என் மலர்tooltip icon
    • பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் கட்ட அமா்வு இன்று தொடங்குகிறது.
    • இதில் பல்வேறு பிரச்சனைகளை கிளப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.

    புதுடெல்லி:

    நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடா் கடந்த ஜனவரி 28-ம் தேதி ஜனாதிபதி உரையுடன் தொடங்கியது. கடந்த 13-ம் தேதியுடன் முதல் கட்ட அமா்வு முடிவடைந்தது.

    முதல் கட்ட அமர்வின்போது ராகுல் காந்தியைப் பேச அனுமதிக்கவில்லை என்ற குற்றச்சாட்டுடன் மக்களவையில் எதிா்க்கட்சிகள் அமளியை தொடங்கின. கடந்த 3-ம் தேதி மக்களவையில் காகிதங்களைக் கிழித்து அவைத்தலைவா் இருக்கையை நோக்கி வீசியதற்காக எதிா்க்கட்சி எம்.பி.க்கள் 8 போ் இடைநீக்கம் செய்யப்பட்டனா்.

    சபாநாயகர் ஓம் பிா்லா முற்றிலும் ஒருதலைபட்சமாக செயல்படுவதாகக் குற்றம்சாட்டி, அவரைப் பதவிநீக்கம் செய்யக்கோரி தீா்மானம் கொண்டுவர காங்கிரஸ், தி.மு.க. உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் தரப்பில் நோட்டீஸ் அளிக்கப்பட்டது.

    இந்நிலையில், நாடாளுமன்றம் இன்று கூடுகிறது. பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-ம் கட்ட அமா்வு இன்று தொடங்கி ஏப்ரல் 2-ம் தேதி வரை நடக்கிறது.

    முதல் நாளிலேயே மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லா மீதான பதவி நீக்க தீர்மான விவாதம் நடைபெறும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றே தீர்மானம் மீது வாக்கெடுப்பு நடைபெறும் என தெரிகிறது.

    இந்தக் கூட்டத்தொடரில் பல்வேறு பிரச்சனைகளை கிளப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. மேற்கு ஆசியா நிலவரம் குறித்தும், இந்திய பெருங்கடலில் ஈரான் கப்பல் தாக்கப்பட்டது குறித்தும், ரஷிய கச்சா எண்ணெய் விவாதத்தில் அமெரிக்காவின் மிரட்டல் குறித்தும் விவாதம் நடத்தக் கோரி எதிர்க்கட்சியினர் பிரச்சனையை கிளப்புவார்கள்.

    மத்திய அரசு இந்த விவகாரங்கள் குறித்து பாராளுமன்றத்தில் விளக்கம் அளிக்கும் என்று கருதப்படுகிறது. இதனால் பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது கட்ட அமர்விலும் கடும் அமளி நிலவலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • டி20 உலகக் கோப்பை இறுதிப்போட்டி அகமதாபாத்தில் நடந்தது.
    • இதில் இந்திய அணி நியூசிலாந்து அணியை 96 ரன் வித்தியாசத்தில் வென்றது.

    சென்னை:

    அகமதாபாத்தில் நடந்த டி20 உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணி நியூசிலாந்து அணியை 96 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது.

    இந்நிலையில், டி20 உலகக் கோப்பையில் அபார வெற்றி பெற்ற இந்திய அணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக, மு.க.ஸ்டாலின் எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், டி20 உலகக் கோப்பையில் அபார வெற்றி பெற்ற இந்திய அணிக்கு வாழ்த்துகள்.

    கடைசி 3 போட்டிகளில் சஞ்சு சாம்சனின் ஆதிக்கம் மற்றும் நிதானமான ஆட்டத்தைப் பார்க்கவே உற்சாகமாக இருந்தது.

    போட்டி முழுவதும் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்தியாவை ஒரு மகத்தான வெற்றிக்கு இட்டுச் சென்ற அனைத்து வீரர்களுக்கு எனது வாழ்த்துக்கள். டி20 உலகக் கோப்பையை 3வது முறையாக வென்ற பெருமைமிக்க தருணத்தையும் வாழ்த்துகிறேன் என பதிவிட்டுள்ளார்.

    • இந்தியன் வெல்ஸ் ஓபன் தொடர் அமெரிக்காவில் நடந்து வருகிறது.
    • இதில் ஸ்பெயினின் கார்லோஸ் அல்காரஸ் 3வது சுற்றுக்கு முன்னேறினார்.

