என் மலர்
தொழில்நுட்பம்
- டீப்சீக் ஏஐ, அமெரிக்காவுக்கான எச்சரிக்கை மணி என்று டிரம்ப் கூறியுள்ளார்
- டீப்சீக் ஏஐ, அனைத்து நவீன வசதிகளையும் இலவசமாக வழங்குகிறது.
செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பம் உலக அளவில் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கியுள்ளது. இப்போதுவரை இந்த ஏஐ தொழில்நுட்பத்தில் ஓபன் ஏஐ - சாட்ஜிபிடி, கூகுள் - ஜெமினி ஆகியவையே அமெரிக்க நிறுவனகளே கோலோச்சி வந்தன.
இந்நிலையில் அவற்றுக்கு சவால் விடும் வகையில் சீன நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள புதிய ஏஐ மாடல் அமைந்துள்ளது. இது ஏஐ உலகில் புரட்சியை ஏற்படுத்தும் என்று நம்பப்படுகிறது.
2023ஆம் ஆண்டில் சீன குவாண்ட் ஹெட்ஜ் ஃபண்ட் தலைவரான லியாங் வென்ஃபெங் என்பவரால் தொடங்கப்பட்ட நிறுவனம் டீப்சீக் (Deepseek).
இந்த நிறுவனம் தற்போது டீப்சீக், ஆர்1 மற்றும் ஆர்1 ஜீரோ என்ற இரு ஏஐ மாடல்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் ஆர்1 மாடல் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. ஆர்1 என்பது வழக்கமான ஏஐ மாடல் ஆகும். இன்னும் பயன்பாட்டுக்கு வாராத ஆர்1 ஜீரோ தானாகவே கற்பித்துக்கொள்ளும் (self-taught) ஏஐ மாடல் ஆகும். அமெரிக்க நிறுவனங்களை விட குறைவாக 6 மில்லியன் டாலர்கள் செலவில் டீப்சீக் ஏஐ உருவாக்கப்பட்டுள்ளது.

டீப்சீக் ஏஐ மாடல் வருகையால் அமெரிக்க நிறுவனங்கள் ஆட்டம் கண்டுள்ளன. ஏனெனில் டீப்சீக் ஏஐ முற்றிலும் இலவசமாகும். தற்போது சந்தையில் உள்ள சாட்ஜிபிடி, ஜெமினி ஆகியவை பயனர்களுக்குப் பழைய வெர்ஷன்களை மட்டுமே இலவசமாக வழங்குகிறது. புதிய அம்சங்களுக்குக் கட்டணம் பெறுகிறது. ஆனால் டீப்சீக் ஏஐ, அனைத்து நவீன வசதிகளையும் இலவசமாக வழங்குகிறது.
மேலும் டீப்சீக் ஏஐ மாடலை இயக்கும் செலவும் குறைவாகும். ஓபன் ஏஐ மாடலை இயக்க 10 இன்புட் டோக்கன்கள் தேவை, அதற்கு 15 டாலர் செலவாகும். ஆனால் டீப்சீக் மாடலில் அதே 10 இன்புட் டோக்கன்கள் செலவு 0.55 டாலர்கள் மட்டுமே. அதாவது ஓபன் ஏஐ மாடலை விட டீப் சீக் மாடலை இயக்க 27 மடங்கு குறைவாகவே செலவாகிறது.

மேலும் சாட்ஜிபிடி மற்றும் ஜெமினி ஆகியவை க்ளோஸ்ட்டு சோர்ஸ் ஏஐ மாடல்கள். ஆனால் டீப்சீக் ஏஐ ஓபன் சோர்ஸ் ஏஐ மாடல், அதவாது, யார் வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் இதை அணுக முடியும் என்பது இதன் தனிச்சிறப்பு. எனவே அமெரிக்க நிறுவனங்கள் இந்த புதிய போட்டியாளரை கண்டு நடுக்கத்தில் உள்ளன. பங்குச்சந்தையிலும் டீப்சீக் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.
