செய்திகள் (Tamil News)

மதுரையில் கேட்டரிங் மாணவர்- ஆட்டோ டிரைவர் மாயம்

Published On 2018-08-27 11:00 GMT   |   Update On 2018-08-27 11:00 GMT
மதுரையில் கேட்டரிங் மாணவர் மற்றும் ஆட்டோ டிரைவர் மாயமான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுரை:

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் பஜனை கோவில் தெருவைச் சேர்ந்தவர் சார்லஸ். இவரது மகன் பேட்ரிக் (வயது 19). கேட்டரிங் படித்து வருகிறார்.

படிப்பில் போதிய திறன் இல்லாததால் ஆங்கில திறனை வளர்த்துக் கொள்வதற்காக பேட்ரிக், மதுரை எஸ்.எஸ்காலனி நாவலர் நகரில் உள்ள தனது தாத்தா சாம்சன் வீட்டில் கடந்த ஜூன் மாதம் முதல் தங்கி இருந்து படித்து வந்தார்.

இந்த நிலையில் கடந்த 18-ந் தேதி தாத்தாவிடம் சொல்லிக்கொள்ளாமல் பேட்ரிக் வீட்டை விட்டு வெளியேறினார்.

அவரது தாயார் சுக்கேஷினி போனில் தொடர்பு கொண்டு கேட்ட போது, திண்டுக்கல்லில் உள்ள நண்பர் வீட்டுக்கு வந்திருப்பதாக தெரிவித்தார். அதன்பிறகு 19-ந் தேதி முதல் பேட்ரிக்கின் செல்போன் சுவிட் ஆப் செய்யப்பட்டு இருந்தது.

அவர் எங்கே சென்றார் என்ற விவரம் தெரியவில்லை. இது குறித்து பேட்ரிக்கின் தாயார் சுக்கேஷினியும், தாத்தா சாம்சனும் கொடுத்த புகாரின் பேரில் எஸ்.எஸ்.காலனி போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கர் கண்ணன் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

மதுரை சோலையழகுபுரம், மகாலட்சுமி கோவில் 3-வது சந்து, அன்னமுத்து காம்பவுண்டைச் சேர்ந்தவர் வெங்கட்ராமன். இவரது மகன் மணிகண்டன் (வயது 34). ஆட்டோ டிரைவரான இவருக்கு திருமணம் ஆக வில்லை.

கடந்த 24-ந் தேதி இரவு மணிகண்டன் வெளியே சென்று வருவதாக கூறி விட்டு மோட்டார் சைக்கிளில் சென்றவர் அதன் பின்னர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடிப்பார்த்தும் தகவல் கிடைக்கவில்லை.

இது குறித்து அவரது தாயார் வசந்தா கொடுத்த புகாரின் பேரில் ஜெய் ஹிந்துபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமணி வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

Tags:    

Similar News