செய்திகள்
செம்பரம்பாக்கம் ஏரி

செம்பரம்பாக்கம் ஏரிக்கு கூடுதல் தண்ணீர் திறப்பு

Published On 2020-10-14 04:24 GMT   |   Update On 2020-10-14 04:24 GMT
பூண்டி ஏரியில் இருந்து செம்பரம்பாக்கம் ஏரிக்கு தண்ணீர் திறப்பு அளவு மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
ஊத்துக்கோட்டை:

சென்னை நகர மக்களுக்கு குடிநீர் வழங்கும் பிரதான ஏரிகளில் ஒன்றான பூண்டி ஏரிக்கு கடந்த மாதம் 21-ந்தேதி முதல் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் பூண்டி ஏரியின் நீர்மட்டம் உயர்த்து வருகிறது. இதனை கருத்தில் கொண்டு செம்பரம்பாக்கம் ஏரிக்கு கடந்த 10-ந்தேதி பொதுத்துறை அதிகாரிகள் தண்ணீர் திறந்து விட்டனர். ஆரம்பத்தில் வினாடிக்கு 140 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டது.

இந்தநிலையில் நேற்று முன் தினம் தண்ணீர் திறப்பு வினாடிக்கு 200 அடியாக அதிகரிக்கப்பட்டது. நேற்று காலை தண்ணீர் திறப்பு அளவு மேலும் அதிகரிக்கப்பட்டது. வினாடிக்கு 330 கன அடியாக திறக்கப்படுகிறது. பூண்டி ஏரியின் உயரம் 35 அடியாகும். 3 ஆயிரத்து 231 மில்லியன் கன அடி தண்ணீரை சேமித்து வைக்கலாம். நேற்று ஏரியின் நீர் மட்டம் 27.77 அடியாக பதிவானது. 1,277 மில்லியன் கன அடி தண்ணீர் இருப்பு உள்ளது. ஏரிக்கு வினாடிக்கு 700 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. இங்கிருந்து சென்னை குடிநீர் வாரியத்துக்கு வினாடிக்கு 15 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.


Similar News