மியாமியில் நடந்த கூட்டத்தில் பேசிய அமெரிக்க அதிபர் டொனல்டு டிரம்ப், டீப்சீக் ஏஐ, அமெரிக்காவுக்கான எச்சரிக்கை மணி என்று பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே சாட்ஜிபிடி ஐ விஞ்சி ஆப்பிளின் US ஸ்டோரில் அதிகமாக இன்ஸ்டால் செய்யப்பட்டு வருகிறது. டீப்சீக் செயலி உலகளவில் அளவுக்கு அதிகமான டவுன்லோட்களை கடந்து அசத்தியது.
மிக குறுகிய காலக்கட்டத்தில் மிகவும் பிரபலம் அடைந்த நிலையில், டீப்சீக் தளத்தை குறிவைத்து சைபர் தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. இதையடுத்து, டீப்சீக் சேவையை பயன்படுத்த வழிவகை செய்யும் பதிவு முறையை அந்நிறுவனம் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.
- ஒரே App-ல் பல கணக்குகளை பயன்படுத்தும் அம்சத்தை வாட்ஸ் அப்பில் மெட்டா விரைவில் கொண்டு வரவுள்ளது.
- Account-ஐ ஸ்விட்ச் செய்து பயன்படுத்தி கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகளவில் பிரபலமான மெட்டா நிறுவனம் பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ் அப் உள்ளிட்டவை இயக்கி வருகிறது.
இந்தியாவில் மட்டும் சுமார் 35 கோடி பேர் பேஸ் புக்கையும், 50 கோடி பேர் வாட்ஸ் அப்பையும் பயன்படுத்தி வருகின்றனர்.
வாட்ஸ் அப் வந்த ஆரம்ப காலத்தைவிட தற்போது பல்வேறு அப்டேட்டுகளை மெட்டா நிறுவனம் கொண்டு வந்துள்ளது.
அந்த வகையில், இன்ஸ்டாகிராமில் இருப்பது போன்று ஒரே App-ல் பல கணக்குகளை பயன்படுத்தும் அம்சத்தை வாட்ஸ் அப்பில் மெட்டா விரைவில் கொண்டு வரவுள்ளது.
இதன்மூலம், Account-ஐ ஸ்விட்ச் செய்து பயன்படுத்தி கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாட்ஸ் அப்பில் ஏற்கனவே ஸ்விட்ச் அக்கவுண்ட் என்கிற ஆப்ஷன் உள்ளது. அதில் நுழைவதன் மூலம் மற்றொரு வாட்ஸ் அப் அக்கவுண்டுக்குள் நுழைய முடியும்.
ஆனால் இது இன்ஸ்டாவில் வருவது போன்று ஒரே வாட்ஸ் அப் கணக்கின் மூலம் பல கணக்குகளை பயன்படுத்தும் அம்சமாக விரைவில் வர இருக்கிறது.
- ஜோஹோ கார்ப்ரேஷன் உலகில் 50க்கும் அதிகமான நாடுகளில் மென்பொருள் சேவை வழங்குவதில் முன்னிலை வகித்து வருகிறது .
- மணி வேம்பு Zoho.com பிரிவையும் தொடர்ந்து வழிநடத்துவார் என ஸ்ரீதர் வேம்பு தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தின் முன்னணி சாப்ட்வேர் நிறுவனமான ஜோஹோ (ZOHO) இன் தலைமை நிர்வாக அதிகாரி பொறுப்பில் இருந்து ஸ்ரீதர் வேம்பு விலகியுள்ளார்.
சென்னையை தலைமையிடமாகக் கொண்ட ஜோஹோ கார்ப்ரேஷன் உலகில் 50க்கும் அதிகமான நாடுகளில் மென்பொருள் சேவை வழங்குவதில் முன்னிலை வகித்து வருகிறது.
இந்நிலையில் ஜோஹோ நிறுவனத்தின் சிஇஓ பொறுப்பில் இருந்து விலகியுள்ள ஸ்ரீதர் வேம்பு, Chief Scientist என்ற புதிய பொறுப்பை ஏற்க உள்ளார்.
