என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விஜய்"

    • இன்னும் தேர்தலை சந்திக்காத ஒரு அரசியல் கட்சி தவெக.
    • திமுக வாக்குறுதிகளை நிறைவேற்றாதது தேர்தலில் பிரதிபலிக்கும்

    தூத்துக்குடியில் செய்தியாளர்களுடன் பேசிய நடிகர் சரத்குமார், 

    "நூறுநாள் வேலை திட்டத்தை சிதைப்பதற்கான எந்த திட்டமும் இல்லை. வேலையில்லாத இடத்தில் வேலைசெய்துவிட்டு இலவசமாக பணம் கொடுக்கக்கூடாது என்றுதான் சொல்கிறார்கள். திமுக எந்த நலத்திட்டங்களையும் வரவேற்பது இல்லை. சாதகமாக இருக்கும் திட்டங்களில் அவர்களின் பெயர்களை போட்டுக் கொள்கின்றனர். அவர்களுக்கு பாதகமாக இருப்பதை குற்றச்சாட்டாக கூறுகிறார்கள். இன்னும் தேர்தலை சந்திக்காத ஒரு அரசியல் கட்சி தவெக. இப்போதுதான் களத்திற்கு வந்துள்ளார்கள். தங்களின் கொள்கை, கோட்பாடை சொல்லாமல் தனிநபர் தாக்குதலை தொடர்ந்து கொண்டிருக்கிறார்.

    தேர்தலுக்கு பின்தான் அவர் கட்சியை நடத்துவாரா? இல்லையா என்பது தெரியவரும். ஒரு பெண் நிர்வாகி கேட்கும்போது வண்டியை நிறுத்தி என்னவென்று கேட்பவர்தான் கதாநாயகனாக இருக்கமுடியும். தலைவனாக இருக்கமுடியும். இறங்கி பேசியிருந்தால் இன்று அவர் தூக்கமாத்திரை சாப்பிடிருக்கமாட்டார். திமுக வாக்குறுதிகளை நிறைவேற்றாதது தேர்தலில் பிரதிபலிக்கும்." என தெரிவித்தார். 

    தொடர்ந்து பாஜக தேர்தல் கூட்டணி தொடர்பாக பேசிய அவர், சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டு, மாநிலத் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு, எத்தனை தொகுதிகளில் பாஜக போட்டியிடும் என்பது குறித்து முடிவு செய்யப்படும் என தெரிவித்தார். 

    • விஜய் நடிக்கும் கடைசிப் படம் இது என்பதால், ரசிகர்கள் மத்தியில் இதற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
    • இப்படத்தின் பாடல்களான "தளபதி கச்சேரி", 'ஒரே பேரே வரலாறு' ஆகியவை வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

    ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடிப்பில், உருவாகி உள்ள படம் 'ஜன நாயகன்'. இப்படம் அடுத்தாண்டு பொங்கலுக்கு திரைக்கு வருகிறது. இப்படத்தில் பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, பிரியாமணி, பாபி தியோல், கவுதம் வாசுதேவ் மேனன், நரேன் ஆகியோர் நடித்துள்ளனர். அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

    அரசியலால் விஜய் நடிக்கும் கடைசிப் படம் இது என்பதால், ரசிகர்கள் மத்தியில் இதற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. சமீபத்தில் இப்படத்தின் பாடல்களான "தளபதி கச்சேரி", 'ஒரே பேரே வரலாறு' ஆகியவை வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

    இந்த நிலையில், 'ஜன நாயகன்' படத்தின் 3-வது பாடல் 'செல்ல மகளே...' இன்று வெளியாகி உள்ளது. பாடலாசிரியர் விவேக்கின் வரிகளில் அனிருத் இசையில் தளபதி விஜய் இந்த பாடலை பாடியுள்ளார். இந்த பாடலை ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.

    • 'ஜன நாயகன்' படத்தின் இசை வெளியீட்டு நாளை மலேசியாவில் நடைபெறுகிறது.
    • இந்த விழாவிற்கு ரசிகர்கள் மற்றும் திரைப்பிரபலங்கள் என பலரும் மலேசியாவில் குவிந்த வண்ணம் உள்ளனர்.

