உள்ளூர் செய்திகள்
கோப்பு படம்

போத்தனூர் அருகே கத்தியை காட்டி மிரட்டி செல்போன் பறிப்பு

Published On 2022-05-31 09:51 GMT   |   Update On 2022-05-31 09:51 GMT
தனியார் நிறுவன ஊழியரிடம் பணம், செல்போன் பறிக்கப்பட்டது.
கோவை, 
விருதுநகர் மாவட்டம் பாளையம்பட்டி அருகே உள்ள வேல்முருகன் காலனியை சேர்ந்தவர் செல்வகணேஷ் (வயது 22). இவர் கோவை ஈச்சனாரி மார்க்கெட் ரோட்டில் தங்கி இருந்து அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று இவர் செட்டிப்பாளையத்தில் உள்ள தனது நண்பரை பார்த்து விட்டு அறைக்கு திரும்பினார். வரும் வழியில் மோட்டார் சைக்கிளை கணேசபுரம் அருகே நிறுத்து விட்டு உடல் உபாதை கழிப்பதற்காக சென்றார். திரும்பி வந்து பார்த்த போது அவரது மோட்டார் சைக்கிள் அருகே 3 வாலிபர்கள் நின்று கொண்டு இருந்தனர். அவர்கள் செல்வகணேசை கத்தியை காட்டி மிரட்டில் அவரிடம் இருந்து ரூ. 4,800 ரொக்க பணம், 2 செல்போன்கள் ஆகியவற்றை பறித்து தப்பிச் சென்றனர். இது குறித்து அவர் போத்தனூர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தனியார் நிறுவன ஊழியரை மிரட்டி செல்போன் மற்றும் பணத்தை பறித்து சென்ற வாலிபர்களை தேடி வருகிறார்கள். 

Tags:    

Similar News