search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போதை பொருள் கடத்தல்"

    • ஜாபர் சாதிக் கைது தொடர்பாக பல்வேறு தகவல்கள் வெளியாகி உள்ளன.
    • ஜாபர் சாதிக், 5க்கும் மேற்பட்ட செல்போன்களை மாற்றியதாக தகவல்.

    போதை பொருள் கடத்தல் வழக்கில் கைதான ஜாபர் சாதிக் சென்னை அழைத்து வரப்படுகிறார்.

    ஜாபர் சாதிக் கைது தொடர்பாக பல்வேறு தகவல்கள் வெளியாகி உள்ளன.

    கடந்த 17ம் தேதி முதல் தலைமறைவான ஜாபர் சாதிக், 5க்கும் மேற்பட்ட செல்போன்களை மாற்றியதாக தகவல் வௌியாகியுள்ளது.

    ஜாபர் சாதிக், 2019ம் ஆண்டு முதல் போதைப் பொருள் கடத்தல் தொழிலில் ஈடுபட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

    போதை பொருள் கடத்தல் மூலம் கிடைத்த பணத்தை வைத்து, புரசைவாக்கத்தில் ஓட்டல், 'மங்கை' படம் தயாரித்ததாக ஜாபர் சாதிக் வாக்குமூலம் அளித்துள்ளார்.

    கடத்தலில் வந்த பணத்தின் மூலமாக பயன் அடைந்தவர்கள் பட்டியலை தனித் தனியாக விசாரணை செய்யவும் போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

    • தனது மகளை போதைப்பொருள் வழக்கில் 2 பேர் சிக்க வைத்ததாக தெரிவித்தார்.
    • கிரிசன் பெரிராவிடம் கொடுத்த கோப்பையில் போதைப்பொருள் மறைத்து வைத்து அனுப்பி உள்ளனர்.

    சார்ஜா:

    இந்தி நடிகையான கிரிசன் பெரிரா, கடந்த 1-ந்தேதி துபாய்க்கு சென்ற போது போதைப்பொருள் வைத்திருந்த குற்றத்துக்காக கைது செய்யப்பட்டார். அவர் வைத்திருந்த கோப்பையில் போதைப்பொருள் மறைத்து வைக்கப்பட்டு இருந்தது.

    இதையடுத்து நடிகை கிரிசன் பெரிராவை கைது செய்து சார்ஜா சிறையில் அடைத்தனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் அவரது குடும்பத்தினர் கடும் அதிர்ச்சி அடைத்தார்.

    இதுதொடர்பாக நடிகையின் தாய் பிரமிளா, மும்பை போலீசில் அளித்த புகாரில், தனது மகளை போதைப்பொருள் வழக்கில் 2 பேர் சிக்க வைத்ததாக தெரிவித்தார். விசாரணையில் அது உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

    நடிகையின் தாய்க்கும் அவரது வீட்டுக்கு அருகே வசிக்கும் அந்தோனி பவுல் என்பவருக்கும் தகராறு இருந்து வந்துள்ளது. இதனால் அந்தோனி பவுல் தனது நண்பர் ரவி போபதே மூலம் பழிவாங்க திட்டமிட்டார்.

    அதன்படி ரவிபோபதே தன்னை வெப்தொடர் தயாரிப்பாளர் என்று நடிகையின் தாயிடம் அறிமுகப்படுத்திக் கொண்டு அவரது ஹாலிவுட் வெப் தொடர்களில் நடிக்க வைப்பதாக கூறியுள்ளார்.

    நடிகை கிரிசன் பெரிராவை வெப் தொடர் வாய்ப்புக்கு துபாய்க்கு விமானம் மூலம் அனுப்பி வைத்தார். அப்போது கிரிசன் பெரிராவிடம் கொடுத்த கோப்பையில் போதைப்பொருள் மறைத்து வைத்து அனுப்பி உள்ளனர்.