    வாஷிங்டன்:

    இந்தியன் வெல்ஸ் ஓபன் தொடர் அமெரிக்காவில் நடந்து வருகிறது.

    ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றுக்கு ஸ்பெயினின் கார்லோஸ் அல்காரஸ், ரஷியாவின் டேனில் மெத்வதேவ் ஆகியோர் நேரடியாக தகுதி பெற்றனர்.

    இதில் கார்லோஸ் அல்காரஸ், பல்கேரியாவின் கிரிகோர் டிமித்ரோவ் உடன் மோதினார். சிறப்பாக ஆடிய அல்காரஸ் 6-2, 6-3 என எளிதில் வென்று மூன்றாவது சுற்றுக்கு முன்னேறினார்.

    மற்றொரு போட்டியில் ரஷியாவின் டேனில் மெத்வதேவ் 6-4, 6-2 என்ற செட் கணக்கில் சிலியின் அலிஜாண்ட்ரோ டபிலோவை வீழ்த்தி 3வது சுற்றுக்கு முன்னேறினார்.

    • முதலில் ஆடிய இந்திய அணி 20 ஓவரில் 255 ரன்கள் குவித்தது.
    • அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன், இஷான் கிஷன் ஆகியோர் அரை சதமடித்தனர்.

    அகமதாபாத்:

    டி20 உலகக் கோப்பை தொடரின் இறுதிப்போட்டி அகமதாபாத்தின் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது. இதில் இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதின.

    முதலில் ஆடிய இந்திய அணி அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன், இஷான் கிஷன் அதிரடி அரை சதங்களால் 255 ரன்கள் குவித்தது.

    நியூசிலாந்து சார்பில் ஜேம்ஸ் நீஷம் 3 விக்கெட் வீழ்த்தினார்.

    தொடர்ந்து ஆடிய நியூசிலாந்து 19 ஓவரில் 159 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் 96 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்தியா மீண்டும் உலகக் கோப்பையை வென்றுது.

    இந்நிலையில், போட்டியை நடத்திய நாடு என்ற முறையில் முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்று புதிய சாதனையை படைத்துள்ளது இந்தியா.

    இதேபோல், 3 முறை டி20 உலகக் கோப்பையை வென்ற ஒரே அணியாக இந்தியா சாதனை படைத்துள்ளது.

    • டி20 உலகக் கோப்பை இறுதிப்போட்டி அகமதாபாத்தில் நடந்தது.
    • இதில் இந்திய அணி நியூசிலாந்து அணியை 96 ரன் வித்தியாசத்தில் வென்றது.

    புதுடெல்லி:

    அகமதாபாத்தில் நடந்த டி20 உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணி நியூசிலாந்து அணியை 96 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது.

    இந்நிலையில், டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணிக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக, பிரதமர் மோடி எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், டி20 உலகக் கோப்பை வென்ற இந்திய அணிக்கு வாழ்த்துகள்.

    இந்த வெற்றி இந்திய அணியின் அசாத்திய திறன், உறுதி மற்றும் குழுப்பணியை வெளிப்படுத்துகிறது.

    ஒவ்வொரு இந்தியரின் மனதில் பெருமையையும், மகிழ்ச்சியையும் இந்த வெற்றி கொடுக்கும் என பதிவிட்டுள்ளார்.

    • ஆட்ட நாயகன் விருது பும்ராவுக்கு வழங்கப்பட்டது.
    • சஞ்சு சாம்சனுக்கு தொடர் நாயகன் விருது அளிக்கப்பட்டது.

    அகமதாபாத்:

    டி20 உலகக் கோப்பை தொடரின் இறுதிப்போட்டி அகமதாபாத்தின் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது. இதில் இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதின.

    முதலில் ஆடிய இந்திய அணி அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன், இஷான் கிஷன் அதிரடி அரை சதங்களால் 255 ரன்கள் குவித்தது.

    தொடர்ந்து ஆடிய நியூசிலாந்து 19 ஓவரில் 159 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் 96 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்தியா மீண்டும் உலகக் கோப்பையை வென்று அசத்தியது.

    இந்நிலையில், 15 ரன்கள் கொடுத்து 4 விக்கெட் வீழ்த்தி வெற்றிக்கு வழிவகுத்த ஜஸ்பிரீத் பும்ராவுக்கு ஆட்ட நாயகன் விருது அளிக்கப்பட்டது.

    இதேபோல், சஞ்சு சாம்சன் தான் ஆடிய 5 ஆட்டங்களில் 3 அரை சதங்கள் உள்பட 321 ரன்கள் குவித்தார். இதனால் அவருக்கு தொடர் நாயகன் விருது அளிக்கப்பட்டது.

    • டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பவுலிங் தேர்வு செய்தது.
    • முதலில் ஆடிய இந்திய அணி 20 ஓவரில் 255 ரன்கள் குவித்தது.

    அகமதாபாத்:

    டி20 உலகக் கோப்பை தொடரின் இறுதிப்போட்டி அகமதாபாத்தின் நரேந்திர மோடி மைதானத்தில் இன்று நடைபெற்றது. இதில் இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதின. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பவுலிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் களமிறங்கிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 255 ரன்கள் குவித்தது.

    தொடக்க ஆட்டக்காரர் சஞ்சு சாம்சன் இன்றும் அதிரடியில் மிரட்டினார். அவர் 46 பந்தில் 8 சிக்சர், 5 பவுண்டரி உள்பட 89 ரன்கள் குவித்தார். இஷான் கிஷன் 54 ரன்னும், அபிஷேக் சர்மா 52 ரன்னும் எடுத்தனர்.

    கடைசியில் அதிரடி காட்டிய ஷிவம் துபே 26 ரன்கள் குவித்தார்.

    நியூசிலாந்து சார்பில் ஜேம்ஸ் நீஷம் 3 விக்கெட் வீழ்த்தினார்.

    இதையடுத்து, 256 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் நியூசிலாந்து களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் டிம் சைபர்ட் அதிரடியாக ஆடி 52 ரன்கள் குவித்தார். கேப்டன் சான்ட்னர் 43 ரன்கள் எடுத்தார்.

    இறுதியில், நியூசிலாந்து 19 ஓவரில் 159 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் 96 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்தியா தொடர்ந்து இரண்டாவது முறையாக உலகக் கோப்பையை வென்று அசத்தியது.

    இந்தியா சார்பில் பும்ரா 4 விக்கெட்டும், அக்சர் படேல் 3 விக்கெட்டும் வீழ்த்தி அசத்தினர்.

    • அரையிறுதிலும், இறுதிப் போட்டியிலும் சஞ்சு சாம்சன் அரைசதம் விளாசினார்.
    • இந்தத் தொடரில் 5 போட்டிகளில் 321 ரன்கள் குவித்துள்ளார்.

    டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி குஜராத் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. முதலில் பேட்டிங் செய்த இந்தியா 255 ரன்கள் குவித்தது. தொடக்க வீரர் சஞ்சு சாம்சன் அபாரமாக விளையாடி 89 ரன்கள் விளாசினார்.

    இந்த தொடரில் தொடக்கத்தில் அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. அதன்பின் கிடைத்த வாய்ப்பை கெட்டியாக பிடித்துக் கொண்டார். வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான வாழ்வா? சாவா? போட்டியிலும், அதன்பின் இங்கிலாந்துக்கு எதிராக அரையிறுதியில் அரைசதம் அடித்தார்.

    தொடர்ந்து மூன்று அரைசதங்கள் விளாசிய சஞ்சு சாம்சன் இந்த தொடரில் 5 போட்டிகளில் 321 ரன்கள் குவித்துள்ளார். இதன்மூலம் ஒரு டி20 உலகக் கோப்பை தொடரில் அதிக ரன்கள் குவித்த இந்திய வீரர் என்ற சாதனையைப் படைத்துள்ளார்.

    இதற்கு முன்னதாக விராட் கோலி (6 இன்னிங்ஸ்) 319 ரன்கள் அடித்துள்ளார். இஷான் கிஷன் இந்த தொடரில் 9 இன்னிங்சில் 317 ரன்கள் அடித்துள்ளார்.

    • இந்தியன் வெல்ஸ் ஓபன் தொடர் அமெரிக்காவில் நடந்து வருகிறது.
    • இதில் அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா மூன்றாவது சுற்றுக்கு முன்னேறினார்.

    வாஷிங்டன்:

    இந்தியன் வெல்ஸ் ஓபன் தொடர் அமெரிக்காவில் நடந்து வருகிறது.

    இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்று போட்டிகள் தற்போது நடந்து வருகின்றன. இதில் அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா, குரோசியாவின் வோனா வெகிக் உடன் மோதினார்.

    இதில் அதிரடியாக ஆடிய ஜெசிகா பெகுலா 4-6, 6-2, 6-3 என்ற செட் கணக்கில் வென்று மூன்றாவது சுற்றுக்கு முன்னேறினார்.

