search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மது பாட்டில்கள்"

    • எதிர்பாராத விதமாக லாரி சாலையின் நடுவே உள்ள தடுப்பு சுவரில் மோதி சாலையில் கவிழ்ந்தது.
    • மற்றொரு லாரி கொண்டுவரப்பட்டு மது பாட்டில்கள் ஏற்றி அனுப்பப்பட்டன.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், அனந்தபூரில் இருந்து மது பாட்டில்களை ஏற்றிக் கொண்டு லாரி ஒன்று விசாகப்பட்டினம் நோக்கி சென்று கொண்டிருந்தது.

    மதுரவாடா என்ற இடத்தில் தேசிய நெடுஞ்சாலையில் லாரி சென்று கொண்டு இருந்த போது முன்னாள் சென்ற லாரியை முந்தி செல்ல டிரைவர் முயன்றார்.

    அப்போது எதிர்பாராத விதமாக லாரி சாலையின் நடுவே உள்ள தடுப்பு சுவரில் மோதி சாலையில் கவிழ்ந்தது.

    லாரியில் இருந்த மது பாட்டில்கள் சாலையில் சிதறின. இதனைக் கண்ட பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் சாலையில் சிதறி கிடந்த மதுபாட்டில்களை போட்டி போட்டு அள்ளிச் சென்றனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த மதுரவாடா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். மது பாட்டில்களை அள்ளிச் சென்ற பொதுமக்களை விரட்டி அடித்தனர். பின்னர் லாரியை சுற்றிலும் போலீசார் பாதுகாப்பாக நின்றனர். இதையடுத்து மற்றொரு லாரி கொண்டுவரப்பட்டு மது பாட்டில்கள் ஏற்றி அனுப்பப்பட்டன.

    சாலையில் மது பாட்டில்களை அள்ளிசென்ற குடிமகன்கள் நண்பர்களுடன் குடித்து கும்மாளமிட்டனர்.

    • கடலூர் மாவட்டத்தில் 57 இடங்களில் வாகன சோதனை மேற்கொள்ளப்பட உள்ளது‌.
    • போலீசாருக்கு தகவல் தெரிவித்து, அதன் பின்னர் செல்ல வேண்டும்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டத்தில் கடலூர், பண்ருட்டி, நெய்வேலி, விருத்தாச்சலம், சிதம்பரம், சேத்தியாதோப்பு, திட்டக்குடி, ஆகிய 7 உட்கோட்டங்கள் உள்ளன. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் உத்தரவின் பேரில் 7 உட்கோட்டங்களில் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.

    கடலூர் மாவட்டத்தில் 57 இடங்களில் வாகன சோதனை மேற்கொள்ளப்பட உள்ளது. இதில் 11 இடங்களில் சோதனை சாவடி அமைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட உள்ளனர். மேலும் கடலூர் மாவட்டத்தில் 96 குழுவினர் இரவு நேர வாகன ரோந்து பணிகள் ஈடுபட்டு குற்ற செயல்கள் தடுக்கும் நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபடுகின்றனர். பொதுமக்கள் வெளியூருக்கு செல்லும் சமயத்தில் அந்தந்த போலீசாருக்கு தகவல் தெரிவித்து, அதன் பின்னர் செல்ல வேண்டும். கடலூர் மாவட்ட எல்லை பகுதியில் மது பாட்டில்கள் மற்றும் சாராயம் போன்றவற்றை கடத்துவதை தடுப்பதற்கு 24 மணி நேரமும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    • புதுச்சேரி மாநிலத்தில் இருந்துவரும் வாகனங்களில் மது பாட்டில் கள் கடத்தப்படுகிறதா? என்று சோதனை செய்து வருகின்றனர்.
    • வழக்குகள் பதிவு செய்து அபராதம் விதிக்கப்பட்டது.