    இதையடுத்து அந்தோனி பவுல், ரவிபோபதேவை போலீசார் கைது செய்தனர். மேலும் சார்ஜா ஜெயிலில் அடைக்கப்பட்ட கிரிசன் பெரிரா மீட்டுக்கொண்டு வரும் நடவடிக்கையில் மும்பை போலீசார், குடும்பத்தினர் ஈடுபட்டனர்.

    கிரிசன் பெரிராவை போதைப்பொருள் கடத்தலில் சிக்கவைத்து அவருக்கு தெரியாமல் போதைப்பொருளை மறைத்து கொடுத்து அனுப்பியது பற்றி சார்ஜாவில் உள்ள அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    இந்நிலையில் கிரிசன் பெரிரா, சார்ஜா ஜெயிலில் இருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளார். அவர் அங்கிருந்து விரைவில் மும்பைக்கு வருகிறார்.

    • இங்கிலாந்தில் போதைபொருட்கள் கடத்தப்படுவதாக வந்த தகவலின் பேரில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
    • காரில் வந்த ஒருவன் திடீரென கீழே இறங்கி வந்து போலீசாரிடம் தனது காரில் போதைப்பொருட்கள் உள்ளதாகவும், தான் அணிந்து உள்ள பூட்சில் கொகைன் மறைத்து வைத்து உள்ளதாகவும் தெரிவித்தான்.

    பொதுவாக தாங்கள் செய்யும் தவறுகளை யாரும் ஒப்புக்கொள்வது இல்லை. ஆனால் கடத்தல்காரன் ஒருவன் தானாகவே முன்வந்து தான் போதைப்பொருட்கள் கடத்துவதாக கூறி போலீசாரை அதிர வைத்தான். இங்கிலாந்தில் போதைபொருட்கள் கடத்தப்படுவதாக வந்த தகவலின் பேரில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது காரில் வந்த ஒருவன் திடீரென கீழே இறங்கி வந்து போலீசாரிடம் தனது காரில் போதைப்பொருட்கள் உள்ளதாகவும், தான் அணிந்து உள்ள பூட்சில் கொகைன் மறைத்து வைத்து உள்ளதாகவும் தெரிவித்தான்.

    இதனால் போலீசார் ஒரு கணம் திகைத்தனர், அவனை சந்தேக கண்ணோடு மேலும் கீழும் பார்த்தனர். உடனே அவன் நான் உண்மையயை தான் சொல்கிறேன் சார். வேண்டுமென்றால் சோதனை செய்து கொள்ளுங்கள் என்று கூறினான். இதையடுத்து போலீசார் அவன் வந்த காரை சோதனை செய்தனர். அப்போது காரில் 2 பைகளில் கொகைன் போதை பொருட்கள் இருந்தது. அவன் காலில் போட்டு இருந்த பூட்சை பிரித்து பார்த்த போது அதிலும் போதைபொருட்கள் மறைத்து வைத்து இருந்ததை போலீசார் கண்டுபிடித்து அதிர்ச்சி அடைந்தனர். உடனே போலீசார் அவனை கைது செய்து 19 கிலோ எடைகொண்ட போதைப்பொருட்களை பறிமுதல் செய்தனர்.

    அதன் சர்வதேச மதிப்பு ரூ. 20 கோடியாகும். விசாரணையில் கடத்தல்காரன் பெயர் கியாரன் கிரான்ட் என்பது தெரியவந்தது. போலீசார் அவனை கோர்ட்டில் ஆஜர்படுத்தினார்கள். அவனுக்கு 8 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது.

    • தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் போதைப் பொருள் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து போலீஸ் உயர் அதிகாரிகளுடன் விரிவான ஆலோசனை மேற்கொண்டார்.
    • கடலோர மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகளும், ஐ.ஜி.க்களும் காணொலி வாயிலாக கூட்டத்தில் இணைந்திருந்தனர்.

