செய்திகள் (Tamil News)

அதிக சிக்சர்கள்: 5-வது இடத்தை பிடித்தார் டி வில்லியர்ஸ்

Published On 2017-10-19 09:58 GMT   |   Update On 2017-10-19 09:59 GMT
வங்காள தேசத்திற்கு எதிரான நேற்றைய போட்டியில் 7 சிக்சர்கள் விளாசியதன் மூலம் 201 சிக்சர்களுடன் அதிக சிக்ஸ் விளாசிய வீரர்கள் பட்டியலில் 5-வது இடத்தை டி வில்லியர்ஸ் பிடித்துள்ளார்.
தென் ஆப்பிரிக்கா - வங்காளதேச அணிகள் மோதிய 2-வது ஒருநாள் போட்டி நேற்று நடந்தது. முதலில் விளையாடிய தென் ஆப்பிரிக்கா நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 353 ரன் குவித்தது.

தென்ஆப்பிரிக்கா அணியின் முன்னாள் கேப்டனும், 360 டிகிரி என அழைக்கபடுபவரும் ஆன டிவில்லியர்சின் ஆட்டம் அதிரடியாக இருந்தது. அவர் 104 பந்தில் 176 ரன் குவித்தார். இதில் 15 பவுண்டரிகள், 7 சிக்சர்களும் அடங்கும். இதன் மூலம் ஒருநாள் போட்டியில் அதிக ரன் எடுத்த தென் ஆப்பிரிக்க வீரர்களின் பட்டியலில் 4-வது இடத்தை பிடித்தார். கேரி கிர்ஸ்டன் 188 ரன்களுடனும் முதல் இடத்திலும், டு பிளிசிஸ் 185 ரன்களுடன் 2-வது இடத்திலும், டி காக் 178 ரன்களுடன் 3-வது இடத்திலும் உள்ளனர். கிப்ஸ் 175 ரன்கள் குவித்துள்ளார்.



பின்னர் விளையாடிய வங்காளதேசம் 47.5 ஓவர்களில் 249 ரன்னில் சுருண்டது. இதனால் தென் ஆப்பிரிக்கா 104 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் ஒருநாள் தொடரை வென்றது. டிவில்லயர்ஸ் நேற்று 7 சிக்சர் அடித்ததன் மூலம் ஒருநாள் போட்டியில் 200-வது சிக்சர்களை கடந்துள்ளார். 201 சிக்சர்கள் விளாசியுள்ள டி வில்லியர்ஸ், அதிக சிக்சர்கள் விளாசியடி பட்டியலில் 5-வது இடத்தில் உள்ளார்.

ஒருநாள் போட்டியில் அப்ரிடி 351 சிக்சர்களுடன் முதல் இடத்தில் உள்ளார். ஜெயசூர்யா (270 சிக்சர்), கெய்ல் (252 சிக்சர்), டோனி (213) ஆகியோர் இதற்கு அடுத்த நிலையில் உள்ளனர்.
Tags:    

Similar News