    கடலூர்:

    கடலூர் ஆல்பேட்டை யில் சோதனை சாவடி யில் தினந்தோறும் போலீ சார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்ற னர். குறிப்பாக புதுச்சேரி மாநிலத்தில் இருந்துவரும் வாகனங்களில் மது பாட்டில் கள் கடத்தப்படுகிறதா? என்று சோதனை செய்து வருகின்றனர். இந்நிலையில் வருகிற 12-ந்தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், கடலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு பிரபு தலைமையில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் நேற்று நள்ளிரவு ஆல்பேட்டை சோதனை சாவடியில் திடீரென சோதனை மேற்கொண்டனர். அப்போது அவ்வழியாக வந்த சில வாகனங்களில் மது பாட்டில்களை கடத்தி வந்தது தெரிய வந்தது.

    இதையடுத்து அந்த மது பாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார், மது பாட்டில்களை அழித்தனர். மேலும் 30-க்கும் மேற்பட்ட இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர். இதில் மது போதையில் வாகனம் ஓட்டியது, ஆவணங்கள் இல்லாமல் வாகனம் ஓட்டி யது உள்ளிட்ட வழக்கு கள் பதிவு செய்து அபராதம் விதிக்கப்பட்டது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பாக காணப் பட்டது.

    • பண்ருட்டியில் சாராய வியாபாரி கைது செய்யப்பட்டார்.
    • பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன், சப்-இன்ஸ்பெக்டர் தங்கவேலு, பிரசன்னா மற்றும் போலீசார் அங்கு திடீர் சோதனை நடத்தினர்.

    கடலூர்:

    பண்ருட்டி அருகே கண்டரக்கோட்டை கிராமத்தில் சாராயம் விற்பனை செய்யப்படுவதாக பண்ருட்டி போலீசாருக்கு ரகசிய தகவல்கிடைத்தது. அதன்பேரில், பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன், சப்-இன்ஸ்பெக்டர் தங்கவேலு, பிரசன்னா மற்றும் போலீசார் அங்கு திடீர் சோதனை நடத்தினர். அப்போது, அதே கிராமத்தைச் சேர்ந்த பழனிமுருகன் (வயது49) என்பவர் சாராயம் விற்பனை செய்வது தெரியவந்தது. அவரை கைது செய்து அவரிடம் இருந்து ஏராளமான புதுவை சாராய பாக்கெட்டுகள், மது பாட்டில்கள் பறிமுதல் செய்தனர். இவரை பண்ருட்டி கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • கர்நாடகாவில் இருந்து திருப்பத்தூருக்கு எடுத்து சென்றனர்
    • கூலி தொழிலாளர்கள் 2 பேர் கைது

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் மாவட்டம் பெரிய கரம் பகுதியை சேர்ந்தவர் ராம்குமார் (வயது 32). அதே பகுதியை சேர்ந்தவர் கார்த்திக் என்கிற சரவணன் (23). இருவரும் கம்பி கட்டும் வேலை செய்து வந்தனர்.

    இவர்கள் இருவரும் கர்நாடகாவில் இருந்து 23 அட்டை பெட்டிகளில் காரில் மது பாட்டில்கள் கடத்தி வருவதாக கந்திலி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    தகவலின் பேரில் இன்று காலை கந்திலி போலீசார் பெங்களூர் சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

    அப்போது பெங்களூரு வில் இருந்து திருப்பத்தூர் நோக்கி வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர்.

    சோதனையில் 23 அட்டைப்பெட்டிகளில் ரூ.1 லட்சம் மதிப்பிலான மது பாட்டில்கள் கடத்தி வந்தது தெரிய வந்தது.

