செய்திகள்

ஜம்மு காஷ்மீரில் பேருந்து விபத்து - அமர்நாத் பக்தர்கள் 13 பேர் படுகாயம்

Published On 2018-07-12 03:31 GMT   |   Update On 2018-07-12 03:31 GMT
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் இன்று மினி பஸ் விபத்துக்குள்ளானதில் அமர்நாத் சென்ற 13 பக்தர்கள் பலத்த காயமடைந்தனர். #AmarnathYatra #AmarnathPilgrimsInjured
ஜம்மு:

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள அமர்நாத் குகையில் இயற்கையாக தோன்றும் பனி லிங்கத்தை தரிசிக்க ஆண்டுதோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புனித யாத்திரை மேற்கொள்கிறார்கள். இந்த ஆண்டிற்கான யாத்திரை கடந்த மாதம் 28-ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதற்காக பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் சென்றவண்ணம் உள்ளனர்.

இந்நிலையில், அமர்நாத் பக்தர்களை ஏற்றி வந்த மினி பஸ்,  உதம்பூரில் உள்ள பிர்மா பாலம் அருகே வந்தபோது சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 13 பக்தர்கள் பலத்தகாயம் அடைந்தனர். அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். தப்பி ஓடிய டிரைவரை போலீசார் தேடி வருகின்றனர்.

விபத்தில் சிக்கியவர்கள் உத்தரபிரதேசத்தின் ஜான்சி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது. அவர்களுக்கு தேவையான மருத்துவ வசதிகள் உள்ளிட்ட அனைத்து உதவிகளும் செய்யப்பட்டுள்ளதாகவும், உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை என்றும் உதம்பூர் எம்.பி.யும் மத்திய இணை மந்திரியுமான ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.  #AmarnathYatra #AmarnathPilgrimsInjured
Tags:    

Similar News