உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்

மக்கள் நீதிமன்றம் மூலம் 2,679 வழக்குகளுக்கு தீா்வு

Published On 2022-06-27 05:35 GMT   |   Update On 2022-06-27 05:35 GMT
  • சிவில், காசோலை மோசடி, குடும்ப நல வழக்குகள் என மொத்தம் 4,865 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.
  • தீா்வுத் தொகை ரூ. 32 கோடியே 27 லட்சமாகும்.

திருப்பூர் :

தேசிய சட்டப் பணிகள் ஆணைக் குழு, தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் உத்தரவின்பேரில் திருப்பூா் முதன்மை மாவட்ட அமா்வு நீதிமன்ற நீதிபதி ஸ்வா்ணம் ஜெ.நடராஜன் வழிகாட்டுதலின்பேரில் திருப்பூா் மாவட்டத்தில் உள்ள நீதிமன்றங்களில் 20 அமா்வுகளாக மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது.

இதில் சிவில் வழக்குகள், காசோலை மோசடி வழக்குகள், குடும்ப நல வழக்குகள், சமரசத்துக்கு உரிய சிறிய குற்ற வழக்குகள், வங்கி வாராக்கடன் வழக்குகள் என மொத்தம் 4,865 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.இதில் 2,679 வழக்குகளுக்கு சமரசத் தீா்வு காணப்பட்டன. தீா்வுத் தொகை ரூ. 32 கோடியே 27 லட்சமாகும்.

திருப்பூரில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் நிரந்தர மக்கள் நீதிமன்ற தலைவா்வி.பி.சுகந்தி, மோட்டாா் வாகன விபத்து தீா்ப்பாய நீதிபதி பி.ஸ்ரீகுமாா், மகளிா் நீதிமன்றநீதிபதி எஸ்.நாகராஜன், தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவா் வி.புகழேந்தி மற்றும் வக்கீல்கள் பலா் கலந்துகொண்டனா்.

Tags:    

Similar News