உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்

கள்ளக்குறிச்சி மாணவி சாவுக்கு நீதி கேட்டு திண்டுக்கல்லில் மாதர் சங்கம் ஆர்ப்பாட்டம் பாலபாரதி பங்கேற்பு

Published On 2022-09-21 08:30 GMT   |   Update On 2022-09-21 08:30 GMT
  • அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பாக திண்டுக்கல்லில் கண்களில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
  • முன்னாள் எம்.எல்.ஏ பாலபாரதி சிறப்புரையாற்றினார்.

திண்டுக்கல்:

கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி மரணத்திற்கு நியாயம் கேட்டு அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பாக திண்டுக்கல்லில் கண்களில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத்தலைவர் சுமதி தலைமை வகித்தார்.

மாநில துணைத்தலைவரும் முன்னாள் எம்.எல்.ஏ வுமான பாலபாரதி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். மாநில செயற்குழு உறுப்பினர்ராணி, மாநிலக்குழு உறுப்பினர் வனஜா, மாவட்டப்பொருளாளர் பாண்டியம்மாள்,

மாவட்ட துணைத்தலைவர் பழனியம்மாள், மாவட்ட துணைச்செயலாளர்கள் பாப்பாத்தி, சுமதி மற்றும் தங்கமணி, பாக்கியம், மைதிலி, லதா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News