ஆன்மிகம்
கமுதி முத்துமாரியம்மன் கோவிலில் பெண்கள் முளைப்பாரி ஊர்வலம்

கமுதி முத்துமாரியம்மன் கோவிலில் பெண்கள் முளைப்பாரி ஊர்வலம்

Published On 2021-04-05 05:42 GMT   |   Update On 2021-04-05 05:42 GMT
கமுதி முத்துமாரியம்மன் கோவில் பங்குனி பொங்கல் திருவிழாவில் மேளதாளங்களுடன் ஆயிரக்கணக்கான பெண்கள் முளைப்பாரி ஊர்வலம் நடைபெற்றது.
கமுதி முத்துமாரியம்மன் கோவில் பங்குனி பொங்கல் திருவிழாவில் கடைசி நாளான நேற்று முளைப்பாரி திருவிழா நடைபெற்றது. கோவிலில் இருந்து கேரள செண்டை மேளம் மற்றும் கரகாட்டம், ஒயிலாட்டம் மயிலாட்டம், சிலம்பாட்டம், புலி வேஷம், மேளதாளங்களுடன் ஆயிரக்கணக்கான பெண்கள் முளைப்பாரியை சுமந்து ஊர்வலமாக சென்று செட்டியார்பஜார், கண்ணார்பட்டி வழியாக வந்தடைந்தது.

பின்னர் முளைப்பாரியை மொத்தமாக வைத்து பெண்கள் கும்மியடித்து ஆற்றில் கரைத்தனர். கமுதி நகர் முழுவதும் விழாவை காண ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு இருந்தனர்.

விழா அனைத்து ஏற்பாடுகளையும் சத்திரிய நாடார் உறவின்முறையினர் செய்திருந்தனர்.
Tags:    

Similar News