    சென்னை:

    தமிழ்நாட்டில் போதைப் பொருட்களின் நடமாட்டத்தையும், பயன்பாட்டையும் முற்றிலுமாக ஒழிக்க தமிழக அரசு தீவிர முயற்சி எடுத்து வருகிறது.

    ஆனாலும் கஞ்சா, பான்பராக், குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்களை பக்கத்து மாநிலங்களில் இருந்து கடத்தி வந்து ஒவ்வொரு பகுதியிலும் சிலர் விற்பனை செய்து வருகின்றனர்.

    போலீசார் அவ்வப்போது அத்தகைய நபர்களை கைது செய்து சிறையில் அடைத்தாலும் மீண்டும் மீண்டும் போதை பொருட்கள் நடமாட்டம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

    போதைப் பொருள் நடமாட்டத்தை முற்றிலுமாக ஒழிக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறார்.

    ஆட்சிப் பொறுப்பேற்றது முதற்கொண்டு போதைப் பொருள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு கண்டிப்பான உத்தரவுகளையும் பிறப்பித்து இருந்தார்.

    ஆனாலும் போதை பொருட்கள் விற்பனை இன்னும் சில பகுதிகளில் தொடர்ந்து நடைபெற்ற வண்ணம் உள்ளது.

    இதைத் தொடர்ந்து கடந்த ஆகஸ்டு மாதம் 10-ந்தேதி சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற மாவட்ட கலெக்டர்கள் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர்கள் கூட்டத்தில் பேசிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் போதைப் பொருட்களை கட்டுப்படுத்த நீங்கள் நடவடிக்கை எடுத்து வந்தாலும் அது போதாது. இன்னும் தீவிரமாக நடவடிக்கை எடுங்கள் என்று கேட்டுக்கொண்டார்.

    போதைப் பொருள் பயன்பாட்டின் ஆபத்து குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்டு 11-ந்தேதியை போதை பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு நாளாக தேர்ந்தெடுத்து உள்ளோம்.

    அதன்படி பள்ளி, கல்லூரிகளில் இது தொடர்பான பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த ஏற்பாடு செய்ய வேண்டும் என்றார்.

    அதன்படி பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் போதையின் தீமைகள் குறித்த காணொலி காட்சிகளும் பல இடங்களில் காண்பிக்கப்பட்டது.

    போதைப் பொருள் இல்லாத தமிழகத்தை உருவாக்க ஒவ்வொருவரும் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் என்றும் அப்போது கேட்டுக்கொண்டார்.

    இதைத் தொடர்ந்து போதைப் பொருட்கள் கடத்துபவர்கள், விற்பவர்களை பிடித்து குண்டர் சட்டத்தில் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்து வந்தனர்.

    இந்த சூழலில் ராமநாதபுரம் மாவட்டம் வேதாளையில் கிலோ கணக்கில் கோகைகன் போதைப்பொருள் பிடிபட்டதாக அண்மையில் தகவல் வெளியானது.

    இலங்கையில் இருந்து சர்வதேச போதைப் பொருள் கடத்தல் தாதா கஞ்சிபாணி இம்ரான் தமிழகத்திற்குள் ஊடுருவியதாகவும் ராமேசுவரத்துக்கு கள்ளத்தோணியில் தப்பி வந்துள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன.

    இதைத் தொடர்ந்து கடலோர பகுதிகள் முழுவதும் போலீஸ் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

    இந்த சூழ்நிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் போதைப் பொருள் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து போலீஸ் உயர் அதிகாரிகளுடன் விரிவான ஆலோசனை மேற்கொண்டார்.

