உள்ளூர் செய்திகள்

கடைக்கு சீல் வைத்த காட்சி.

குட்கா விற்ற கடைக்கு சீல்

Published On 2022-10-09 09:31 GMT   |   Update On 2022-10-09 09:31 GMT
  • ஒரு கிலோ போதை பொருட்கள் பறிமுதல்
  • வாலிபர் கைது

திருப்பத்தூர்:

திருப்பத்தூர் டவுன் புதிய ‌பஸ் நிலையம் அருகே உள்ள கடையில் தடை செய்யப்பட்ட குட்கா, பான் மசாலா, விற்பனை செய்வதாக போலீஸ் சூப்பிரண்டுக்கு கிடைத்த தகவலின் பேரில் போலீஸ் சூப்பிரண்டு தனி‌பிரிவு போலீசார் கடையில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது கடையில் இருந்து ஒரு கிலோ போதை பொருட்கள் கைப்பற்றப்பட்டது.

இதனை ஒட்டி போலீசார் கடைக்கு சீல் வைத்து வியாபாரியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதுகுறித்து போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் கூறியிருப்பதாவது:-

தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பான் மசாலா குட்கா போன்ற பொருட்கள் யாராவது விற்பனை செய்வது குறித்து தெரிய வந்தால் உடனடியாக அவர்கள் பற்றி விவரத்தை அருகில் உள்ள போலீஸ் நிலையத்தில் அல்லது போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் செல்போன் 944299296 வாட்ஸ் ஆப் மூலம் தெரியப்படுத்தலாம் என தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News