செய்திகள்

வங்காள தேச ஏ அணிக்கெதிராக இலங்கை ஏ அணி 449 ரன்கள் குவித்து டிக்ளேர்

Published On 2018-06-27 13:04 GMT   |   Update On 2018-06-27 13:04 GMT
சிட்டகாங்கில் நடைபெற்று வரும் வங்காள தேசம் ‘ஏ’ அணிக்கெதிரான ஆட்டத்தில் இலங்கை ‘ஏ’ அணி முதல் இன்னிங்சில் 449 ரன்கள் குவித்துள்ளது. #BANAvSLA
இலங்கை ‘ஏ’ அணி வங்காள தேசம் சென்று வங்காள தேசம் ‘ஏ’ அணிக்கெதிராக மூன்று நான்கு நாட்கள் கொண்ட டெஸ்ட் தொடரிலும், மூன்று ஒருநாள் போட்டியிலும் விளையாடுகிறது.

முதல் நான்கு நாட்கள் கொண்ட டெஸ்ட் சிட்டகாங்கில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற இலங்கை ‘ஏ’ அணி பேட்டிங் தேர்வு செய்தது. நேற்றைய முதல் நாள் ஆட்டத்தில் இலங்கை ‘ஏ’ அணி 4 விக்கெட் இழப்பிற்கு 170 ரன்கள் சேர்த்திருந்தது.

இன்று 2-வது நாள் ஆட்டம் நடைபெற்றது. திரிமானே அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 168 ரன்கள் குவித்தார். சரித் அசாலங்கா 90 ரன்னும், ஷம்மு அஷன் 70 ரன்னும் அடிக்க, இலங்கை ‘ஏ’ அணி 8 விக்கெட் இழப்பிற்கு 449 ரன்கள் குவித்து முதல் இன்னிங்சை டிக்ளேர் செய்தது. கலித் அஹமது 4 விக்கெட்டும், அபு ஹைடர் 2 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

பின்னர் வங்காள தேசம் ‘ஏ’ முதல் இன்னிங்சை தொடங்கியது. இன்றைய 2-வது நாள் ஆட்ட முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 44 ரன்கள் எடுத்துள்ளது.
Tags:    

Similar News