    இதில் தலைமைச் செயலாளர் இறையன்பு, உள்துறை கூடுதல் தலைமை செயலாளர் பணீந்திர ரெட்டி, இளைஞர் நலன் விளையாட்டு மேம்பாட்டு துறை கூடுதல் முதன்மை செயலாளர் அதுல்யமிஸ்ரா, போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு, சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால், மருத்துவ துறை முதன்மை செயலாளர் செந்தில்குமார், பள்ளிக்கல்வித்துறை செயலாளர் காகர்லா உஷா, உயர்கல்வி துறை முதன்மை செயலாளர் கார்த்திகேயன், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை முதன்மை செயலாளர் கன்சோங்கம் ஜடக்சிரு மற்றும் உளவு பிரிவு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    இது தவிர கடலோர மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகளும், ஐ.ஜி.க்களும் காணொலி வாயிலாக கூட்டத்தில் இணைந்திருந்தனர்.

    இவர்கள் மத்தியில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் விரிவாக பேசினார்.

    தமிழ்நாடு முழுவதும் சோதனை நடத்தி போதைப் பொருள் நடமாட்டத்தை வேரோடு ஒழிக்க பாடுபட வேண்டும். போதைப் பொருள் கடத்தல்காரர்களை கண்டுபிடித்து கைது செய்ய தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் உள்ளிட்ட பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்தார்.

    • ரோந்து பணியில் போலீசாரை பார்த்து வாலிபர் ஒருவர் ஓடினார்.
    • சட்டை பையில் 50 கிராம் கஞ்சா இருந்ததும் தெரியவந்தது.

    விழுப்புரம்:

    திருவெண்ணைநல்லூர் அருகே மழவராயநல்லூர் பகுதியில் திருவெண்ணை நல்லூர் போலீஸ் இன்ஸ்பெ க்டர் செல்வகுமார் தலை மையிலான போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடு பட்டனர். அப்போது போலீ சாரை பார்த்து வாலிபர் ஒருவர் ஓடினார். இதனையடுத்து அந்த வாலிபரை போலீசார் மடக்கி பிடித்து அவரிடம் விசாரணை செய்த தில் அதே பகுதியைச் சேர்ந்த மகேஷ் (வயது 22) என்பதும் அவரது சட்டை பையில் 50 கிராம் கஞ்சா இருந்ததும் தெரியவந்தது. உடனே போலீசார் கஞ்சாவை பறிமுதல் செய்து மகேஷை கைது செய்தனர். 

    இதேபோன்று மணக்குப் பம் கூட்ரோடு அருகே திரு வெண்ணைநல்லூர் சப்- இன்ஸ்பெக்டர் பார்த்த சாரதி தலைமையிலான போலீசார் வாகன சோத னையில் ஈடுபட்டனர். அப்போது திருக்கோவி லூரில் இருந்து மோட்டார் சைக்கிளில் வாலிபர் ஒருவர் வேகமாக வந்தார். போலீசார் அந்த வாலி பரை தடுத்து நிறுத்தி சோதனை செய்ததில் அந்த வாலிபரிடமிருந்து 225 பாக்கெட் ஹான்ஸ், 300 பாக்கெட் விமல், 240 பாக்கெட் வி.ஐ பாக்கு போன்றவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.  மேலும் அவரிடம் விசாரணை செய்ததில் கொர க்கண் தாங்கல் பகுதியை சேர்ந்த கிரண்குமார் (20) என்பது தெரியவந்தது. மேலும் போலீசார் வழக்குப் பதிந்து கிரணை கைது செய்த னர். மோட்டார் சைக்கிளும் பறிமுதல் செய்யப்பட்டது.

    • போதை பொருள் கடத்தல் கும்பலுடன் கைகோர்த்து செயல்படும் காவல்துறையில் உள்ள நபர்கள் மீதும் கடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
    • கடந்த ஓராண்டில் 20 போலீசார் சஸ்பெண்டு செய்யப்பட்டு உள்ளனர். 3 காவலர்கள் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள்.

    சென்னை:

    தமிழகம் முழுவதும் போதை பொருள் கடத்தல் மற்றும் விற்பனைக்கு எதிராக அனைத்து போலீஸ் அதிகாரிகளும் தீவிரமாக களம் இறங்க வேண்டும் என்று டி.ஜி.பி. சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார்.

