உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்

அவிநாசி பேரூராட்சியில் டிஜிட்டல் முறையில் வரி செலுத்தும் பணி தொடக்கம்

Published On 2022-12-04 08:33 GMT   |   Update On 2022-12-04 08:33 GMT
தங்கள் செல்போனில் க்யூ ஆர் கோடு மூலம் ஸ்கேன் செய்து கட்டணம் செலுத்தும் முறை அமல்படுத்தப்பட்டது.

அவிநாசி:

அவிநாசி பேரூராட்சியில் சொத்து வரி, தொழில் வரி, குடிநீர் கட்டணம் உள்ளிட்ட பல்வேறு வரியினங்கள் வசூலிக்கும் பணி டிஜிட்டல்மயமாக்கப்பட்டுள்ளது. அதன்படி தங்கள் செல்போனில் க்யூ ஆர் கோடு மூலம் ஸ்கேன் செய்து கட்டணம் செலுத்தும் முறை அமல்படுத்தப்பட்டது. கூகுள் பே, போன் பே உள்ளிட்டவற்றின் மூலமும் வரித்தொகை செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டது.

தொடர்ச்சியாக ஸ்வைப்பிங் மிஷின் மூலம் ஏ.டி.எம்., கார்டு பயன்படுத்தி வரி செலுத்தும் முறை அமல்படுத்தப்பட்டது. இந்தியன் வங்கியுடன் இணைந்து மேற்கொள்ளப்பட்ட இப்பணியை பேரூராட்சி தலைவர் தனலட்சுமி தொடங்கி வைத்தார். செயல் அலுவலர் செந்தில்குமார் முன்னிலை வகித்தார். துப்புரவு ஆய்வாளர் கருப்புசாமி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Tags:    

Similar News