search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Confiscation of liquor bottles"

    • 2,325 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன
    • சட்டவிரோதமாக மதுவை பதுக்கி விற்றதாக 250 பேர் மீது வழக்கு பதியபட்டது

    கரூர்:

    கரூர் மாவட்டத்தில் கடந்த ஆகஸ்டு மாதம் 1-ந்தேதி முதல் 31-ந்தேதி வரை கரூர் டவுன், பசுபதிபாளையம், வெங்கமேடு, வாங்கல், வேலாயுதம்பாளையம், தாந்தோணிமலை, க.பரமத்தி, அரவக்குறிச்சி, தென்னிலை, குளித்தலை, மாயனூர், தோைகமலை பாலவிடுதி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள போலீஸ் நிலையத்திற்குட்பட்ட போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

    இதில் சட்டவிரோதமாக மதுவை பதுக்கி விற்றதாக 250 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேலும் அவர்களிடமிருந்து மொத்தம் 2,325 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேற்கண்ட தகவலை கரூர் மாவட்ட போலீசார் தெரிவித்தனர்.

    வேலாயுதம்பாளையம் போலீசார் மரவாபாளையம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு உள்ள டாஸ்மாக் பகுதியில் மது விற்றதாக திருச்சி மாவட்டம் தொட்டியம் பகுதியை சேர்ந்த ரவி என்பவர் மீது போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதேபோல் தோகைமலை அருகே உள்ள தெற்குபள்ளம் பகுதியில் உள்ள டாஸ்மாக் பார் அருகே புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் பகுதியை சேர்ந்த ஜெயபாரதி (வயது 31) என்பவர் மது விற்றுக்கொண்டிருந்தார். இதையடுத்து அவரை தோகைமலை போலீசார் கைது செய்தனர்.

    தரகம்பட்டி அருகே தேவர்மலை ஊராட்சி மம்பத்தையூரை சேர்ந்த ரவி (48) என்பவர் தனது பெட்டிக்கடையில் பதுக்கி வைத்து மது விற்று கொண்டிருந்தார். இதையடுத்து அவரை சிந்தாமணிப்பட்டி போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அவர் விற்பனைக்காக வைத்திருந்த மதுபாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

    • ஏற்காட்டில் சுற்றுலா பயணிகளை குறி வைத்து அரசு மது பாட்டில்களை வாங்கி சட்ட விரோதமாக சந்து கடைகளில் வைத்து விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
    • இதில் அங்குள்ள அங்கமுத்து என்பவரது வீட்டில் இருந்து விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த 91 அரசு மது பாட்டில்களை போலீசார் கைப்பற்றினர்.

    ஏற்காடு:

    ஏற்காட்டில் சுற்றுலா பயணிகளை குறி வைத்து அரசு மது பாட்டில்களை வாங்கி சட்ட விரோதமாக சந்து கடைகளில் வைத்து விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் பல்வேறு இடங்களில் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.

    மது பாட்டில்கள் பறிமுதல்

    இந்த நிலையில் ஏற்காடு பிலியூர் கிராமத்தில் சந்துகடை நடைபெறுவதாக வந்த தகவலை அடுத்து அங்கு சென்று போலீசார் தீவிர சோதனை நடத்தினர். இதில் அங்குள்ள அங்கமுத்து என்பவரது வீட்டில் இருந்து விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த 91 அரசு மது பாட்டில்களை போலீசார் கைப்பற்றினர்.

    இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அங்கமுத்தை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.

    எச்சரிக்கை

    இதுகுறித்து ரூரல் டி.எஸ்.பி அமலா ஆட்வின் கூறியதாவது:-

    ஏற்காட்டில் சட்ட விரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் திருத்திக் கொள்ளுங்கள். இல்லையென்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    லாட்டரி, மது, கஞ்சா, ஆகியவை விற்பனை செய்தால் அவர்கள் மீது குண்டர் சட்டம் பாயும். எனவே ஏற்காட்டில் யாரும் குற்றச் செயல்களில் ஈடுபட கூடாது.

