search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆரல்வாய்மொழி அருகே காரில் கொண்டு வந்த 187 கிலோ குட்கா பறிமுதல்
    X

    ஆரல்வாய்மொழி அருகே காரில் கொண்டு வந்த 187 கிலோ குட்கா பறிமுதல்

    • வட மாநிலத்தை சேர்ந்த 2 பேர் கைது
    • மேலும் ஒரு இடத்தில் 2 கிலோ குட்கா புகையிலை, மது பாட்டில்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட் டது.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் கஞ்சா, குட்கா புகையிலை விற்பனையை தடுக்க மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு ஹரிகிரண் பிரசாத் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

    கன்னியாகுமரி, நாகர்கோ வில், தக்கலை, குளச்சல் உள்ளிட்ட பகுதிகளில் தனிப்படை அமைக் கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. ஆரல்வாய்மொழி போலீஸ் நிலையத்திற்குட்பட்ட பகுதியில் குட்கா கடத்தி வரப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் ஸ்டீபன் தலைமையிலான போலீசார் முப்பந்தல் கோவில் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த கார் ஒன்றை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். காரில் வட மாநிலத்தை சேர்ந்த 2 பேர் இருந்தனர். அவர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்ட போது முன்னுக்கு பின் முரணான தகவல்களை தெரிவித்தனர்.

    இதைத்தொடர்ந்து போலீசார் காரை சோதனை செய்தபோது தடை செய்யப்பட்ட புகையிலை பாக்கெட்டுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. காரில் இருந்த 187 கிலோ குட்கா புகையிலையையும், காரையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

    பிடிபட்ட 2 பேரையும் ஆரல்வாய்மொழி போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்து விசாரித்தபோது ராஜஸ்தான் ஜோலார் பகுதியை சேர்ந்த லஷ்மன் குமார் (வயது 27), மகேந்திர குமார் (27) என்பது தெரியவந்தது. போலீசார் இருவரையும் கைது செய்த னர். மேலும் இந்த வழக்கில் பெங்களூரை சேர்ந்த தீபா ராம் என்பவருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. போலீசார் அவர் மீதும் வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வருகிறார்கள்.

    குலசேகரம் சப்-இன்ஸ்பெக்டர் சுகுமாரன் தலைமையிலான போலீசார் கல்லடிமா மூடு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட னர். அப்போது அங்கு சந்தேகப்படும் படியாக நின்று கொண்டிருந்த வாலிபர் ஒருவரை பிடித்து விசாரித்தபோது முன்னுக்கு பின் முரணான தகவலை தெரிவித்தார். போலீசார் அவரிடம் சோதனை செய்த போது 2 கிலோ குட்கா புகையிலை, மது பாட்டில்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட் டது.

    இதையடுத்து போலீசார் அவற்றை பறிமுதல் செய்த னர். பிடிபட்ட நபரிடம் விசாரணை மேற்கொண்ட போது செருப்பாலூர், கல்லடி மாமுடு பகுதியை சேர்ந்த ராஜேஷ் (40) என்பது தெரியவந்தது. போலீ சார் அவரை கைது செய்தனர்.

    Next Story
    ×