நிறுவனத்தின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு முயற்சிகளுக்கு தலைமை தாங்குவார் என்று கூறப்படுகிறது. மென்பொருள் தொழில் செயற்கை நுண்ணறிவு [ஏஐ] உள்ளிட்டவற்றின் வருகையால் மாற்றம் கண்டுவரும் நிலையில் ஜோஹோ நிறுவனத்திலும் இந்த மாற்றம் நிகழ்கிறது.

தொடர்ந்து ஜோஹோ இணை நிறுவனரான ஷைலேஷ் குமார் புதிய சிஇஓ ஆக நியமிக்கப்பட்டு உள்ளார்.
மற்றொரு இணை நிறுவனரான டோனி தாமஸ், ஜோஹோ US பிரிவின் தலைமை பொறுப்பை ஏற்க உள்ளார்.
ராஜேஷ் கணேசன் ManageEngine பிரிவையும், மணி வேம்பு Zoho.com பிரிவையும் தொடர்ந்து வழிநடத்துவார்கள் என ஸ்ரீதர் வேம்பு தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
- இந்தப் பணம் அனைத்தும் ஏஐ தொழில்நுட்பத்தை வளர்ப்பதற்கு அல்ல
- ஆனால் மைக்ரோசாஃப்ட், ஓபன் ஏஐ... என்று டிரம்ப் அவர்களை சீண்டும் விதமாக பதிவிட்டிருந்தார்.
அமெரிக்க அதிபராக பதவியேற்ற டொனால்டு ட்ரம்ப் கடந்த செவ்வாய்க்கிழமை ஸ்டார்கேட் என்ற ஏ.ஐ. திட்டத்தை அறிவித்தார்.
ஓபன் ஏஐ, ஜப்பானிய நிறுவனமான SoftBank மற்றும் மைக்ரோசாஃப்டின் கிளவுட் நிறுவனமான Oracle ஆகியவற்றின் பங்களிப்பில் செயற்கை நுண்ணறிவு உள்கட்டமைப்பை உருவாக்கும் திட்டமே ஸ்டார்கேட்.
ஸ்டார்கேட் திட்டம் மூலம் மேற்கூறிய நிறுவனங்கள் உதவியுடன் அமெரிக்காவில் ஏஐ உள்கட்டமைப்பு உருவாக்கத்துக்கு 500 பில்லியன் டாலர்கள் முதலீடு செய்யப்படும் என்று டிரம்ப் கூறினார்.
ஆனால் எக்ஸ், ஸ்பெஸ் எக்ஸ், டெஸ்லா ஆகியவற்றின் உரிமையாளரும் டிரம்பின் கூட்டாளியுமான எலான் மஸ்க், அவர்களிடம் [அந்த நிறுவனங்களிடம்] அவ்வளவு பணம் இல்லை என்று எக்ஸ் பதவில் தெரிவித்திருந்தார். SoftBank நிறுவனம் 10 பில்லியன் வரை தரும், ஆனால் மைக்ரோசாஃப்ட், ஓபன் ஏஐ... என்று மஸ்க் அவர்களை சீண்டும் விதமாக பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில் CNBC செய்தி நிறுவன நேர்காணலின் போது, மஸ்க்கின் கூற்றுகளுக்கு பதிலளித்த மைக்ரோசாஃப்ட் நிறுவனர் சத்ய நாதெல்லா, என்னால் 80 பில்லியன் டாலர்கள் வரை [ஸ்டார்கேட் திட்டத்தில்]செலவழிக்க முடியும் என்று தெரிவித்தார்.
மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தை நம்பலாம். இந்தப் பணம் அனைத்தும் ஏஐ தொழில்நுட்பத்தை வளர்ப்பதற்கு அல்ல, ஆனால் நிஜ உலகத்திற்காக பயனுள்ள விஷயங்களை உருவாக்குவதே என்றும் அவர் தெரிவித்தார்.
