செய்திகள் (Tamil News)
ராஜ்நாத் சிங்

பாதுகாப்புத் துறை மந்திரி ராஜ்நாத் சிங் ஜூலை 3ம் தேதி லடாக் செல்கிறார்

Published On 2020-07-01 12:14 GMT   |   Update On 2020-07-01 12:14 GMT
பாதுகாப்புத் துறை மந்திரி ராஜ்நாத் சிங் ஜூலை 3-ம் தேதி லடாக் செல்கிறார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி:

கல்வான் பள்ளத்தாக்கில் நடைபெற்ற மோதலைத் தொடர்ந்து இந்திய-சீன எல்லை முழுவதும் போர் பதற்றம் நிலவி வருகிறது. இரு தரப்பும் படைகளை குவித்தன. அதேசமயம் பதற்றத்தை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் இருதரப்பு ராணுவமும் தொடர் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு உள்ளன. 

ராணுவத்தின் லெப்டினன்ட் ஜெனரல் மட்டத்திலும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. இதில் ஒருமித்த முடிவு எட்டப்பட்டது. எல்லையில் சர்ச்சைக்குரிய பகுதிகளில் இருந்து இருதரப்பும் படைகளை திரும்ப பெறுவது எனவும் முடிவு செய்யப்பட்டது.
 
அதன்படி எல்லையில் படை விலக்கலுக்கான நடவடிக்கைகளை இருதரப்பும் மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகின. 

இதற்கிடையே, லடாக் மோதல் தொடர்பாக ராணுவ கமாண்டர்கள் அளவிலான மூன்றாம் சுற்று பேச்சுவார்த்தை நேற்று நடைபெற்றது. ஆனாலும், இந்திய-சீன எல்லை முழுவதும் போர் பதற்றம் நிலவி வருகிறது.

இந்நிலையில், பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் ஜூலை 3-ம் தேதி லடாக் செல்கிறார் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. அவருடன் ராணுவ தளபதி முகுந்த நரவனேவும் செல்கிறார். லே பகுதிக்கு செல்லும் அவர்கள் அங்கு பாதுகாப்பு பணிகள் குறித்து ஆய்வு நடத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News