செய்திகள்

புதுவை பல்கலைக்கழகத்தில் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை

Published On 2016-12-03 04:26 GMT   |   Update On 2016-12-03 04:26 GMT
ரூ.9 கோடியில் மைக்ராஸ் கோப் வாங்கியதில் முறைகேடு நடந்ததாக புகார்கள் வந்ததை தொடர்ந்து புதுவை பல்கலைக்கழகத்தில் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
புதுச்சேரி:

புதுவை பல்கலைக்கழகத்தில் கடந்த 2012-ம் ஆண்டு அதிக சக்திவாய்ந்த மைக்ராஸ் கோப் ரூ.9 கோடி மதிப்பில் வாங்கப்பட்டது. ஆனால், இந்த மைக்ராஸ் கோப் இதுவரை பயன்படுத்தப்படவில்லை.

இந்த மைக்ராஸ் கோப்பை வாங்குவதற்கு விடப்பட்ட டெண்டரிலும் பிரச்சனை ஏற்பட்டதாகவும், ஒரு குறிப்பிட்ட நபருக்கு டெண்டர் விதிகளுக்கு முரணாக கொடுத்ததாகவும் சி.பி. ஐ.க்கு புகார்கள் வந்தன.

இதனைத்தொடர்ந்து சென்னையில் உள்ள சி.பி.ஐ. அதிகாரிகள் புதுவை பல்கலைக்கழகத்துக்கு வந்து விசாரணை நடத்தினர்.

மேலும் பல்கலைக்கழக ஊழியர்கள், பேராசிரியர்கள், ஓய்வுபெற்ற அதிகாரிகளிடம் விசாரணை நடத்த சி.பி.ஐ. முடிவு செய்துள்ளது. இதற்காக அவர்களுக்கு சி.பி.ஐ. அலுவலகத்தில் இருந்து சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

ஆனால், இந்த மைக்ராஸ் கோப்பை பொருத்துவதற்கு சரியான இடம் கண்டறியப்படாததால் அது பொருத்தப்படவில்லை என்றும், தற்போது ரூ.1 கோடி செலவில் புதிய கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. அதில் இந்த மைக்ராஸ் கோப் பொருத்தப்படும் என்றும் பல்கலைக்கழகம் தரப்பில் கூறப்பட்டது.

இது தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தப்பட உள்ளது. சி.பி.ஐ. அதிகாரிகளின் இந்த திடீர் விசாரணையால் புதுவை பல்கலைக்கழகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Similar News