செய்திகள்

திருவள்ளூர் அருகே ஆசிரியர்களை மாற்றக்கோரி மாணவர்கள் போராட்டம்

Published On 2018-07-25 11:44 GMT   |   Update On 2018-07-25 11:44 GMT
திருவள்ளூர் அருகே ஆசிரியர்களை மாற்றக்கோரி மாணவ-மாணவிகள் இன்று வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் மாணவர்களின் பெற்றோரும் கலந்து கொண்டனர்.
திருவள்ளூர்:

திருவள்ளூர் அடுத்த தலக்காஞ்சேரியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி உள்ளது. இங்கு தலைமை ஆசிரியர் உட்பட 8 ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். இதில் 46 மாணவிகள் உட்பட 83 பேர் படித்து வருகிறார்கள்.

இந்த பள்ளியில் சரியாக பாடம் எடுக்காத ஆசிரியர்களை மாற்றக்கோரியும், அடிப்படை வசதிகள் செய்து தர வலியுறுத்தியும் அதிகாரிகளிடம் மாணவர்களின் பெற்றோர் புகார் கொடுத்தனர். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இதனால் ஆத்திரமடைந்த மாணவ-மாணவிகள் இன்று வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் மாணவர்களின் பெற்றோரும் கலந்து கொண்டனர்.

இந்த பள்ளியில் ஆசிரியர்கள் பாடங்களை சரிவர நடத்துவதில்லை. ஆங்கில வழிக் கல்வியை இந்த பள்ளியில் கொண்டு வர வேண்டும். அனைத்து ஆசிரியர்களையும் இடமாற்றம் செய்து புதிய ஆசிரியர்களை நியமித்தால் மட்டுமே மாணவர்களின் கல்வித் தரம் உயரும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

தகவல் அறிந்ததும் கல்வித்துறை அதிகாரி குமாரசாமி, வட்டாட்சியர் தமிழ்செல்வன் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் விரைந்து வந்து மாணவர்களின் பெற்றோரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதை தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர்.
Tags:    

Similar News