    இதுதொடர்பாக அவர் கூறியதாவது:-

    ஆந்திரா-ஒடிசா மாநிலங்களில்இருந்து தமிழகத்துக்கு கஞ்சா கடத்தப்படுவதை முற்றிலுமாக தடுத்து நிறுத்தும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளன.

    இதற்காக எல்லைப் பகுதியில் சோதனை சாவடிகள் அமைத்து தீவிர சோதனைகளை நடத்தி வருகிறோம். இதனால் ஆந்திராவில் இருந்து கஞ்சா வியாபாரிகள் தமிழகத்துக்கு நுழைவது கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

    இதனால் கஞ்சா கிடைக்காமல் போதைக்கு அடிமையாகும் நபர்கள், மருந்து கடைகளில் கிடைக்கும் சில மருந்துகளை வாங்கி சாப்பிடுவதை கண்டறிந்து அதனை தடுக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டுள்ளன.

    சுகாதாரத்துறையினரின் ஒத்துழைப்புடன் இந்த நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளது.

    பள்ளி, கல்லூரிகள் அருகில் போதைப் பொருட்கள் விற்பனையை தடுக்கும் வகையில் பள்ளி கல்வித்துறையினரோடு இணைந்து காவல் துறையினர் செயல்பட்டு வருகிறார்கள்.

    தமிழகத்தில் போதை பொருள் விற்பனையை முழுமையாக தடுத்து நிறுத்தும் வகையில் மாவட்ட அளவில் டி.எஸ்.பி. அந்தஸ்தில் தனி அதிகாரியை நியமனம் செய்ய முடிவெடுத்து அதற்கான அறிவிப்பு முதல்-அமைச்சரால் வெளியிடப்பட்டு உள்ளது.

    இது வரவேற்கதக்க விஷயமாகும். இந்த அதிகாரியின் கீழ் போதை பொருட் தடுப்பு பிரிவு மற்றும் மது விலக்கு அமலாக்கத்துறை காவலர்கள் இணைந்து செயல்படுவார்கள். இதன் மூலம் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காவலர்கள் போதை பொருள் தடுப்பு பணியில் ஈடுபடுவதற்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

    முதல்-அமைச்சர் கொண்டு வந்துள்ள இந்த நல்ல திட்டம் மூலம் தமிழகத்தை போதை பொருள் இல்லாத மாநிலமாக நிச்சயம் மாற்ற முடியும்

    புதிதாக நியமிக்கப்பட உள்ள இந்த அதிகாரி மாநில அளவில் செயல்படும் அமலாக்கத்துறை கூடுதல் டி.ஜி.பி.யின் கீழ் பணியாற்றுபவராக இருப்பார். அதே நேரத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகளுடன் இணைந்து செயல்படுவார்.

    இதன் மூலம் உள்ளூர் போலீசாருடன் சேர்ந்து போதை பொருள் ஒழிப்பில் கூடுதல் கவனம் செலுத்த முடியும். முதல்-அமைச்சர் அறிவுறுத்தி இருப்பது போன்று போதை பொருள் இல்லாத மாநிலமாக தமிழகத்தை மாற்ற அனைத்து நடவடிக்கைகளையும் காவல்துறையினர் மேற்கொண்டுள்ளனர்.

    இவ்வாறு டி.ஜி.பி. சைலேந்திர பாபு தெரிவித்தார்.

    போதை பொருள் கடத்தல் கும்பலுடன் கைகோர்த்து செயல்படும் காவல்துறையில் உள்ள நபர்கள் மீதும் கடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    அந்த வகையில் கடந்த ஓராண்டில் 20 போலீசார் சஸ்பெண்டு செய்யப்பட்டு உள்ளனர். 3 காவலர்கள் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். இது போன்ற நடவடிக்கைகளும் தீவிரப்படுத்தப்படும் என்றும் உயர் அதிகாரிகள் எச்சரித்து உள்ளனர்.

    ×