search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரெயில்வே போலீஸ்"

    • போலீஸ்காரர் சேத்தன்சிங்சவுத்ரி பணியில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளார்.
    • உத்தரவை மும்பை சென்ட்ரல் ஆர்.பி.எப். மூத்த பிரிவு பாதுகாப்பு ஆணையர் பிறப்பித்துள்ளார்.

    மும்பை:

    ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் இருந்து மும்பை சென்ற சென்ட்ரல் அதிவிரைவு ரெயிலில் கடந்த 31-ந்தேதியன்று ரெயில்வே பாதுகாப்பு படையை சேர்ந்த போலீஸ்காரர் சேத்தன்சிங் சவுத்ரி என்பவர் தன்னுடன் பயணம் செய்த போலீஸ் அதிகாரி திகாரம் மீனா மற்றும் 3 பயணிகள் என 4 பேரை சுட்டுக்கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    இதைத்தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி னர். அவருக்கு மனநல மருத்துவ பரிசோதனையும் செய்யப்பட்டது. இந்நிலையில் போலீஸ்காரர் சேத்தன்சிங்சவுத்ரி பணியில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளார்.

    இதற்கான உத்தரவை மும்பை சென்ட்ரல் ஆர்.பி.எப். மூத்த பிரிவு பாதுகாப்பு ஆணையர் பிறப்பித்துள்ளார். 

    • சேலம் அருகே ரெயிலில் அடிபட்டு ஒருவர் பலியானார்.
    • அவர் யார் என்று போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

    சேலம்:

    சேலம்- வீரபாண்டி ரெயில் நிலையங்களுக்கிடையே நேற்று முன்தினம் சுமார் 55 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் ரெயிலில் அடிபட்டு இறந்து கிடந்தார். இது பற்றி சேலம் ரெயில் நிலைய அதிகாரி கொடுத்த புகாரின் பேரில் சேலம் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து, இறந்த நபருடைய உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இறந்த நபர் பெயர்? மற்றும் எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது தெரியவில்லை. இதனால், அவரது உடலை உறவினர்களிடம் ஒப்படைக்க முடியாத நிலை உள்ளது. இறந்த நபர் நீலம் மற்றும் பச்சை நிறத்தில் கட்டம் போட்ட சட்டை, அதே நிறத்தில் லுங்கி அணிந்திருந்தார்.

    பச்சை, வெள்ளை நிறம் கலந்த துண்டு வைத்திருந்தார். அவருடைய வலது பக்க கன்னத்தில் ஒரு கருப்பு மச்சம் காணப்படுகிறது என போலீசார் தெரிவித்தனர். அவரை பற்றி அறிந்தவர்கள் சேலம் ரெயில்வே போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுக்கலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

    ×