    இதையடுத்து போலீசார் காருடன் மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து ராம்குமார், கார்த்திக் ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

    • நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா கீரம்பூர் அரசு மதுபான கடையின் அருகில் மது பாட்டில்களை மறைத்து வைத்து விற்பனை செய்து வருவதாக பரமத்தி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
    • மதுவிற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து 3 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 76 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா கீரம்பூர் அரசு மதுபான கடையின் அருகில் மது பாட்டில்களை மறைத்து வைத்து விற்பனை செய்து வருவதாக பரமத்தி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரித்தனர். இதில் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே அங்காளக் கோட்டை பகுதியை சேர்ந்த ரகுபதிராஜா (25), சொக்கநாதபுரம் அருகே போரடப்பு பகுதியை சேர்ந்த அஜித் (25), ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே கேத்தங்கால் தெற்கு தெருவை சேர்ந்த காளீஸ்வரன் (20) ஆகிய 3 பேர் மதுவிற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து 3 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 76 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். மேலும் 3 பேரையும் பரமத்தி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பரமத்தி கிளைச்சிறையில் அடைத்தனர்.

    • ரெயிலில் இருந்து இறங்கிய ஒரு வாலிபர் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் கையில் பேக்கு டன் நின்று கொண்டிருந்தார்.
    • அவரை பிடித்து விசாரணை நடத்திய போது அவர் கையில் வைத்திருந்த பேக்கை போலீசார் சோதனை செய்த போது அதில் 48 குவார்ட்டர் மது பாட்டில்கள் இருந்தது தெரிய வந்தது.

    சேலம்:

    சேலம் ஜங்சன் ரெயில் நிலையத்தில் நள்ளிரவு 12.30 மணியளவில் ரெயில்வே டி.எஸ்.பி பெரியசாமி மற்றும் ேபாலீ சார் ரோந்து சென்றனர். அப்போது பிளாட்பார்ம் 4-ல் ஐ லேண்ட் எக்ஸ்பிரஸ் ரெயில் வந்து நின்றது. அந்த ரெயிலில் இருந்து இறங்கிய ஒரு வாலிபர் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் கையில் பேக்கு டன் நின்று கொண்டிருந்தார்.

    அப்போது அவரை பிடித்து விசாரணை நடத்திய போது அவர் கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் கிழக்கு தெருவை சேர்ந்தத ராம்குமார் 19 என்பது தெரிய வந்தது. மேலும் அவர் கையில் வைத்திருந்த பேக்கை போலீசார் சோதனை செய்த போது அதில் 48 குவார்ட்டர் மது பாட்டில்கள் இருந்தது தெரிய வந்தது.

    இதையடுத்து அவரை மடக்கி பிடித்த போலீசார் மது பாட்டில்களும் பறி முதல் செய்து போலீஸ் நிலையத்த்தில் ஒப்படைத்த னர். இதன் மதிப்பு 3 ஆயி ரத்து 840 ஆகும் . தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. 

    • 30 மது பாட்டில்கள் பறிமுதல்
    • இருவரையும் கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கன்னியாகுமரி :

    களியக்காவிளை அருகே அனுமதியின்றி மது விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு புகார்கள் வந்த வண்ணம் இருந்தது. இந்த நிலையில் களியக்காவிளை போலீசார், படந்தாலுமூடு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது சந்தேகத்துக்கு இடமாக நின்ற 2 பேரை பிடித்து விசாரணை செய்தனர். மேலும் அவர்கள் வைத்திருந்த பைகளை சோதனை செய்த போது 30 மது பாட்டில் இருந்தது தெரியவந்தது. படந்தாலுமூடு, குழித்துறை பகுதிகளில் அவர்கள் சட்ட விரோதமாக மது விற்பனை செய்ததும் தெரிய வந்தது. இதனை தொடர்ந்து மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில் அவர்கள் படந்தாலுமூடு பகுதியை சேர்ந்த கணேசன், குழித்துறையை சேர்ந்த ஜீவன் என்பதும் தெரியவந்தது. இருவரையும் கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

    • மது பாட்டில்கள் கடத்தி வருவதாக கலால் துறை போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.
    • உளுந்தூர்பேட்டை அருகே உள்ள கிராமங்களில் விற்பனை செய்ததும் தெரியவந்தது.

