உள்ளூர் செய்திகள்

ஹம்ச வாகனத்தில் பெருமாள் எழுந்தருளி வீதி உலா நடந்தது.

கண்டியூர் அரசாப விமோசன பெருமாள் கோவிலில் பங்குனி பிரம்மோற்சவம் தொடக்கம்

Published On 2023-03-29 10:07 GMT   |   Update On 2023-03-29 10:07 GMT
  • அரசாப விமோசன பெருமாள் கோவில் 15-வது திவ்ய தேச தலமாகும்.
  • இன்னிசை கச்சேரி முழங்க சன்னதி பிரகாரம் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

தஞ்சாவூர்:

தஞ்சாவூர் அருகே கண்டியூரில் 108 திவ்யதேசத்தில் 15-வது தலமாக விளங்கும் ஸ்ரீ அரசாப விமோசன பெருமாள் கோவிலில் பங்குனி மாத பிரம்மோற்சவம் தொடங்கியது.

இதனை முன்னிட்டு கோவிலில் பாலாலயம் செய்யப்பட்டதால் கொடி கம்பத்தில் கொடியேற்றம் நிகழாமல் உட்பிரகாரத்திலேயே முதல் நாள் நிகழ்ச்சி பெருமாள் ஹம்ச வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

மேள தாள இன்னிசை கச்சேரி முழங்க சன்னதி பிரகாரம் உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளை தரிசித்தனர் .

பெருமாள் பூ அலங்காரங்கள் ஏற்பாடுகளை உபயதாரர்கள் கோவிந்தராஜ் மகன்கள் பாலாஜி, நேதாஜி ஆகியோர் செய்திருந்தனர். விழாவின் ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்திருந்தது.

Tags:    

Similar News