உள்ளூர் செய்திகள்

ஆட்களை நம்பி கட்சி இல்லை... - சீறிய எடப்பாடி

Published On 2023-07-15 08:05 GMT   |   Update On 2023-07-15 08:05 GMT
  • அ.தி.மு.க. செய்தி தொடர்பாளர்களை எடப்பாடி பழனிசாமி அழைத்து பேசி இருக்கிறார்.
  • கட்சியை நம்பித்தான் எல்லோரும் இருக்கிறார்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள் என்று கொந்தளித்து இருக்கிறார்.

சசிகலா, டி.டி.வி.தினகரன், ஓ.பன்னீர்செல்வம் ஆகிய மூவரையும் தவிர எல்லோரையும் கட்சியில் சேர்த்துக்கொள்ளலாம் என்பதில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உறுதியாக இருக்கிறார்.

ஆனாலும் இன்னும் சிலர் எல்லோரும் இணைந்து செயல்பட்டால் நல்லது தான அண்ணே என்று எடப்பாடி பழனிசாமி காதில் கிசுகிசுத்து உள்ளார்கள். அதை கேட்டதும் காதுக்குள் ஈயத்தை காய்ச்சி ஊற்றியதை போல் ஆவேசத்தில் 'இணைப்பு, சேர்ப்பு என்று எதற்கும் இடமில்லை. அந்த விஷயங்களை அடியோடு மறந்து விடுங்கள். ஆட்களை நம்பி கட்சி இல்லை. கட்சியை நம்பித்தான் எல்லோரும் இருக்கிறார்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள் என்று கொந்தளித்து இருக்கிறார். இதனால் ஆலோசனை சொல்லப்போய் வாங்கி கட்டியவர்கள் வாயை பொத்தி 'கப்-சிப்' என்றாகி விட்டார்களாம்.

அதுமட்டுமல்ல அ.தி.மு.க. செய்தி தொடர்பாளர்களை எடப்பாடி பழனிசாமி அழைத்து பேசி இருக்கிறார். அப்போது நான் டி.வி. விவாதங்களை நேரம் கிடைக்கும் போதெல்லாம் பார்த்து வருகிறேன். நன்றாகத்தான் வாதிடுகிறீர்கள். முக்கியமாக அ.தி.மு.க.தான் பிரதான எதிர்க்கட்சி என்பதை தினமும் திரும்ப திரும்ப மக்கள் மனதில் பதிய வைக்கும்படி பேசுங்கள் என்றும் அறிவுறுத்தி இருக்கிறார்.

Tags:    

Similar News