உள்ளூர் செய்திகள்

சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்ற காட்சி.


செங்கோட்டையில் சமுதாய வளைகாப்பு விழா

Published On 2022-10-21 09:04 GMT   |   Update On 2022-10-21 09:04 GMT
  • சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்டப்பணிகள் சார்பில் சமுாய வளைகாப்பு விழா நடந்தது.
  • குழந்தைகள் வளா்ச்சி திட்ட அலுவலா் கலைவாணி கா்ப்பகால பராமரிப்பு பற்றியும், ஆரோக்கியமான உணவு பழக்கங்கள் குறித்து சிறப்புரையாற்றினார்.

செங்கோட்டை:

செங்கோட்டை காலாங்கரை யாதவா் சமுதாய நலக்கூடத்தில் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்டப்பணிகள் சார்பில் சமுாய வளைகாப்பு விழா நடந்தது.

நகர்மன்ற தலைவா் ராமலெட்சுமி தலைமை தாங்கினார். நகர்மன்ற உறுப்பினா்கள் சுப்பிரமணியன், பொன்னுலிங்கம், பேபிரெசவுபாத்திமா ஆகியோர் முன்னிலை வகித்தனா். குழந்தை வளா்ச்சித்துறை திட்ட அலுவலக கண்காணிப்பாளா் சாகுல்ஹமீது வரவேற்று பேசினார்.

அதனைதொடா்ந்து நகர்மன்ற தலைவா் ராமலெட்சுமி விழாவை குத்துவிளக்கு ஏற்றி நிகழ்ச்சியை ெதாடங்கி வைத்தார். குழந்தைகள் வளா்ச்சி திட்ட அலுவலா் கலைவாணி கா்ப்பகால பராமரிப்பு பற்றியும், ஆரோக்கியமான உணவு பழக்கங்கள் குறித்து சிறப்புரையாற்றினார்.

நிகழ்ச்சியில் வட்டார வேளாண்மை துணை அலுவலா் சேக்முகைதீன், சமுதாய நாட்டாமை கிருஷ்ணன், உதவி நாட்டாமை மாதவராஜ், கணக்கப்பிள்ளை கண்ணன் ஆகியோர் கலந்து கொண்டு கா்ப்பிணி தாய்மார்களுக்கு வாழ்த்துரை வழங்கினா்.

விழாவில் 70கர்ப்பிணி பெண்களுக்கு சீர்வரிசை பொருட்களும், அறுசுவை உணவும் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் இளநிலை உதவியாளா் இருளப்பன், மேற்பார்வையாளா்கள் சிவகாமி, அண்ணாமலை மற்றும் பழனியம்மாள் வட்டார ஒருங்கிைணப்பாளா் உதயராணி, மற்றும் அங்கன்வாடி பணியாளா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா். வட்டார உதவியாளா் சண்முகசுந்தரி நன்றி கூறினார்.

Tags:    

Similar News