    'ஜன நாயகன்' படத்தின் இசை வெளியீட்டு நாளை மலேசியாவில் நடைபெறுகிறது. இந்த விழாவிற்கு ரசிகர்கள் மற்றும் திரைப்பிரபலங்கள் என பலரும் மலேசியாவில் குவிந்த வண்ணம் உள்ளனர். இதன் காரணமாக மலேசியா நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது.

    மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் உள்ள புக்கிட் ஜலில் மைதானத்தில் 'ஜன நாயகன்' படத்தின் இசை வெளியீட்டு விழா நாளை நடைபெறுகிறது. இவ்விழாவில் நடிகரும், நடன இயக்குநருமான பிரபுதேவா, இசையமைப்பாளர் அனிருத், இயக்குநர் நெல்சன், பாடகர்கள், எஸ்.பி.பி. சரண், கிரிஷ், ஹரிஷ் ராகவேந்திரா, திப்பு, பாடகிகள் அனுராதா ஸ்ரீராம், சுஜாதா மோகன் ஆகியோர் பங்கேற்கின்றனர். இவர்கள் மலேசியாவிற்கு பயணம் மேற்கொள்ளும் வீடியோ தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது. இவர்களை தவிர நடிகர் தனுஷ் உள்ளிட்ட பலரும் மலேசியாவிற்கு பயணம் மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    இந்நிலையில் படத்தின் நாயகன் விஜய், மமீதா பைஜு, இயக்குனர் ஹெச் வினோத், தயாரிப்பாளர், இசையமைப்பாளர் அனிருத் ஆகியோர் மலேசியாவுக்கு சென்றடைந்தனர். 

    மலேசியாவுக்கு சென்றடைந்த விஜய்க்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    • வழக்கு உச்சநீதிமன்ற உத்தரவுப்படி சி.பி.ஐ. வசம் ஒப்படைக்கப்பட்டது.
    • த.வெ.க. இணைப் பொதுச்செயலாளர் சி.டி.ஆர். நிர்மல் குமார், கரூர் மாவட்ட செயலாளர் மதியழகன் ஆகியோருக்கும் சம்மன் வழங்கப்பட்டுள்ளது.

    கரூர் மாவட்டம் வேலுச்சாமிபுரத்தில் தமிழக வெற்றிக் கழக பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட கோர நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழக அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. கூட்ட அனுமதி, பாதுகாப்பு ஏற்பாடுகள் போதுமானதாக இல்லை என்ற குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், வழக்கு உச்சநீதிமன்ற உத்தரவுப்படி சி.பி.ஐ. வசம் ஒப்படைக்கப்பட்டது. தற்போது சி.பி.ஐ. விசாரணை நடைபெற்று வருகிறது.

    இதனிடையே, இந்த வழக்கில் த.வெ.க. முக்கிய நிர்வாகிகளான புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜூன் ஆகியோருக்கு டெல்லி சி.பி.ஐ. தலைமையகத்தில் வருகிற 29-ந்தேதி ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. அதேபோல் த.வெ.க. இணைப் பொதுச்செயலாளர் சி.டி.ஆர். நிர்மல் குமார், கரூர் மாவட்ட செயலாளர் மதியழகன் ஆகியோருக்கும் சம்மன் வழங்கப்பட்டுள்ளது.

    இதனை தொடர்ந்து நிர்வாகிகள் டெல்லி சென்று சி.பி.ஐ. விசாரணைக்கு ஆஜராக உள்ளனர்.

    • மத்திய பா.ஜ.க. அரசு மக்கள் விரோத ஆட்சி நடத்தி வருவது அனைவருக்கும் தெரிந்த விஷயமாகும்.
    • எஸ்ஐஆர் தவிர்க்கப்பட வேண்டும் என்பதே பெரும்பாலான கட்சிகளின் விருப்பம்.

