உள்ளூர் செய்திகள்
கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர்

சிறுபான்மையற்ற தனியார் சுயநிதி பள்ளி மாணவர் சேர்க்கைக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் - கலெக்டர் தகவல்

Published On 2022-05-05 10:04 GMT   |   Update On 2022-05-05 10:04 GMT
தஞ்சை மாவட்டத்தில் சிறுபான்மையற்ற தனியார் சுயநிதி பள்ளி மாணவர் சேர்க்கைக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தகவல் தெரிவித்துள்ளார்.
தஞ்சாவூர்:

தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிரு ப்பதாவது

குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமை சட்டம்-2009 பிரிவு 12(1)(c) இன்படி தஞ்சாவூர்வருவாய் மாவட்டத்தில் உள்ள அனைத்து சிறுபான்மையற்ற தனியார் சுயநிதி பள்ளிகளில் வாய்ப்பு மறுக்கப்பட்ட (எஸ்.சி, எஸ்.டி, பி.சி, எம்.பி.சி மற்றும் டி.என்.சி பிரிவை சேர்ந்தவர்கள்) மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளுக்கு எல்.கே.ஜி.யில் 25 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு சேர்க்கை செய்யப்படுகிறது. இதற்கு குழந்தைகளின் பெற்றோரின் ஆண்டு வருமானம் 2 லட்சத்திற்கும் குறைவாக இருத்தல் வேண்டும்.தஞ்சை வருவாய் மாவட்டத்தில் உள்ள 258 சிறுபான்மைஎன்ற தனியார் சுயநிதி பள்ளிகளில் 3790 இடங்கள் ஆர்.டி.இ. 25 சதவீதம் இட ஒதுக்கீட்டில் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாடு குழந்தைக ளுக்கான இலவசமற்றும் கட்டாய கல்வி உரிமை விதிகள் -2011 விதி எண்.4(1) இன் படி பள்ளியில் இருந்து 1 கிலோ மீட்டருக்குள் வசிப்பவர்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம். இணையதளம் மூலம் அதிகபட்சமாக 5 பள்ளி களுக்கு விண்ணப்பிக்கலாம். சேர்க்கை கோரும் குழந்தை களின் பெற்றோர் rte.tnschool.gov.in என்ற இணையதளத்தில் வருகிற 18-ந் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

இதற்கு குழந்தையின் புகைப்படம், குழந்தையின் பிறப்பு சான்றிதழ், பெற்றோரின் வருமானச் சான்றிதழ், இருப்பிட சான்றிதழ், ஜாதி சான்றிதழ், பெற்றோரின் ஆதார் அட்டை, மேலும் சார்ந்த தனியார் சுயநிதி பள்ளிகள், முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர், வட்டார கல்வி அலுவலர், ஒருங்கிணைந்த பள்ளி கல்வி வட்டார வளமைய அலுவலகங்களில் சேர்க்கை க்கான விண்ணப்பங்களை இணையவழியில் பெற்றோ ர்கள் விண்ணப்பிக்க ஏதுவாக தகுந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Similar News