செய்திகள்
தமிழகம் முழுவதும் குண்டர் சட்டத்தில் கைதாகி சிறையில் இருக்கும் 262 கைதிகள் வாக்களிக்க அனுமதி
தேர்தல் கமிஷனுக்கு சிறை அதிகாரிகள் அறிக்கை அளித்தனர். அதன்படி, கைதிகள் ஓட்டுப்போட சிறப்பு ஏற்பாடு செய்யப்பட உள்ளதாக சிறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
சட்டமன்ற தேர்தலில் கைதிகள் ஓட்டுப்போட தேர்தல் கமிஷன், சிறைத்துறை அதிகாரிகள் ஏற்பாடு செய்துள்ளனர். அதன்படி, சென்னை புழல், 1, 2, கோவை, சேலம், மதுரை, திருச்சி, வேலூர், பாளையங்கோட்டை, கடலூர் ஆகிய மத்திய சிறைகளில் உள்ள குண்டர் தடுப்பு சட்ட கைதிகள் 962 பேரிடம் ஓட்டுப்போட விருப்பம் குறித்து தெரிவிக்க அதிகாரிகள் கேட்டுக்கொண்டனர்.
அதில் 590 பேர் விருப்பம் இல்லை என எழுதிக்கொடுத்தனர். 262 கைதிகள் மட்டும் விருப்பம் தெரிவித்தனர். அவர்களிடம் தேர்தல் கமிஷன் அறிவித்துள்ள 16 ஆவணங்களில் ஒன்று, எந்த தொகுதியில் ஓட்டுரிமை உள்ளது என்ற விபரங்களை கேட்டுள்ளனர்.
அந்த விவரங்களுடன், தேர்தல் கமிஷனுக்கு சிறை அதிகாரிகள் அறிக்கை அளித்தனர். அதன்படி, கைதிகள் ஓட்டுப்போட சிறப்பு ஏற்பாடு செய்யப்பட உள்ளதாக சிறை அதிகாரிகள் தெரிவித்தனர்.