செய்திகள்

3 ஆயிரம் கிலோ மீட்டர் சென்று தாக்கும் ஏவுகணையை பரிசோதித்தது ரஷியா

Published On 2018-07-21 07:55 GMT   |   Update On 2018-07-21 07:55 GMT
ரஷியாவில் 3 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் சென்று தாக்கும் வல்லமை கொண்ட கின்ஷால் என்ற ஏவுகணை இன்று பரிசோதனை செய்யப்பட்டது. #KinzhalMissile
மாஸ்கோ:

ரஷியா ‘கின்ஷால்’ என்ற ஏவுகணையை தயாரித்துள்ளது. அது 3 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் பாய்ந்து சென்று தாக்கும் திறன் கொண்டது.

இது குறுகிய தூரம் அதாவது 500 கி.மீட்டர் தூரம் பறந்து சென்று தாக்கும் திறன் படைத்த ‘இன்ஸ்கான்கர்’ என்ற ஏவுகணையை தரம் உயர்த்தி தயாரிக்கப்பட்டதாகும். இந்த நிலையில் ‘கின்ஷால்’ ஏவுகணை சோதனையை ரஷிய ராணுவம் இன்று நடத்தியது.

இதுகுறித்த விரிவான மற்ற தகவல்கள் வெளியிடப்படவில்லை. #KinzhalMissile
Tags:    

Similar News