சினிமா

இரண்டு விஜய்யை ஒரே நேரத்தில் இயக்கும் மூடர் கூடம் நவீன்

Published On 2018-10-31 16:27 GMT   |   Update On 2018-10-31 16:27 GMT
‘மூடர் கூடம்’ படம் மூலம் இயக்குனராக பெயர் பெற்ற நவீன், அடுத்த படத்திற்காக இரண்டு விஜய்யை ஒரே நேரத்தில் இயக்க இருக்கிறார். #Naveen
‘மூடர் கூடம்’ படத்தின் மூலம் இயக்குனராகவும் தயாரிப்பாளராகவும் நடிகராகவும் அறிமுகமானவர் நவீன். விமர்சன ரீதியாக மிகப்பெரிய வெற்றியைப் பெற்றதுடன், இன்றளவும் நினைவுகூரத்தக்கப் படமாகவும் அமைந்துள்ளது. 

இவர் தற்போது புதிய படம் ஒன்று இயக்க இருக்கிறார். இதில் விஜய் ஆண்டனி, அருண் விஜய் நாயகர்களாகவும், ஷாலினி பாண்டே நாயகியாகவும் நடிக்க இருக்கிறார்கள். மேலும், பிரகாஷ் ராஜ், ஜெகபதி பாபு, நாசர் ஆகியோர் நடிக்க இருக்கிறார்கள். அம்மா கிரியேஷன்ஸ் சார்பில் டி.சிவா இப்படத்தை தயாரிக்கிறார்.



இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நாளை வெளியிட இருக்கிறார்கள். மேலும் இப்படத்தின் தொழில் நுட்ப கலைஞர்களின் பட்டியலை விரைவில் வெளியிட இருக்கிறார்கள்.
Tags:    

Similar News