உள்ளூர் செய்திகள்

மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள ெபாதுமக்களை படத்தில் காணலாம்.

மகுடஞ்சாவடியில் 21 வீடுகளில் மழை நீர் புகுந்தது பொதுமக்கள் மண்டபத்தில் தங்க வைப்பு

Published On 2022-10-16 08:48 GMT   |   Update On 2022-10-16 08:48 GMT
  • கனமழையின் காரணமாக தாழ்வான பகுதிகளில் உள்ள 21 வீடுகளில் மழை நீர் சூழ்ந்துள்ளது.
  • பொதுமக்கள் வீடுகளை பூட்டிக் கொண்டு உறவினர்கள் வீடுகளில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

மகுடஞ்சாவடி:

சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடி ஒன்றியம், கூடலூர் கிராமம் எம்ஜிஆர் நகர் மற்றும் எர்ணாபுரம் கிராமம், உலகப்பனூர் பகுதியில் தொடர் கனமழையின் காரணமாக தாழ்வான பகுதிகளில் உள்ள 21 வீடுகளில் மழை நீர் சூழ்ந்துள்ளது.

இதன் தகவல் அறிந்ததும் சங்ககிரி தாசில்தார் பானுமதி, மண்டல துணை தாசில்தார் ரமேஷ் மற்றும் எர்ணாபுரம் ஆர் ஐ செல்வராஜ் மற்றும் விஏஓ க்கள், கிராம உதவியாளர்கள் உள்ளிட்டோர் அங்கு சென்று பொது மக்களுக்கு உதவி புரிந்த வருகின்றனர்.

அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் வீடுகளை பூட்டிக் கொண்டு உறவினர்கள் வீடுகளில் தஞ்சம் அடைந்துள்ளனர். மேலும் 9 பெண்கள், 7 குழந்தைகள், 4 ஆண்கள் ஆக மொத்தம் 20 பேர் மகுடஞ்சாவடியில் உள்ள தனியார் மண்டபத்தில் தங்க வைத்து அவர்களுக்கு தேவையான உணவு, தண்ணீர், பிஸ்கட் உள்ளிட்டவைகளை வருவாய்த் துறையினர் மூலம் வழங்கப்பட்டு வருகின்றன.

Tags:    

Similar News