அவர்களிடம் பணம் இல்லை என எலான் மஸ்க் கருத்தை ஓபன் ஏஐ சிஇஓ சால்ம் ஆல்ட்மேனும் நிராகரித்துள்ளார். ஸ்டார்கேட் திட்டத்திற்கான ஏஐ பரிசோதனையை வேலைகள் ஏற்கனவே தாங்கள் தொடங்கிவிட்டதாகவும், அதை மஸ்க் வந்து பார்க்கலாம் என்று கூறியுள்ளார்.
- வாய்ஸ் கால்' மற்றும் எஸ்எம்எஸ் சேவைகளுக்கு தனியாக ரீசார்ஜ் 'பிளான்' வழங்குவது கட்டாயமாக்கப்பட்டது.
- பட்டன் போன்களை இன்னும் இந்தியாவில் 15 கோடி மக்கள் பயன்படுத்துகின்றனர்.
இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRAI) டெலிகாம் நிறுவனங்களின் கட்டண வழிகாட்டு நெறிமுறைகளில் திருத்தும் கொண்டு வந்துள்ளது.
அதன்படி இணைய சேவையை பயன்படுத்தாத வாடிக்கையாளர்களுக்கு, 'வாய்ஸ் கால்' [டாக்-டைம்] மற்றும் எஸ்எம்எஸ் (SMS) சேவைகளுக்கு தனியாக ரீசார்ஜ் 'பிளான்' வழங்குவது கட்டாயமாக்கப்பட்டது.
அதன்படி, வாய்ஸ் கால் மற்றும் எஸ்எம்எஸ் சேவைக்கு தனித்தனியே ரீசார்ஜ் செய்யும் திட்டங்களை ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள் அறிமுகப்படுத்தியுள்ளது.
தொலை தூர பகுதிகள் மற்றும் கிராமபுறங்களில், 2ஜி நெட்வொர்க்குகள் கொண்ட பட்டன் போன்களை இன்னும் இந்தியாவில் 15 கோடி மக்கள் பயன்படுத்துகின்றனர். இதனால் அழைப்பு மற்றும் குறுஞ்செய்தி (SMS) சேவைகளை மட்டுமே வேண்டும் வாடிக்கையாளர்கள் பயனடைவார்கள் என்று சொல்லப்படுகிறது.
ஜியோவில் 458 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் 84 நாட்களுக்கு அன்லிமிடெட் வாய்ஸ் கால் மற்றும் 1,000 எஸ்எம்எஸ் சேவைகளை பயன்படுத்தி கொள்ளலாம்.
முன்னதாக, இதே திட்டத்தின் விலை 479 ரூபாயாக இருந்தது. அதில், 84 நாட்களுக்கு அன்லிமிடெட் வாய்ஸ் கால், 6ஜிபி டேட்டா மற்றும் 1,000 எஸ்எம்எஸ் சேவைகள் அடங்கும். இந்நிலையில், புதுப்பிக்கப்பட்ட இந்த திட்டம் ரூ. 21 குறைவானதாகும்.
- சாம்சங் கேலக்ஸி S25, S25+ மற்றும் S25 Ultra ஆகிய 3 மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
- சாம்சங் கேலக்ஸி S25ன் ஆரம்ப விலை ரூ. 80.999 ஆக நிர்ணயிக்கப்பட்டது.
இந்தியாவில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட Samsung Galaxy S25 Series மொபைல் போன்கள் நேற்று வெளியாகின.
சாம்சங் கேலக்ஸி அன்பேக்டு 2025 நிகழ்ச்சி நேற்று அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கொ மாகாணத்தில் நடைபெற்றது.
ஜெமினி ஏஐ வசதியுடன் சாம்சங் கேலக்ஸி S25, S25+ மற்றும் S25 Ultra ஆகிய 3 மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. S25ன் ஆரம்ப விலை ரூ. 80.999 ஆகவும், S25+ன் ஆரம்ப விலை ரூ. 99,999 ஆகவும், S25 Ultraன் ஆரம்ப விலை ரூ. 1.29,999 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சாம்சங் கேலக்ஸி S24 இந்த ஆரம்ப விலையை விட சாம்சங் கேலக்ஸி S25 இன் ஆரம்ப விலை வெறும் 1000 ரூபாய் மட்டும் தான் அதிகமாகும். ஆனால் S24 இல் 8GB ரேம் மட்டுமே வழங்கப்பட்ட நிலையில், S25 இல் 12GB ரேம் வழங்கப்பட்டுள்ளது.