    குற்றச் செயல்கள் ஏற்காடு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் எங்கு நடந்தாலும் எனது செல்போன் எண். 8300127780 -க்கு தகவல் கொடுக்கலாம். தகவல் கொடுப்பவர்கள் விவரம் பாதுகாக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • விருதுநகர் பழைய பஸ் நிலையம் அருகே பதுக்கி வைக்கப்பட்டிருந்த 900 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
    • இதுகுறித்து விருதுநகர் மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    விருதுநகர் பழைய பஸ் நிலைய பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் அந்தப் பகுதியில் போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது பழைய பஸ் நிலையம் சைக்கிள் நிறுத்தம் அருகே சிலர் மது வாங்கி சென்றனர்.

    இதனைப் பார்த்த போலீசார் அந்தப் பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர். அங்கு ஏராளமான பெட்டிகளில் மதுபாட்டில்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. அவற்றில் மொத்தமாக 909 மதுபாட்டில்கள் இருந்தன. இதன் மதிப்பு சுமார் ரூ. 1,18,170 ஆகும். இது தொடர்பாக அங்கிருந்த வாலிபரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

    அப்போது அவர் சந்திரகிரி புரத்தைச் சேர்ந்த சிவசக்தி முருகன் (வயது 47) என்பதும், மதுபாட்டில்களை பதுக்கிவைத்து விற்பனை செய்து வந்தததும் தெரியவந்தது. இதையடுத்து அங்கிருந்த மது பாட்டில்கள் வைக்கப்பட்டிருந்த பெட்டிகளை பறிமுதல் செய்த போலீசார் முருகனை கைது செய்தனர்.

    மேலும் இது குறித்து விருதுநகர் மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • போலீசார் சோதனையில் சிக்கியது
    • 10 பாட்டில்கள் பறிமுதல்

    காவேரிப்பாக்கம்:

    காவேரிப்பாக்கம் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் உதயசூ ரியன் மற்றும் போலீசார் நேற்று பஸ் நிலையம், வட் டார வளர்ச்சி அலுவலகம், கொண்டாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப் போது கொண்டாபுரம் மாருதி நகர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் அரசு மது பாட் டில்களை பதுக்கி அதிக விலைக்கு விற்பனை செய்வ தாக தகவல் கிடைத்தது.

    இதனையடுத்து போலீசார் அந்த வீட்டை சோதனை செய்த போது, கள்ளத்தன மாக அரசு மதுபாட்டில். களை பதுக்கி அதிகவிலைக்கு விற்பனை செய்தது தெரிய வந்தது. அதைத்தொடர்ந்து அங்கிருந்த 10 மது பாட்டில் களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

    மேலும் இச் சம்பவம் குறித்து வீட்டின் உரிமையாளர் மணி (வயது60) என்பவர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சேலம் மாவட்டம், தம்மம்பட்டி காந்திநகர் பகுதியில் அரசு மது பாட்டில்கள் கள்ளத்தனமாக விற்கப்படுவதாக ஆத்தூர் வருவாய் கோட்டாட்சிரியருக்கு புகார் வந்தது.
    • காந்திநகர் பகுதியில், கலைச்செல்வன் என்பவர் வீட்டில் சட்ட விரோதமாக 80 பெட்டிகளில் மது பாட்டில்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

    ஆத்தூர்:

    சேலம் மாவட்டம், தம்மம்பட்டி காந்திநகர் பகுதியில் அரசு மது பாட்டில்கள் கள்ளத்தனமாக விற்கப்படுவதாக ஆத்தூர் வருவாய் கோட்டாட்சியர் சரண்யாவிற்கு புகார் வந்தது. அவரது உத்தரவின் பேரில், கெங்கவல்லி வட்டாட்சியர் வெங்கடேசன் தலைமையிலான வருவாய் துறையினர் அப்பகுதியில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது காந்திநகர் பகுதியில், கலைச்செல்வன் என்பவர் வீட்டில் சட்ட விரோதமாக 80 பெட்டிகளில் மது பாட்டில்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து கெங்கவல்லி வட்டாட்சியர் வெங்கடேசன், தம்மம்பட்டி போலீசாருக்கு தகவல் அளித்தார். சம்பவ இடத்திற்கு வந்த தம்மம்பட்டி போலீசார், வருவாய் துறையினருடன சேர்ந்து, கலைச்செல்வன் வீட்டில் பதுக்கி வைத்திருந்த ரூ.5 லட்சம் மதிப்பிலான 3,840 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

