உள்ளூர் செய்திகள்

நாமக்கல் மண்டலத்தில் முட்டைக்கோழி விலை ரூ.7 குறைந்தது

Published On 2023-03-09 03:44 GMT   |   Update On 2023-03-09 03:44 GMT
  • நாமக்கல்லில் நடந்த முட்டை கோழி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில், அதன் விலையை கிலோவுக்கு 7 ரூபாய் குறைக்க முடிவு செய்யப்பட்டது.
  • பல்லடத்தில் நடந்த கூட்டத்தில் கிலோவுக்கு 3 ரூபாய் உயர்த்த முடிவு செய்யப்பட்டது.

நாமக்கல்:

நாமக்கல் மண்டலத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட முட்டை கோழி பண்ணைகள் உள்ளன. இங்கு வளர்க்கப்படும் கோழிகள் மூலம் தினமும் 5 கோடிக்கும் அதிகமான முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகிறது.

கோழி பண்ணைகளில் வயது முதிர்ந்த முட்டை கோழிகளை பண்ணையாளர்கள் விற்பனை செய்து வருகிறார்கள். இதற்கு நாமக்கலில் தினமும் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. ஒரு கிலோ முட்டைக்கோழி ரூ.67-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது.

இந்த நிலையில் நேற்று நாமக்கல்லில் நடந்த முட்டை கோழி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில், அதன் விலையை கிலோவுக்கு 7 ரூபாய் குறைக்க முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து முட்டைக் கோழியின் விலை கிலோ ரூ.60 ஆக நிர்ணயம் செய்யப்பட்டது.

அதே சமயம் ஒரு கிலோ கறிக்கோழி 75 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது.

நேற்று பல்லடத்தில் நடந்த கூட்டத்தில் கிலோவுக்கு 3 ரூபாய் உயர்த்த முடிவு செய்யப்பட்டது. இதை அடுத்து கறிக்கோழி விலை கிலோ ரூ.78 ஆக நிர்ணயம் செய்யப்பட்டது. ஆனால் முட்டை விலையில் எந்த மாற்றமும் செய்யாமல் 440 காசுகளாக நீடிக்கிறது.

Tags:    

Similar News