தமிழ்நாடு

கூட்டத்தில் எச்.ராஜா பேசியபோது எடுத்த படம்.

தமிழகத்தில் இந்து மக்களை பாரபட்சமாக நடத்துகின்றனர்- எச். ராஜா குற்றச்சாட்டு

Published On 2022-08-20 06:20 GMT   |   Update On 2022-08-20 06:20 GMT
  • தமிழக அரசு கனல் கண்ணனை கைது செய்தது கண்டிக்கத்தக்கது.
  • தமிழகத்தில் இந்து மக்களை பாரபட்சமாக நடத்துகின்றனர்.

இரணியல்:

இரணியல் அருகே உள்ள ஆலங்கோடு வட்டார இந்து தர்ம பேரவை சார்பில் பாலகோகுலம் என்ற பெயரில் கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. தொடர்ந்து இந்து தர்ம பேரவை தலைவர் சேகர் தலைமையில் பொதுக்கூட்டம் நடந்தது.

சிறப்பு விருந்தினராக பா.ஜனதா தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா கலந்துகொண்டு பேசினார். அவர் பேசியதாவது:-

தமிழகத்தில் மக்கள் வீடுகளில் தேசிய கொடி ஏற்றுவதை தடுக்க முயற்சி செய்கின்றனர். இதன் மூலம் தேசிய நீரோட்டத்தில் இருந்து பிரித்து விட முயற்சி நடக்கிறது. மேலும் தமிழகத்தில் இந்து மக்களை பாரபட்சமாக நடத்துகின்றனர்.

சிதம்பரம் நடராஜர் கோவில் குறித்து யூ-டியூபர் மைனர் விஜய் அவதூறாக பேசியபோது நடவடிக்கை எடுக்காத தமிழக அரசு, கனல் கண்ணனை கைது செய்தது கண்டிக்கத்தக்கது. தண்டனைகள் சரிசமமாக இருக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

Similar News