    குடியரசு தினத்தை முன்னிட்டு டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு உள்ளது. இதையடுத்து விடுமுறையை பயன்படுத்தி மது பாட்டில்களை விற்பனை செய்ய வைத்திருந்தது விசாரணையில் தெரியவந்தது. பறிமுதல் செய்யப்பட்ட மது பாட்டில்களை வருவாய் துறையினர், தம்மம்பட்டி போலீசாரிடம் ஒப்படைத்தனர். மேலும் கலைச்செல்வனிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • விழுப்புரம் அருகே லாரியில் கடத்திய ரூ. 15 லட்சம் மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
    • கெங்கிராம்பாளையம் மதுவிலக்கு சோதனை சாவடியில் மதுவிலக்கு போலீசார் சோதனை பணியில் ஈடுபட்டனர்.

    விழுப்புரம்:

    புதுவை மாநிலத்திலிருந்து விழுப்புரம், கடலூர் , காஞ்சிபுரத்திற்கு மது பாட்டில்கள் கடத்தல் உள்ளிட்டவை ஏராளமாக நடைபெற்று வந்தது. இந்நிலையில் விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா பதவி ஏற்றதில் இருந்து மது, போதை பொருள்கள் கடத்தல் விற்பனை உள்ளிட்டவைகளை அடியோடு ஒடுக்கும் விதமாக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.  இந்நிலையில் இன்று அதிகாலை புதுவையில் இருந்து விழுப்புரம் செல்லும் சாலையில் வளவனூர் கெங்கிராம்பாளையம் மதுவிலக்கு சோதனை சாவடியில் மதுவிலக்கு போலீசார் சோதனை பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக அதிவேகமாக லாரி ஒன்று வந்தது. அந்த லாரியை போலீசார் நிறுத்த முயற்சித்த போது நிற்காமல் வேகமாக சென்றது. உடனே மதுவிலக போலீசார் சினிமா பாணியில் லாரியை துரத்தி சென்றனர். அப்போது குடுமியான்குப்பம் பகுதி அருகே லாரியை நிறுத்திவிட்டு 2 பேர் பேரும் தப்பித்து சென்றனர்.

    லாரியின் பின்னால் துரத்தி சென்ற போலீசார் சென்று பார்த்தபோது லாரி மட்டும் பள்ளத்தில் இருந்தது. உடனே மதுவிலக்கு போலீசார் சோதனை செய்ததில் லாரியின் உள்ளே நூதன முறையில் 155 அட்டைப்பெட்டியில் புதுவை மது பாட்டில் ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட போலி மது பாட்டில்கள் கடத்தி வந்தது தெரிய வந்தது. உடனே இது குறித்து தகவல் அறிந்த வளவனூர் போலீசார் மற்றும் விழுப்புரம் டிஎஸ்பி பார்த்திபன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். மேலும் விழுப்புரம் மதுவிலக்கு போலீசாரிடம் லாரியுடன் போலி மதுபான பாட்டிலும் பறிமுதல் செய்து ஒப்படைக்கப்பட்டது. இது குறித்து மதுவிலக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து இதை கடத்தி வந்த நபர் யார் எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது குறித்து தீவிர விசாரணை செய்து வருகின்றனர். 

    • கெங்கவல்லி போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்
    • இதனையடுத்து போலீசார் மணிமேகலையைகைது செய்தனர்.

    ஆத்தூர்:

    கெங்கவல்லி சுற்று வட்டார பகுதிகளில் கள்ளச்சாராயம் மற்றும் அரசு மதுபான பாட்டில்களை சட்டவிரோதமாக விற்பனை செய்யப்பட்டு வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து கெங்கவல்லி போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். மணிமேகலை (வயது 45) என்பவருக்கு சொந்தமான வீட்டில் சோதனை செய்த போது அங்கு அரசு மதுபான பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரிய வந்தது. இதனையடுத்து போலீசார் மணிமேகலையைகைது செய்தனர். அவர் வைத்தி ருந்த மது பாட்டில்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×