    கள்ளக்குறிச்சி:

    புதுவை மாநி லத்தில் இருந்து உளுந்தூர் பேட்டைக்கு மது பாட்டில்கள் கடத்தி வருவதாக கலால் துறை போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து உளுந்தூர்பேட்டை கலால் சப்-இன்ஸ்பெக்டர் அலெக்ஸ் தலைமையிலான போலீசார் உளுந்தூர் பேட்டை பஸ் நிலையத்தில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஒரு பெண் சந்தேகத்திற்கு இடமான வகையில் கையில் ஒரு பையுடன் பஸ்சில் இருந்து இறங்கினார். அவரை போலீஸ் நிலையம் அழைத்து சென்று மகளிர் போலீசாரை வைத்து விசாரணை நடத்தி, அவரை சோதனையிட்டனர்.

    இதில் அவர் எடுத்த வந்த பையில் புதுவை மாநிலத்தில் வாங்கப்பட்ட மதுபாட்டில்கள் இருந்தது. மேலும், பெண் அணிந்திருந்த ஆடைக்குள்ளும் மது பாட்டில்களை மறைத்து வைத்திருந்தார். விசார ணையில் உளுந்தூர் பேட்டை அருகேயுள்ள எறையூர் கிராமத்தை சேர்ந்த மச்சக்காளி என்கிற நம்பிக்கைமேரி (வயது 48), என்பதும், புதுவை மாநிலத்தில் இருந்து மதுபாட்டில்களை வாங்கி வந்து உளுந்தூர்பேட்டை அருகே உள்ள கிராமங்களில் விற்பனை செய்ததும் தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து அவரை கைது செய்த உளுந்தூர்பேட்டை கலால் போலீசார், அவரிடமிருந்து 120 குவாட்டர் மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

    • ஏற்காட்டில் சுற்றுலா பயணிகளை குறி வைத்து அரசு மது பாட்டில்களை வாங்கி சட்ட விரோதமாக சந்து கடைகளில் வைத்து விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
    • இதில் அங்குள்ள அங்கமுத்து என்பவரது வீட்டில் இருந்து விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த 91 அரசு மது பாட்டில்களை போலீசார் கைப்பற்றினர்.

    ஏற்காடு:

    ஏற்காட்டில் சுற்றுலா பயணிகளை குறி வைத்து அரசு மது பாட்டில்களை வாங்கி சட்ட விரோதமாக சந்து கடைகளில் வைத்து விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் பல்வேறு இடங்களில் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.

    மது பாட்டில்கள் பறிமுதல்

    இந்த நிலையில் ஏற்காடு பிலியூர் கிராமத்தில் சந்துகடை நடைபெறுவதாக வந்த தகவலை அடுத்து அங்கு சென்று போலீசார் தீவிர சோதனை நடத்தினர். இதில் அங்குள்ள அங்கமுத்து என்பவரது வீட்டில் இருந்து விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த 91 அரசு மது பாட்டில்களை போலீசார் கைப்பற்றினர்.

    இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அங்கமுத்தை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.

    எச்சரிக்கை

    இதுகுறித்து ரூரல் டி.எஸ்.பி அமலா ஆட்வின் கூறியதாவது:-

    ஏற்காட்டில் சட்ட விரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் திருத்திக் கொள்ளுங்கள். இல்லையென்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    லாட்டரி, மது, கஞ்சா, ஆகியவை விற்பனை செய்தால் அவர்கள் மீது குண்டர் சட்டம் பாயும். எனவே ஏற்காட்டில் யாரும் குற்றச் செயல்களில் ஈடுபட கூடாது.