    மற்றொரு போட்டியில் போலந்தின் இகா ஸ்வியாடெக் 6-0, 7-6 (7-2) என்ற செட் கணக்கில் அமெரிக்காவின் கைலா டேவை வீழ்த்தி 3வது சுற்றுக்கு முன்னேறினார்.

    • குந்தவையை வெளியே வராம பார்த்துக்கோங்க.
    • மைக் முட்டாள்தனத்தை உரக்கச் சொல்ல மட்டுமே உதவும்.

    சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் திரிஷாவை மறைமுகமாக தாக்கி நடிகர் பார்த்திபன் பேசியிருந்தார்.

    அந்த நிகழ்ச்சியில், த்ரிஷாவின் புகைப்படம் காண்பிக்கப்பட்டு பார்த்திபனிடம் கருத்து கேட்கப்பட்டது.

    அதற்கு," இந்த குந்தவையை கொஞ்ச நாள் வீட்டிலேயே குந்தவைக்கிறது (உட்கார வைப்பது) நல்லதுங்க. வெளியே வராம பார்த்துக்கோங்க. அதனால நிறைய பிரச்சனைகள் உண்டாகமா பார்த்துக்கலாம்.

    அதனால சில கவிதைகளை ரசிக்கலாமே தவிர, அந்த கவிதையை சொல்லாம இருக்கிறது பெட்டர்ன்னு நினைக்கிறேன்" என குறிப்பிட்டிருந்தார்.

    பார்த்திபனின் கருத்துக்கு, நடிகை திரிஷா கண்டனம் தெரிவித்துள்ளார். 

    இதுகுறித்து த்ரிஷா தனது இன்ஸ்டா பக்கத்தில் கூறியிருப்தாவது:-

    ஒரு மைக்ரோ போன், ஒரு கருத்தை அறிவார்ந்தது அல்லது நகைச்சுவையானது என மாற்றிவிடாது. அது முட்டாள்தனத்தை உரக்கச் சொல்ல மட்டுமே உதவும். அறிவு இல்லாமல் பேசப்படும் தரம் குறைந்த வார்த்தைகள், அவை யாரை நோக்கி வீசப்படுகிறதோ அவரை விட, பேசுபவரின் தரத்தையே அதிகம் வெளிப்படுத்திவிடும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    திரிஷா கண்டனம் தெரிவித்த நிலையில், நடிகர் பார்த்திபன் வருத்தம் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் கூறுகையில்," எது நடந்ததோ அது தவறாகவே நடந்துள்ளது. இதில் வருந்துவதை தவிர வேறு வழியில்லை" என்று கூறி நடிகர் பார்த்திபன் வருத்தம் தெரிவித்து பதிவு வெளியிட்டுள்ளார்.

    • முதல் கேம்-ஐ 15-21 என எளிதாக இழந்தார் லக்சயா சென்.
    • 2-வது கேமில் கடுமையாக போராடி 20-22 என இழந்து ஏமாற்றம் அடைந்தார்.

    ஆல் இங்கிலாந்து ஓபன் பேட்மிண்டன் இறுதிச் சுற்றில் இந்தியாவின் லக்சயா சென்- தைவானின் லின் சுன்-யி-ஐ பலப்பரீட்சை நடத்தினார்.

    முதல் கேமை லின் சு-யின் 21-15 என எளிதாக கைப்பற்றினார். 2-வது சுற்றில் லக்சயாக சென் கடும் நெருக்கடி கொடுத்தார். இதனால் 2-வது கேம் பரபரப்பாக சென்றது. என்றாலும் லின் சுன்-யி கடும் போராட்டத்திற்குப் பின் 22-20 என 2-வது கேம்-ஐ கைப்பற்றினார். அத்துடன் 2-0 என வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றார்.

    2-வது செட்டில் லக்சயாக சென் ஒரு கட்டத்தில் 11-8 என முன்னிலைப் பெற்றிருந்தார். அதன்பின் 14-14 என சமநிலை பெற்றார். பின்னர் 18-16 என முன்னிலைப் பெற்றிருந்தார். ஆனால் லின் 18-18 என சமநிலைப் பெற்றார்.

    பின்னர் 20-22 என லக்சயா சென் தோல்வியடைந்தார்.

    • பெரிய கல்லை தன்னுடைய கால் மீது போட்டு காவலர்கள் காலை உடைத்து விட்டதாக தெரிவித்துள்ளார்.
    • காவல்துறையில் இது போன்ற அத்துமீறிய அராஜகமான நடவடிக்கைகள் தொடர்கிறது.

