செய்திகள்

கலப்பட நெய் கண்டுபிடிப்பது எப்படி?

Published On 2018-11-23 09:57 GMT   |   Update On 2018-11-23 09:57 GMT
கோவையில் பிரபல நிறுவனங்களின் பெயரில் கலப்பட நெய் தயாரித்த தொழிற்சாலைக்கு சீல் வைக்கப்பட்டதையடுத்து கலப்பட நெய் கண்டுபிடிப்பது எப்படி என்பதை விரிவாக பார்க்கலாம். #Ghee
நெய்யுடன் உருளைக்கிழங்கு சேர்க்கப்பட்டுள்ளதா? என்பதை கண்டுபிடிக்க 1 கரண்டி நெய்யில் அயோடின் சொலீசனை சேர்க்கும் போது கலப்படம் இருந்தால் நெய் நீல நிறமாக மாறும். அப்போது அது கலப்பட நெய் என்பது தெரிய வரும்.நெய்யுடன் வெஜிடபிள் ஆயில் சேர்க்கப்பட்டுள்ளதா? என்பதை கண்டுபிடிக்க ஒரு கண்ணாடி டெஸ்ட் டியூப்பில் நெய்யை எடுத்து கொள்ள வேண்டும். பின்னர் அதனுடன் சர்க்கரை சேர்த்து குலுக்க வேண்டும். அப்போது அது சிவப்பாக மாறினால் அதில் கலப்படம் உள்ளது என்பது தெரிய வரும்.

நெய்யுடன் தேங்காய் எண்ணெய் கலக்கப்பட்டுள்ளதா? என்பதை கண்டுபிடிக்க நெய்யை ஒரு பாத்திரத்தில் ஊற்றி குளிர்சாதன பெட்டியில் வைக்க வேண்டும். சிறிது நேரத்துக்கு பின்னர் எடுத்து பார்த்தால் கலப்பட நெய் 2 ஆக பிரிந்து காணப்படும்.

இந்த நெய்களை சாப்பிடுவதால் நோய்கள் வர வாய்ப்பு இல்லை. வருமானத்தை அதிகப்படுத்தி நெய்யின் எடையை கூட்டுவதற்காக நெய்யில் கலப்படம் செய்யப்படுகிறது.


Tags:    

Similar News