உள்ளூர் செய்திகள்

நாகர்கோவில் அல்போன்சா பள்ளியில் இயக்கங்களின் தொடக்க விழா

Published On 2023-07-09 07:54 GMT   |   Update On 2023-07-09 07:54 GMT
  • இயன்ற உதவிகளை செய்கின்ற மனநிலையை இந்த மாணவர் பருவத்திலேயே வளர்த்துக்கொள்ள வேண்டும்
  • மாணவர்கள் தத்தமது இயக்கத்தின் உறுதிமொழிகளை எடுத்துக்கொண்டனர்.

நாகர்கோவில் :

நாகர்கோவில் அல்போன்சா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் சாரணர்-சாரணியர் இயக்கம், சாரணர்-சாரணியர் மழலையர் இயக்கம், தேசிய பசுமைப்படை, இளம் செஞ்சிலுவை சங்கம், செஞ்சுருள் சங்கம் ஆகிய அமைப்புகள் செயல்படுகின்றன.

இந்த அமைப்புகளின் இந்த கல்வியாண்டுக்கான தொடக்க விழா தாளாளர் சனில் ஜான் தலைமையில் நடந்தது. நாகர்கோவில் திருச்சிலுவை கல்லூரி பேராசிரியர் ஜெனி சந்தர் பதுவா சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு சமூகத்தில் உதவி தேவைப்படுபவர்களின் வலிகளை உணர்ந்து அவர்களுக்கு நம்மால் இயன்ற உதவிகளை செய்கின்ற மனநிலையை இந்த மாணவர் பருவத்திலேயே வளர்த்துக்கொள்ள வேண்டுமென கேட்டுக்கொண்டார்.

பள்ளி முதல்வர் லிசபெத், பள்ளியின் உயர்நிலைப்பிரிவுகளின் துணை முதல்வர் பிரேம்க லா, தலைமையாசிரியர் மோனிக்கா ஸ்பினோலா உள்பட பலர் விழாவில் கலந்துகொண்டனர்.

விழாவின்போது இயக்கங்களில் செயல்பட இருக்கும் இயக்க மாணவ தலைவர்கள் சிறப்பு செய்யப்பட்டனர். மேலும் மாணவர்கள் தத்தமது இயக்கத்தின் உறுதிமொழிகளை எடுத்துக்கொண்டனர்.

முடிவில் பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன.

Tags:    

Similar News