உள்ளூர் செய்திகள்

குட்கா விற்பனை செய்த வியாபாரி மீது வழக்கு - 30 கிலோ குட்கா பறிமுதல்

Published On 2022-07-21 07:19 GMT   |   Update On 2022-07-21 07:19 GMT
  • அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள், குட்கா அதிக அளவில் புழக்கத்தில் உள்ளதை தடுப்பதற்காகபோலீசார் பல்வேறு நடவடிக்கை
  • 30 கிலோ புகையிலை பொருட்கள் மற்றும் குட்கா இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.

கன்னியாகுமரி :

கன்னியாகுமரி மாவட்டத்தில் போதைப் பொருட்கள் மற்றும் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள், குட்கா அதிக அளவில் புழக்கத்தில் உள்ளதை தடுப்பதற்காகபோலீசார் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் குமரி, கேரளா எல்லைப் பகுதிகளில் உள்ள சோதனைச் சாவடிகள் வழியாக கடந்து செல்கின்ற வாகனங்களும் தீவிர சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படுகின்றனர்.

இந்நிலையில் நேற்று உண்ணாமலைக்கடை பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பதாக கிடைத்த தகவலின் பேரில் கடைகளில் சோதனை செய்தபோது அப்பகுதியில் விஜயன் (வயது 51) என்பவரது கடையில் அரசால் தடை செய்யப்பட்ட 30 கிலோ புகையிலை பொருட்கள் மற்றும் குட்கா இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.

இதையடுத்து புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்த போலீசார் விஜயன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News