உள்ளூர் செய்திகள்
கைது

ஆசனூர் அருகே 13 கிலோ புகையிலை- போதை பொருட்கள் பறிமுதல்: 3 பேர் கைது

Published On 2022-05-29 04:32 GMT   |   Update On 2022-05-29 04:34 GMT
ஆசனூர் அருகே 13 கிலோ புகையிலை மற்றும் போதை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஈரோடு:

ஈரோடு மாவட்டம் ஆசனூர் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் வெங்கிடு சாமி மற்றும் போலீசார் பல்வேறு பகுதிகளில் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டு இருந்தனர்.

அவர்கள் ஆசனூர் சத்தியமங்கலம்- மைசூர் ரோட்டில் சோதனை மேற்கொண்டனர். அப்போது அந்த பகுதியில் 3 பேர் பேக் மற்றும் கட்டை பையுடன் நின்று கொண்டு இருந்தனர். சந்தேகத்தின் பேரில் போலீசார் அவர்கள் வைத்திருந்த பையை சோதனை செய்தனர்.

அப்போது அதில் தடை செய்யப்பட்ட பாக்குகள், புகையிலை உள்பட போதை பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தினர்.

இதில் அவர்கள் புதுகோட்டை மாவட்டம் கோபாலபட்டினம் பகுதியை சேர்ந்த சதக்கத்துல்லா (24), ரகுமான்கான (24), முகமது சியமுதீன் (20) எனவும் அவர்கள் போதை பொருட்களை விற்பனை செய்வதற்காக வைத்திருந்ததும் தெரிய வந்தது.

இதையடுத்து அவர்களிடம் இருந்து 13 கிலோ புகையிலை மற்றும் போதை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News