சினிமா

ஐஸ்வர்யாராய் படத்தில் என்னை தவறாக சித்தரித்துவிட்டனர் - ரிச்சா சத்தா வேதனை

Published On 2018-05-16 07:05 GMT   |   Update On 2018-05-16 07:05 GMT
பணம் சம்பாதிப்பதற்காக தான் சினிமாவுக்கு வரவில்லை என்றும், கதாபாத்திரங்கள் மூலம் தனி முத்திரை பதிக்கவே போராடுவதாகவும் நடிகை ரிச்சா சத்தா தெரிவித்துள்ளார். #RichaChadda
கவர்ச்சி நடிகை ஷகிலா வாழ்க்கையை மையமாக வைத்து தயாராகும் படத்தில் ஷகிலா வேடத்தில் நடிப்பவர் ரிச்சா சத்தா. இந்தி திரையுலகில் போராடி முன்னுக்கு வந்துள்ள இவர் ஐஸ்வர்யாராயுடன் இணைந்து சரப்ஜித் இந்தி படத்திலும் நடித்து இருந்தார். சினிமா வாழ்க்கை குறித்து ரிச்சா சத்தா அளித்த பேட்டி வருமாறு:-

“நான் பணம் சம்பாதிக்கும் ஆசையில் நடிக்க வரவில்லை. என்னுடையை ஒவ்வொரு படத்திலும் திறமையை வெளிப்படுத்தி சிறந்த நடிகை என்று பெயர் வாங்குவதைதான் விரும்புகிறேன். கதாபாத்திரங்கள் மூலம் தனி முத்திரை பதிக்க போராடுகிறேன். கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் இருக்கிறதா என்றுதான் பார்ப்பேனே தவிர எவ்வளவு பணம் வருகிறது என்று கணக்கு பார்க்க மாட்டேன்.



அப்படிப்பட்ட என்னை ஐஸ்வர்யாராய் நடித்துள்ள சரப்ஜித் படத்தில் தவறாக சித்தரித்து விட்டனர். அது வேதனையை ஏற்படுத்தியது. அந்த படத்தில் எதற்காகத்தான் நடித்தோமோ? என்று நினைக்க தோன்றியது. அக்னிபத் படத்தில் ஹிருத்திக் ரோஷன் தாயாக நடிக்க வாய்ப்பு வந்தது. வயது குறைந்த என்னை அவருக்கு தாயாக நடிக்க அழைத்தது முட்டாள்தனம். நான் மறுத்து விட்டேன்.

ரூ.100 கோடிக்கு படம் வியாபாரம் ஆகவேண்டும் என்று விரும்பும் தயாரிப்பாளர்கள் தீபிகா படுகோனே போன்ற நடிகைகளைத்தான் அணுகுகிறார்கள்.”

இவ்வாறு அவர் கூறினார். #RichaChadda

Tags:    

Similar News