சினிமா (Cinema)

கதை எழுதுவது எளிது- திரையில் கொண்டு வருவது கடினம்: வெங்கட் பிரபு

Published On 2017-11-21 16:22 GMT   |   Update On 2017-11-21 16:22 GMT
இயக்குனரும், நடிகருமான வெங்கட் பிரபு, ஒரு கதை எழுதுவது மிகவும் எளிது, அதை திரையில் கொண்டு வருவது மிகவும் கடினம் என்று கூறியிருக்கிறார்.
2 மூவி பப்ஸ் ரகுநாதன் மற்றும் அக்ராஸ் பிலிம்ஸ் பிரபு வெங்கடாசலம் தயாரிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘திட்டம் போட்டு திருடுற கூட்டம்‘. கயல் சந்திரன், சாத்னா டைட்டஸ், பார்த்திபன் நடிக்கும் இதை அறிமுக இயக்குனர் சுதர் இயக்கி உள்ளார். அஷ்வத் இசை அமைத்திருக்கிறார். இந்த படத்தின் இசை டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இயக்குனர் ராஜேஷ் வெளியிட வெங்கட் பிரபு பெற்றுக் கொண்டார்.

இயக்குனர் வெங்கட் பிரபு பேசும் போது...

“நம்ம ஊரில் படம் எடுப்பது என்பது மிகவும் கஷ்டமான வி‌ஷயம். கதையாக எழுதி விடலாம், ஆனால் அதை திரையில் கொண்டு வருவது மிகவும் கடினம். அதை இயக்குனர் சுதர் அழகாக செய்திருக்கிறார். என்னையும் பிரேம்ஜியையும் அண்ணன் தம்பிக்கு உதாரணமாக எல்லோரும் சொல்றதுல ரொம்ப பெருமை” என்றார்.

“பிரேம்ஜிக்கு ஒரு அண்ணன் கிடைத்தது போல நாயகன் சந்திரனுக்கும் ஒரு நல்ல அண்ணன் கிடைத்திருக்கிறார். தம்பிக்காக படம் தயாரிப்பது, கதை கேட்பது என எல்லாம் செய்து கொடுக்கும் பாசமான அண்ணன் ரகுநாதன். வளர்த்து விட்ட தயாரிப்பாளர்களை மறந்து விட்டு, பல நடிகர்கள் சொந்த தயாரிப்பில் நடிக்க போய் விட்டார்கள்” என்று கூறினார்.

“‘சிவலிங்கா’, ‘குற்றம் 23’ படங்களை ரிலீஸ் செய்யும் பிசியில் கூட, இந்த படத்தின் கதையை கேட்டு உடனடியாக பண்ணலாம் என ஓகே சொன்னார்கள். என் அண்ணன் லட்சக்கணக்கில் சம்பாதித்துக் கொண்டிருந்த வேலையை விட்டு விட்டு, கோடிக் கணக்கில் பணம் போட்டு எனக்காக படத்தை தயாரித்திருக்கிறார்” என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார் சந்திரன்.

விழாவில் இயக்குனர் சுதர், இசையமைப்பாளர் அஷ்வத் மற்றும் படக்குழுவினர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News