    குற்றச் செயல்கள் ஏற்காடு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் எங்கு நடந்தாலும் எனது செல்போன் எண். 8300127780 -க்கு தகவல் கொடுக்கலாம். தகவல் கொடுப்பவர்கள் விவரம் பாதுகாக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை செய்தனர்.
    • பள்ளம் தோண்டி மறைத்து வைத்து விற்பனை செய்த 120 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

    விழுப்புரம்:

    மரக்காணம் அருகே அடசல் பகுதியை சேர்ந்தவர் செந்தாமரை என்கிர ஏகாம்பரம் (வயது 35). இவர் புதுவையில் இருந்து மது பாட்டில்களை வாங்கி வந்து தனது வீட்டின் பின்புறம் உள்ள காலிமனையில் பள்ளம் தோண்டி பூமிக்கு அடியில் மறைத்து வைத்து விற்பனை செய்து வந்ததாக பிரம்மதேசம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலின் பேரில் பிரம்மதேசம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை செய்தனர். இதில் ஏகாம்பரம் வீட்டின் பின்புறம் உள்ள காலி மனையில் மது பாட்டில்கள் மறைத்து வைத்து விற்பனை செய்தது கண்டு பிடிக்கப்பட்டது. உடனே போலீசார் பள்ளம் தோண்டி மறைத்து வைத்து விற்பனை செய்த 120 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். மேலும் போலீசார் இதற்கு காரணமான ஏகாம்பரத்தை கைது செய்து திண்டிவனம் நீதிமன்றத்தில் ஏகாம்பரத்தை ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • வட மாநிலத்தை சேர்ந்த 2 பேர் கைது
    • மேலும் ஒரு இடத்தில் 2 கிலோ குட்கா புகையிலை, மது பாட்டில்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட் டது.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் கஞ்சா, குட்கா புகையிலை விற்பனையை தடுக்க மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு ஹரிகிரண் பிரசாத் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

    கன்னியாகுமரி, நாகர்கோ வில், தக்கலை, குளச்சல் உள்ளிட்ட பகுதிகளில் தனிப்படை அமைக் கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. ஆரல்வாய்மொழி போலீஸ் நிலையத்திற்குட்பட்ட பகுதியில் குட்கா கடத்தி வரப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் ஸ்டீபன் தலைமையிலான போலீசார் முப்பந்தல் கோவில் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த கார் ஒன்றை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். காரில் வட மாநிலத்தை சேர்ந்த 2 பேர் இருந்தனர். அவர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்ட போது முன்னுக்கு பின் முரணான தகவல்களை தெரிவித்தனர்.

    இதைத்தொடர்ந்து போலீசார் காரை சோதனை செய்தபோது தடை செய்யப்பட்ட புகையிலை பாக்கெட்டுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. காரில் இருந்த 187 கிலோ குட்கா புகையிலையையும், காரையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

    பிடிபட்ட 2 பேரையும் ஆரல்வாய்மொழி போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்து விசாரித்தபோது ராஜஸ்தான் ஜோலார் பகுதியை சேர்ந்த லஷ்மன் குமார் (வயது 27), மகேந்திர குமார் (27) என்பது தெரியவந்தது. போலீசார் இருவரையும் கைது செய்த னர். மேலும் இந்த வழக்கில் பெங்களூரை சேர்ந்த தீபா ராம் என்பவருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. போலீசார் அவர் மீதும் வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வருகிறார்கள்.

    குலசேகரம் சப்-இன்ஸ்பெக்டர் சுகுமாரன் தலைமையிலான போலீசார் கல்லடிமா மூடு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட னர். அப்போது அங்கு சந்தேகப்படும் படியாக நின்று கொண்டிருந்த வாலிபர் ஒருவரை பிடித்து விசாரித்தபோது முன்னுக்கு பின் முரணான தகவலை தெரிவித்தார். போலீசார் அவரிடம் சோதனை செய்த போது 2 கிலோ குட்கா புகையிலை, மது பாட்டில்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட் டது.

    இதையடுத்து போலீசார் அவற்றை பறிமுதல் செய்த னர். பிடிபட்ட நபரிடம் விசாரணை மேற்கொண்ட போது செருப்பாலூர், கல்லடி மாமுடு பகுதியை சேர்ந்த ராஜேஷ் (40) என்பது தெரியவந்தது. போலீ சார் அவரை கைது செய்தனர்.

    ×