திராணி பாலியல் தொந்தரவு கொடுத்த மாமனார், அதை கண்டு கொள்ளாத மாமியார் மற்றும் கணவர் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்தனர்.

    பின்னர் 3 பேரையும் கைது செய்ய அவர்களது வீட்டிற்கு போலீசார் சென்றபோது அவர்கள் தலைமறைவாகிவிட்டனர். இதையடுத்து 3 பேரையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

    ×