search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    பீகாரில் புது முயற்சி- மது பாட்டில்களில் இருந்து கண்ணாடி வளையல் தயாரித்து அசத்தும் கிராம பெண்கள்
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    பீகாரில் புது முயற்சி- மது பாட்டில்களில் இருந்து கண்ணாடி வளையல் தயாரித்து அசத்தும் கிராம பெண்கள்

    • கைப்பற்றப்பட்ட மது பாட்டில்களில் இருந்து கண்ணாடி வளையல்கள் தயாரிக்கும் பணியை பெண்கள் மூலமாக செய்து அசத்தி வருகிறார்கள்.
    • தற்போது 2 டன் மது பாட்டில்களில் இருந்து 70 ஆயிரம் வளையல்களை இந்த திட்டத்தின் கீழ் பெண்கள் தயாரித்துள்ளனர்.

    பாட்னா:

    பீகார் மாநிலத்தில் மது விலக்கு சட்டம் அமலில் உள்ளது. எனினும் சட்ட விரோதமாக சில இடங்களில் விற்பனை செய்யப்படும் மது பாட்டில்களை கைப்பற்றும் போலீசார், கலால் துறையினர் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    இந்நிலையில் அங்கு கைப்பற்றப்பட்ட மது பாட்டில்களில் இருந்து கண்ணாடி வளையல்கள் தயாரிக்கும் பணியை பெண்கள் மூலமாக செய்து அசத்தி வருகிறார்கள்.

    முன்பு சோதனையின்போது கைப்பற்றப்பட்ட மது பாட்டில்களை உடைத்து குப்பையாக வீசப்பட்ட நிலையில், தற்போது புதிய முயற்சியாக அவற்றை கண்ணாடி வளையல்கள் தயாரிக்க கொடுக்கின்றனர். இதற்காக பீகார் கிராமப்புற வாழ்வாதார மேம்பாட்டு சங்கம் என்ற தன்னாட்சி அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. ஊரக வளர்ச்சி துறையின் கீழ் செயல்படும் இந்த அமைப்பின் மூலம் 150 பெண்களுக்கு உரிய பயிற்சிகள் அளிக்கப்பட்டு கண்ணாடி வளையல்கள் தயாரிக்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் கடந்த 26-ந் தேதி பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமார் பாட்னா மாவட்டத்தில் உள்ள சபல்பூர் கிராமத்தில் தனியாக ஒரு உற்பத்தி ஆலையை திறந்து வைத்துள்ளார். இங்கு நாள் ஒன்றுக்கு 80 ஆயிரம் வளையல்கள் தயாரிக்க முடியும்.

    தற்போது 2 டன் மது பாட்டில்களில் இருந்து 70 ஆயிரம் வளையல்களை இந்த திட்டத்தின் கீழ் பெண்கள் தயாரித்துள்ளனர். இவற்றை உள்ளூர் வியாபாரிகள் மூலம் பாட்னாவில் உள்ள விமான நிலையம் மற்றும் கண்காட்சிகளில் விற்பனைக்கு வைத்துள்ளனர். இதன்மூலம் நல்ல வருமானம் கிடைக்கிறது.

    இதுகுறித்து கிராமப்புற வாழ்வாதார மேம்பாட்டு சங்க உறுப்பினரான சுதா தேவி கூறுகையில், இந்த புதிய முயற்சியால் நல்ல லாபம் ஈட்டுகிறோம் என்றார். இவர்களுக்கு தேவையான உதவிகளை அரசு செய்து வருகிறது என கலால் துறை ஆணையர் தன்ஜி கூறினார்.

    Next Story
    ×