செய்திகள்

கருணாநிதி உடலுக்கு கருப்பு சால்வை போர்த்தி அஞ்சலி செலுத்திய கி.வீரமணி

Published On 2018-08-08 02:19 GMT   |   Update On 2018-08-08 02:19 GMT
திமுக தலைவர் கருணாநிதியின் உடலுக்கு திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி கருப்பு சால்வை போர்த்தி அஞ்சலி செலுத்தினார். #RIPKalaignar #கலைஞர் #DMK #RIPKarunanidhi
சென்னை:

காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த திமுக தலைவர் கருணாநிதி நேற்று மாலை 6.10 மணிக்கு காலமானார். இதனை அடுத்து, ஜனாதிபதி, பிரதமர் உள்பட பல தலைவர்கள் அவரது மரணத்திற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

கருணாநிதியின் உடல் காவேரி மருத்துவமனையில் இருந்து முதலில் கோபாலபுரம் இல்லத்தில் உறவினர்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. இதையடுத்து, அங்கிருந்து சிஐடி காலனிக்கு அவரது உடல் எடுத்துச் செல்லப்பட்டு, அங்கும் பொதுமக்கள் அஞ்சலிக்கு வைக்கப்பட்டது. பின்னர் அங்கிருந்து கருணாநிதியின் உடல்  ராஜாஜி அரங்கத்துக்கு கொண்டு வரப்பட்டது. அங்கு, கருணாநிதி உடலுக்கு முப்படை வீரர்கள் தேசியக் கொடி போர்த்தி அரசு மரியாதை செலுத்தினர்.

அதனைத் தொடர்ந்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள், திரையுலகினர் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, கருணாநிதி உடலுக்கு கருப்பு சால்வை போர்த்தி அஞ்சலி செலுத்தினார். இதேபோல் அமைச்சர்கள் செங்கோட்டையன், ஜெயக்குமார், திண்டுக்கல் சீனிவாசன், வேலுமணி, தங்கமணி, காமராஜ் ஆகியோரும் கருணாநிதிக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர்.

தங்கள் பாசமிகு தலைவனை கடைசியாக ஒருமுறை பார்த்துவிட வேண்டும் என்பதற்காக ராஜாஜி அரங்கத்திற்கு திமுக தொண்டர்கள் படையெடுத்தவண்ணம் உள்ளனர்.
Tags:    

Similar News