உள்ளூர் செய்திகள்

பெரும்பாலை இலங்கை அகதிகள் முகாமில் கோஷ்டி மோதலில் 6 பேர் படுகாயம்

Published On 2022-08-09 10:21 GMT   |   Update On 2022-08-09 10:21 GMT
  • முகாமில் வசித்து வரும் இரு தரப்பினர் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது.
  • படுகாயமடைந்த 6 பேரும் தருமபுரி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

தருமபுரி,

தருமபுரி மாவட்டம் பெரும்பாலை அருகேயுள்ள நாகாவதி அணை பகுதியில் இலங்கை அகதிகள் முகாம் உள்ளது.இந்த முகாமில் வசித்து வரும் இரு தரப்பினர் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது.

இதன் காரணமாக முகாமில் வசிக்கும் கணேசன் (வயது 24),பாக்கியராஜ், வசீகரன்,செல்வராணி, பாலகிருஷ்ணன், ரமேஷ் ஆகியோர் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர். இதில் படுகாயமடைந்த 6 பேரும் தருமபுரி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இரு தரப்பிலும் தந்த புகார்கள் பேரில் பெரும்பாலை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Tags:    

Similar News