என் மலர்
உள்ளூர் செய்திகள்

தென்காசி மாவட்டத்தில் மது பாட்டில்களை பதுக்கி விற்ற 5 பேர் கைது
- பலவேசம் காலங்கரையில் உள்ள பாலம் அருகே மது பாட்டில்களை விற்றுக் கொண்டிருந்தார்.
- சப்- இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையிலான போலீசார் 2 பேரையும் கைது செய்தனர்.
நெல்லை:
தென்காசி மாவட்டத்தில் மது பாட்டில்களை பதுக்கி வைத்து திருட்டுத்தனமாக விற்பனை செய்பவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
செங்கோட்டை
செங்கோட்டை அருகே உள்ள காலங்கரை சட்ட நாதன் தெருவை சேர்ந்தவர் பலவேசம் (வயது 44).
இவர் காலங்கரையில் உள்ள பாலம் அருகே மது பாட்டில்களை விற்றுக் கொண்டிருந்தார்.
தகவல் அறிந்த சப்-இன்ஸ்பெக்டர் இளவரசி தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து சென்று அவரை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 30 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
கடையநல்லூர் அருகே அய்யாபுரத்தை அடுத்த கீழே சிவகாமிபுரம் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் (36), சங்கரன்கோவில் பாரதி நகரை சேர்ந்தவர் பாலசுப்பி ரமணியன்.
இவர்கள் 2 பேரும் அப்பகுதியில் சட்ட விரோ தமாக மதுபாட்டில்கள் விற்பனை செய்வதாக கிடைத்த தகவலை அடுத்து அய்யாபுரம் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து சென்று அவர்களை கைது செய்து அவர்களிடமிருந்து 100 மது பாட்டில்கள் பறிமுதல் செய்தனர்.
வாசுதேவநல்லூர்
வாசுதேவநல்லூர் அருகே டி.ராமநாதபுரத்தில் செம்புலிங்கம் கோவில் தெருவை சேர்ந்த முனியாண்டி என்பவர் மது பாட்டில்கள் விற்று கொண்டிருந்தார். அவரை போலீசார் கைது செய்தனர்.
சங்கரன்கோவில் காந்திநகர் 4-வது தெருவை சேர்ந்த மூக்காண்டி (60) என்பவர் சங்கரன்கோவில்- சுரண்டை சாலையில் தனியார் பள்ளி அருகே மது விற்றுக் கொண்டிருந்தார்.
அவரை சப்-இன்ஸ்பெக்டர் ஜெயராஜ் தலைமையிலான போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து 17 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.






