அ.தி.மு.க ஒன்றிய நிர்வாகிகள் கலந்துரையாடல் கூட்டம்
- அ.தி.மு.கவின் நீடாமங்கலம் ஒன்றியம், மன்னார்குடி நகர கழகங்களின் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது.
- கூட்டத்தில் மன்னார்குடி மற்றும் நீடாமங்கலம் பகுதிகளில் உள்ள மக்கள் பிரச்சனைகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.
மன்னார்குடி:
மன்னார்குடியில் அ.தி.மு.கவின் நீடாமங்கலம் ஒன்றியம், மன்னார்குடி நகர கழகங்களின் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கட்சியின் மாவட்டச் செயலாளரும் அமைப்புச் செயலாளருமான முன்னாள் அமைச்சர் இரா.காமராஜ் எம்.எல்.ஏ தலைமை வகித்தார்.
கூட்டத்தில்அமைப்பு செயலாளர்சிவாராஜ மாணிக்கம், மன்னார்குடி ஒன்றிய செயலாளர் தமிழ்ச்செ ல்வன்,நீடாம ங்கலம் ஒன்றிய செயலா ளர்கள் ஜவகர் மற்றும் ராஜே ந்திரன், மன்னார்குடி நகர செயலாளர் குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் மன்னார்குடி மற்றும் நீடாமங்கலம் பகுதிகளில் உள்ள மக்கள் பிரச்சனைகள் குறித்து விரிவாக விவாதிக்க ப்பட்டது. பொதுமக்களின் தேவைகளை நேரடியாக கேட்டறிந்து தீர்வு ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை அதிமுக நிர்வாகிகள் மேற்கொள்ள வேண்டும் என இரா.காமராஜ் எம்.எல்.ஏ கேட்டுக் கொண்டார்.
கூட்டத்தில் நீடாமங்கலம் ஒன்றியம் மற்றும் மன்னார்குடி நகர கழகங்களின் நிர்வாகிகள், கிளைச் செயலாளர்கள் கலந்து கொண்டனர்.