உள்ளூர் செய்திகள்

எடப்பாடி பழனிசாமி பிறந்தநாள்: எம்.ஜி.ஆர். பள்ளி மாணவ- மாணவிகளுக்கு அன்னதானம், இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

Published On 2023-05-13 09:36 GMT   |   Update On 2023-05-13 09:36 GMT
  • எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
  • எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அ.தி.மு.க. ஆட்சி அமைய அனைவரும் பாடுபடுவோம்.

சென்னை:

அ.தி.மு.க. பொதுச்செயலாளர், முன்னாள் முதல்வர், சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியின் 69-வது பிறந்தநாள் விழாவையொட்டி எம்.ஜி.ஆர். வாழ்ந்த ராமாபுரம் தோட்டத்தில் அமைந்துள்ள எம்.ஜி.ஆர். காது கேளாதோர் வாய் பேச முடியாதோர் பள்ளி குழந்தைகளுக்கு தென்சென்னை தெற்கு மேற்கு மாவட்ட செயலாளர் விருகை வி.என்.ரவி மற்றும் 137-வது தெற்கு வட்ட செயலாளர் சி.பழனி, விருகை இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறையின் இணைச் செயலாளர் டி. வெற்றிவேல் ஆகியோரின் ஏற்பாட்டில் கேக் வெட்டி குழந்தைகளுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இவற்றை விருகை வி.என். ரவி வழங்கினார்.

விழாவில் மாவட்ட செயலாளர் விருகை வி. என். ரவி தலைமையில் வருகிற சட்ட மன்ற தேர்தலில் தமிழகத்தில் மீண்டும் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அ.தி.மு.க. ஆட்சி அமைய அனைவரும் பாடுபடுவோம்.

மீண்டும் தமிழக முதலமைச்சராக எடப்பாடி பழனிசாமி பதவி ஏற்பார் என்று உறுதி கொண்டு தீவிர களப்பணியாற்றுவோம் என்று சபதம் ஏற்றனர்.

பின்னர் எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் பொதுக்குழு உறுப்பினர் கே.ஜெகநாதன், விருகை வடக்கு பகுதி பொருளாளர் எஸ்.விநாயக மூர்த்தி, அம்மா பேரவை பகுதி செயலாளர் ஜி.சுரேஷ், அமைப்புசாரா ஓட்டுனர் அணி பகுதி செயலாளர் என்.ஜெகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News