சினிமா செய்திகள்

'கங்குவா' படத்தின் டப்பிங் பணியைத் தொடங்கிய சூர்யா

Published On 2024-02-21 09:45 GMT   |   Update On 2024-02-21 09:45 GMT
  • உலகத் தரம் வாய்ந்த 'அத்னா ஆர்ட்ஸ்' ஸ்டுடியோவில் டப்பிங் பணி.
  • படத்தின் இறுதி தயாரிப்பைப் பார்த்த சூர்யா பாராட்டு.

தென்னிந்திய திரையுலகில் புகழ்பெற்ற நடிகர் சூர்யா தற்போது 'கங்குவா' என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை இயக்குனர் சிவா, இயக்குகிறார்.

இதில், திஷா பதானி, பாபி தியோல், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி உட்பட பலர் நடிக்கின்றனர். இந்த படத்தின் காட்சிகள் இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளன. தற்போது படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தொடங்கி உள்ளன.

உலகத் தரம் வாய்ந்த 'அத்னா ஆர்ட்ஸ்' ஸ்டுடியோவில் இதற்கான 'டப்பிங்' பணிகள் நடந்து வருகின்றன. இதில் நடிகர் சூர்யா கலந்து கொண்டு 'டப்பிங்' பணியை தொடங்கினார்.

மேலும், சமூகவலைதளத்தில் 'கங்குவா' படத்தின் டப்பிங் பணிகள் தொடங்கிவிட்டதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். ''டப்பிங்' பணியின்போது படத்தின் இறுதி தயாரிப்பைப் பார்த்த சூர்யா திருப்தி அடைந்து இயக்குநர் மற்றும் தொழில்நுட்பக் குழுவினரை பாராட்டினார். 

'கங்குவா' படத்தின் ரிலீஸ் தேதி குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகரித்து வருகின்றன. படம் வெளியீட்டு தேதி குறித்து தயாரிப்பாளர்களிடம் இருந்து அதிகாரப்பூர்வமாக எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.

அதேநேரம், 'கங்குவா' படம் இந்த ஆண்டின் (2024) முதல் பாதியில் வெளியிடப்படும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

Tags:    

Similar News