அமேசான், பிளிப்கார்ட் உள்ளிட்ட தளங்களில் இன்று முதல் சாம்சங் கேலக்ஸி S25 சீரிஸ் மொபைல் போன்களை ஆர்டர் செய்து கொள்ளலாம். பிப்ரவரி 7 முதல் மொபைல் போன்கள் டெலிவரி செய்யப்படும் என்று அறிவிக்கப்ட்டுள்ளது.
- இந்தியாவின் மிகப்பெரிய டிஜிட்டல் தளத்தை உருவாக்குவதற்காக கூட்டணி.
- நிதி சார்ந்த சேவைகளை ஏர்டெல் தேங்ஸ் செயலியில் வழங்கும்.
இந்தியாவின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்களில் ஒன்று பாரதி ஏர்டெல். இந்த நிறுவனம் நாட்டின் மிகப்பெரிய தனியார் துறை வங்கி சாரா நிதி நிறுவனமான (NBFC) பஜாஜ் ஃபைனான்ஸ் உடன் ஒன்றிணைந்து நிதி சேவைகளுக்கான இந்தியாவின் மிகப்பெரிய டிஜிட்டல் தளத்தை உருவாக்குவதற்காக கூட்டணி அமைத்துள்ளது.
இது குறித்த அறிவிப்பை ஏர்டெல் மற்றும் பஜாஜ் ஃபைனான்ஸ் நிறுவனங்கள் இணைந்து வெளியிட்டுள்ளன. இந்தக் கூட்டணி மூலம், ஏர்டெல் நிறுவனம் பஜாஜ் ஃபைனான்ஸ்-இன் நிதி சார்ந்த சேவைகளை அதன் ஏர்டெல் தேங்ஸ் செயலியில் வழங்கும். பின்னர் அதன் நாடு தழுவிய கடைகள் மூலம் வழங்கும்.
டிஜிட்டல் சொத்துக்களின் ஒருங்கிணைந்த வலிமை, ஏர்டெல் மற்றும் பஜாஜ் ஃபைனான்ஸ் நிதி தயாரிப்புகள் மற்றும் சேவைகளின் ஊடுருவலை ஆழப்படுத்த இந்த திட்டம் உதவும் என்று இரு நிறுவனங்களும் தெரிவித்துள்ளன. கூட்டணியின் ஒரு பகுதியாக, இரு நிறுவனங்களும் தரவு தனியுரிமை - பாதுகாப்பு, தடையற்ற வாடிக்கையாளர் சேவை மற்றும் ஒழுங்குமுறை இணக்கத்தை உறுதி செய்யும்.
இந்தக் கூட்டாணி ஏர்டெல்லின் 375 மில்லியன் வாடிக்கையாளர் தளத்தையும், 12 லட்சத்திற்கும் அதிகமான விநியோக வலையமைப்பு, பஜாஜ் ஃபைனான்ஸ்-இன் 27 சேவைகள் மற்றும் 5,000-க்கும் அதிக கிளைகள் மற்றும் 70,000 கள முகவர்களின் பன்முகப்படுத்தப்பட்ட தொகுப்பையும் ஒன்றிணைக்கிறது.
- பாந்த்ரா குர்லா வளாகத்தில் (BKC) 6,526 சதுர அடியை குத்தகைக்கு எடுத்துள்ளது.
- வணிக பயன்பாட்டுக்கான இடத்தை ஐந்து ஆண்டுகளுக்குக் குத்தகைக்கு எடுத்துள்ளது.
நாட்டிலேயே இதுவரை இல்லாத அளவுக்கு அதிகமான வாடகையில் ஆப்பிள் இந்தியா புதிய இடத்தை குத்தகைக்கு எடுத்துள்ளது.