    மானாமதுரை லாக்கப் படுகொலை சம்பவத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும், காவலர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்திடவும் வலியுறுத்தல் செய்யப்பட்டுள்ளது.

    இதுகுறித்து சிபிஎம் மாநில செயலாளர் பெ. சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை கிருஷ்ணராஜபுரத்தைச் சார்ந்த கண்ணன் மகன் ஆகாஷ் (26) என்கிற பட்டியல் சமூகத்தை சேர்ந்தவரும் அவரது நண்பர்கள் குணா, அலெக்ஸ், சரவணன் முகேஷ் கண்ணன் ஆகியோர்களுக்கும் ரயில்வே காலணியைச் சேர்ந்த ஜெயக்குமார் ஆதனூரைச் சேர்ந்த ஆழகர் ஆகியோர்களுக்கும் 5.3.2026 அன்று மாலையில் கிருஷ்ணராஜபுரத்தில் தகராறு நடந்துள்ளது.

    அன்று இரவு மானாமதுரை சியோன்நகர் அருகில் மேற்படி ஜெய்குமார் மற்றும் ஆழகர் ஆகியோர் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது கிருஷ்ணராஜபுரத்தைச் சேர்ந்த மேற்படி ஐந்து பேரும் கத்தி போன்ற ஆயுதத்தை வைத்து தாக்கியுள்ளனர்.

    இதில் காயமடைந்த ஜெய்குமார், ஆழகர் இருவரும் மானாமதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இந்நிலையில் 6.3.2026 பிற்பகல் 12 மணி அளவில் ஆகாஷ் மற்றும் நான்கு பேரையும் காவல்துறை கைது செய்துள்ளது. இவர்களை காவல்துறையினர் எங்கு வைத்துள்ளனர் என்ற விபரம் பெற்றோர்களுக்கு தெரிவிக்கப்படவில்லை.

    திடீரென 7.3.26 அன்று இரவு ஆகாஷ் பெற்றோர்களைத் தொடர்பு கொண்ட காவல்துறையினர் ஆகாஷ் மதுரை அரசு இராஜாஜி மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக கூறியுள்ளனர்.

    பதறியடித்து பெற்றோர்கள் மதுரை ராஜாஜி மருத்துவமனையில் ஆகாசை பார்த்து உள்ளனர். அப்போது ஆகாசினுடைய கால் முறிக்கப்பட்டு இருந்தது. இது தொடர்பாக ஆகாஷ் தன்னுடைய பெற்றோர்களிடம் பெரிய கல்லை தன்னுடைய கால் மீது போட்டு காவலர்கள் காலை உடைத்து விட்டதாக தெரிவித்துள்ளார்.

    மகனுக்கு ஆறுதல் தெரிவித்து விட்டு உணவு தயார் செய்து வருவதற்காக பெற்றோர்கள் வீடு திரும்பி இருக்கின்றனர். ஆனால் 8.3.26 அன்று காலையில் பெற்றோர்களுக்கு ஆகாஷ் இறந்து விட்டதாக காவல்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.

    மேலும் அவரோடு கைது செய்யப்பட்ட நான்கு பேரையும் இராமநாதபுரம் சிறையில் அடைத்திருப்பதாக காவலர்கள் தெரிவித்துள்ளனர்.

    இந்த கொடூரமான லாக்கப் படுகொலையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிக்கிறது. ஆகாஷ் படுகொலை செய்யப்படுவதற்கு முன்னால் அவர் மிக கடுமையான சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டு இருக்கிறார் என்பது அவர் கால் உடைந்ததிலிருந்து தெரிய வருகிறது. காவல்துறையில் இது போன்ற அத்துமீறிய அராஜகமான நடவடிக்கைகள் தொடர்கிறது.

    மனித உரிமைக்கு எதிரான இந்த கொடூரச் குற்றச்செயலில் ஈடுபட்ட அப்போது நிலையத்தில் பணியில் இருந்த அனைத்து காவலர்துறையினர் மீதும் உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.

    குற்றம் இழைத்த காவல்துறையினர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு அவர்கள் கைது செய்யப்பட வேண்டும் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக் கொள்கிறது. அதேபோல் உயிரிழந்திருக்கிற ஆகாஷ் குடும்பத்தினருக்கு வன்கொடுமைகள் தடுப்பு சட்டத்தின் கீழ் கிடைக்க வேண்டிய அரசு வேலை உள்ளிட்ட அனைத்து விதமான தீருதவிகளையும் அரசு வழங்கிட வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×