ஆப்பிள் இந்தியா பிரைவேட் லிமிடெட் மும்பையில் உள்ள பாந்த்ரா குர்லா வளாகத்தில் (BKC) 6,526 சதுர அடி இடத்தை ஒரு சதுர அடிக்கு ரூ.738 மாத வாடகைக்கு எடுத்துள்ளது என்று சொத்துப் பதிவு ஆவணங்கள் தெரிவிக்கின்றன. அதாவது ஒரு மாத வாடகை மட்டுமே ரூ.48.19 லட்சம் ஆகும்.
Proptstack.co ஆவணங்களின்படி, கலிபோர்னியாவின் குபெர்டினோவைத் தலைமையிடமாகக் கொண்ட அமெரிக்க பன்னாட்டு தொழில்நுட்ப நிறுவனமான ஆப்பிளின் இந்திய பிரிவு, ஆப்பிள் இந்தியா பிரைவேட் லிமிடட்,Maker Maxity-5 என்ற கட்டிடத்தில் வணிக பயன்பாட்டுக்கான இடத்தை ஐந்து ஆண்டுகளுக்குக் குத்தகைக்கு எடுத்துள்ளது. டிசம்பர் 31 2028 வரை இந்த குத்தகை தொடரும்.
- தள்ளுபடி சலுகைகள் சமீபத்திய மாடல்களில் குறைவாகவும் பழைய மாடல்களில் அதிகமாகவும் இருக்கும்.
- ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 9 (ஜி.பி.எஸ்.) விலை 45mm மாடல் குரோமாவில் ரூ.33,990-ல் தொடங்குகிறது.
ஐபோன் 15 மற்றும் ஐபோன் 16 சீரிஸ் மாடல்கள் ஆன்லைனில் தள்ளுபடி செய்யப்பட்ட விலையில் விற்கப்பட்டு வருகின்றன. நீங்கள் ஐபோன்களில் ஏதேனும் ஒன்றை வாங்கி விட்டு, ஒரு நல்ல ஆப்பிள் வாட்ச் வாங்க விரும்பினால், அதை செய்வதற்கு இதுவே சரியான நேரம். ஆப்பிள் நிறுவன ஸ்மார்ட்வாட்ச் மாடல்கள் இப்போது குறைந்த விலையில் கிடைக்கின்றன.
குடியரசு தின விழா விற்பனையில் க்ரோமா, அமேசான் மற்றும் பல தளங்களில் ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 10, ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 9, ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 8 மற்றும் ஆப்பிள் வாட்ச் எஸ்.இ. 2 ஆகிய மாடல்கள் இந்த இணையதளங்களில் குறைந்த விலையில் கிடைக்கின்றன. தள்ளுபடி சலுகைகள் சமீபத்திய மாடல்களில் குறைவாகவும் பழைய மாடல்களில் அதிகமாகவும் இருக்கும்.
அதன்படி 42mm ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 10 (ஜி.பி.எஸ்.) ரூ. 44,990 தள்ளுபடி விலையில் குரோமாவில் விற்கப்படுகிறது. இந்த மாடலின் உண்மை விலை ரூ.46,900. அந்த வகையில் இதனை வாங்குபவர்களுக்கு ரூ.1,910 தள்ளுபடி கிடைக்கும்.
இது தவிர, ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி, எஸ்.பி.ஐ. வங்கி மற்றும் கோடக் வங்கி கிரெடிட் கார்டுகளுக்கு கூடுதலாக ரூ.2,500 தள்ளுபடியும் உள்ளது. இதை சேர்க்கும்போது, இந்த மாடலின் விலை ரூ. 42,490 ஆக குறைந்துவிடும். இதன் மூலம் ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 10 வாங்குவோர் மொத்தமாக ரூ. 4,410 வரை தள்ளுபடி பெறலாம்.
ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 9 (ஜி.பி.எஸ்.) விலை 45mm மாடல் குரோமாவில் ரூ.33,990-ல் தொடங்குகிறது. இந்த ஆப்பிள் வாட்ச் இந்தியாவில் ரூ.44,900-க்கு விற்கப்படுகிறது. இதில் வாடிக்கையாளர்கள் ரூ.10,910 தள்ளுபடியை பெற முடியும். இதற்கான எந்த வங்கி சலுகையும் குரோமாவில் இல்லை.
ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 8 (ஜி.பி.எஸ்.) வாங்க விரும்புபவர்கள் அதை ரூ.30,490 என்ற குறைந்த விலையில் பெற முடியும், இது 45mm மிட்நைட் அலுமினியம் மாடலுக்கான விலை ஆகும். ஆப்பிள் வாட்ச் 8 உடன் ஒப்பிடும்போது வெறும் ரூ.3,500 அதிகம் செலவழித்து ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 9 மாடலை வாங்குவது நல்லது. தேர்ந்தெடுக்கப்பட்ட வங்கி கார்டுகளில் ரூ. 2,500 வரை தள்ளுபடி சலுகையும் உள்ளது.
கடைசியாக, குறைந்த பட்ஜெட்டில் வாங்க நினைப்பவர்கள் ஆப்பிள் வாட்ச் எஸ்.இ. 2 (ஜி.பி.எஸ்., 40mm) வாங்கலாம். இந்த மாடல் அமேசானில் ரூ.19,999 எனும் மிக குறைந்த விலையில் விற்கப்படுகிறது. இது அதன் வெளியீட்டு விலையான ரூ.29,900-ல் இருந்து குறைந்துள்ளது. இந்த இரண்டாம் தலைமுறை ஆப்பிள் வாட்ச் எஸ்.இ. மாடலில் வாடிக்கையாளர்கள் ரூ.9,901 தள்ளுபடி பெறலாம்.
- இந்த இன்ட்ரா சர்க்கிள் ரோமிங் (ICR) வசதியை அரசு அறிமுகப்படுத்தி உள்ளது.
- 27,000 டவர்களைப் பயன்படுத்தி, 35,400க்கும் மேற்பட்ட கிராமப்புற மற்றும் தொலைதூர கிராமங்களுக்கு தடையற்ற 4G இணைப்பு வழங்கப்படும்.
ஜியோ, பிஎஸ்என்எல் மற்றும் ஏர்டெல் பயனர்கள் சந்திக்கும் சிக்னல் பிரச்சனைகளுக்கு புதிய தீர்வு பிறந்துள்ளது. இந்த சிம்களை பயன்படுத்துவோர் தங்கள் நெட்வொர்க் சிக்னல் கிடைக்காமல் போனாலும் மற்ற நிறுவங்களின் சிக்னலை பயன்படுத்தி 4G வாய்ஸ் கால் செய்யும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
ஜனவரி 17 அன்று, டிஜிட்டல் பாரத் நிதி (DBN) திட்ட நிகழ்வின்போது போது இந்த இன்ட்ரா சர்க்கிள் ரோமிங் (ICR) வசதியை அரசு அறிமுகப்படுத்தி உள்ளது. இருப்பினும் DBN திட்டத்தின் கீழ் டவர்கள் இருக்கும் இடங்களில் மட்டும் இந்த சேவை அமலுக்கு வந்துள்ளது.
சுமார் 27,000 டவர்களைப் பயன்படுத்தி, 35,400க்கும் மேற்பட்ட கிராமப்புற மற்றும் தொலைதூர கிராமங்களுக்கு தடையற்ற 4G இணைப்பு வழங்களை மேம்படுத்துவதை இந்த முயற்சி நோக்கமாகக் கொண்டுள்ளது.
- இன்ஸ்டாகிராம் செயலியை இளைஞர்கள் தான் அதிக அளவில் பயனபடுத்துகின்றனர்.
- முன்னதாக, இன்ஸ்டாகிராமில் 90 விநாடிகள் வரையிலான ரீல்ஸ் வீடியோக்களை பதிவேற்றம் செய்து கொள்ளும் வசதி இருந்தது.
உலகின் முன்னணி சமூக வலைதள செயலிகளில் ஒன்றாக இன்ஸ்டாகிராம் விளங்குகிறது. இந்த செயலியில் இளம் தலைமுறையை சேர்ந்த ஆண்களும் பெண்களும் தங்களது புகைப்படம் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து லைக்குகளை குவிப்பார்கள்.
இந்நிலையில், இன்ஸ்டாகிராம் ரீல்ஸில் இனி 3 நிமிடங்கள் வரையிலான வீடியோக்களை பதிவேற்றம் செய்து கொள்ளலாம் என்ற புதிய அப்டேட்டை இன்ஸ்டாகிராம் நிறுவனம் அறிவித்துள்ளது
முன்னதாக, இன்ஸ்டாகிராமில் 90 விநாடிகள் வரையிலான ரீல்ஸ் வீடியோக்களை பதிவேற்றம் செய்து கொள்ளும் வசதி இருந்தது.
கடந்த ஆண்டு இன்ஸ்டாகிராமில் ஒரே நேரத்தில் பதிவிட முடியும் புகைப்படங்களின் எண்ணிக்கையை 10ல் இருந்து 20 ஆக மெட்டா நிறுவனம் உயர்த்தியது என்பது குறிப்பிடத்தக்கது.
- டாடா நிறுவனத்தின் கடந்த ஆண்டு ஐபோன் ஏற்றுமதி 125 சதவீதம் உயர்ந்துள்ளது.
- டாடாவின் நர்சபுரா ஆலையில் கடந்தாண்டு 31,000 ஊழியர்கள் வேலை செய்துள்ளனர்.
ஆப்பிள் நிறுவனம் ஐபோன் உற்பத்தியை இந்தியாவில் கடந்த 2017-ம் ஆண்டு தொடங்கியது. பாக்ஸ்கான் நிறுவனம் ஸ்ரீபெரும்புதூரில் ஐ-போன் செல்போன்களை உற்பத்தி (Assembly) செய்கிறது.
இந்தியாவில் பாக்ஸ்கான், விஸ்ட்ரான், பெகட்ரான் ஆகிய நிறுவனங்கள் ஐ-போன் தயாரித்து ஏற்றுமதி செய்கிறது.
இந்நிலையில், கர்நாடகாவின் நர்சபுராவில் உள்ள விஸ்ட்ரான் நிறுவனத்தை டாடா குழுமம் 125 மில்லியன் டாலருக்கு (இந்திய மதிப்பில் கிட்டத்தட்ட ரூ.1000 கோடி) கடந்த வருடம் அக்டோபர் மாதம் கையகப்படுத்தியது.
நர்சபுரா ஆலையின் ஆண்டு உற்பத்தி கடந்தாண்டு மட்டும் ரூ. 40,000 கோடியாக உயர்ந்துள்ளது. இது முந்தைய 2023 ஆம் ஆண்டை விட 180 சதவீதம் அதிகமாகும்.
இந்நிறுவனத்தின் கடந்த ஆண்டு ஐபோன் ஏற்றுமதி 125 சதவீதம் உயர்ந்துள்ளது. அதாவது 2024 ஆம் ஆண்டில் மட்டும் ஏற்றுமதி ரூ.31,000 கோடியாக அதிகரித்துள்ளது.
2023 ஆண்டு இந்நிறுவனத்தில் 19,000 ஊழியர்கள் பணியாற்றிய நிலையில் கடந்தாண்டு 31,000 ஊழியர்கள் வேலை செய்துள்ளனர். இது கிட்டத்தட்ட 63% அதிகமாகும்.
இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் ஐபோன்களில் இந்த நிறுவனம் மட்டுமே 26% ஐபோன்களை உற்பத்தி செய்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்தாண்டு செப்டம்பர் மாதம் தமிழ்நாட்டின் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் அருகே உள்ள டாடா எலக்ட்ரானிக்ஸ் தொழிற்சாலையில் ஒரு பெரிய தீ விபத்து ஏற்பட்டது.
இதனையடுத்து அந்த ஆலையில் ஐபோன் உதிரிப்பாகங்களின் உற்பத்தி பாதிக்கப்பட்டது. அதன் பிறகும் டாடா நிறுவனம் ஐபோன் உற்பத்தியை அதிகரித்துள்ளது.