    தஞ்சாவூர்:

    தஞ்சையில் விஜய்வசந்த் எம்.பி. நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் பெயர் மாற்றப்பட்டுள்ளது. மேலும் அந்த திட்டத்திற்கான நிதியில் மத்திய அரசு 60 சதவீதமும், மாநில அரசு 40 சதவீதமும் வழங்க வேண்டும் என்று புதிய சட்டம் இயற்றி உள்ளனர்.

    இந்த சட்டத்தை திரும்ப பெறக்கோரி எம்.பி.க்கள் மனு அளித்துள்ளோம்.

    ஏனென்றால் அந்தந்த மாநிலங்களில் பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மாநில அரசு நிதி வழங்குவது சாத்தியமில்லை. மேலும் மகாத்மா காந்தி பெயரை நீக்கக்கூடாது.

    மத்திய பா.ஜ.க. அரசு மக்கள் விரோத ஆட்சி நடத்தி வருவது அனைவருக்கும் தெரிந்த விஷயமாகும். முழுக்க முழுக்க கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாக மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசு ஆட்சி நடத்தி வருகிறது. மேலும் பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்கி வருகின்றனர்.

    நடிகர் விஜய் புதிதாக கட்சி தொடங்கி உள்ளார். ஆனால் அவர் தீய சக்தி தி.மு.க., தூய சக்தி த.வெ.க. என கூறியது ஏற்புடையதல்ல. ஏனென்றால் தமிழகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்பான ஆட்சி நடத்தி வருகிறார்.

    தி.மு.க. கூட்டணியில் காங்கிரசுக்கு எத்தனை இடங்கள் என்பது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து இன்னும் சில நாட்களில் மேலிட பொறுப்பாளர்கள் பேசுவர். இந்தியா கூட்டணி வலுவாக உள்ளது. கண்டிப்பாக 2026 சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெறும்.

    தி.மு.க. கூட்டணி 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெறும் என முதலமைச்சர் கூறியுள்ளார். அதன் அடிப்படையில் கூட்டணி கட்சியினர் பணியாற்றி வருகின்றனர்.

    எஸ்ஐஆர் தவிர்க்கப்பட வேண்டும் என்பதே பெரும்பாலான கட்சிகளின் விருப்பம். எங்கள் தலைவர் ராகுல்காந்தி கூட இதை எதிர்த்து பல போராட்டங்கள் நடத்தி வருகிறார்.

    தமிழகத்தில் பல லட்சம் வாக்குகள் நீக்கப்பட்டு உள்ளது. தேர்தல் நெருங்கும் சமயத்தில் இப்படி வாக்குகள் நீக்கப்படுவது ஏற்புடையதல்ல. பீகாரில் கூட கடைசி நேரத்தில் பல வாக்குகள் சேர்க்கப்பட்டது. இந்த எஸ்ஐஆர் திட்டத்தை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்ற சென்னது பாஜக அல்ல நீதிமன்றம்.
    • விரைவில் டெல்லி சென்று பியூஷ் கோயலை சந்திக்க உள்ளேன்.

    சென்னை:

    சுனாமி நினைவு தினத்தையொட்டி சென்னை பட்டினப்பாக்கம் கடற்கரையில் பா.ஜ.க. சார்பில் நடந்த அஞ்சலி நிகழ்ச்சியில் பா.ஜ.க. துணைத்தலைவர் குஷ்பு, செயலாளர் கராத்தே தியாகராஜன் உள்பட பலர் கடலில் பால் ஊற்றி வழிபட்டார்கள்.

    பின்னர் குஷ்பு நிருபர்களிடம் கூறியதாவது:-

    திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றினால் மதுரைக்கு எய்ம்ஸ் மருத்துவமனை வந்துவிடுமா என விசிக தலைவர் திருமாவளவன் கேட்டுள்ளார்.

    திருமாவளவன் மனநிலை இதுதான், இதுவே கிறிஸ்துமஸ் பண்டிகை மற்றும் ரம்ஜான் பண்டிகை கொண்டாடினால் எய்ம்ஸ் மருத்துவமனை வந்துவிடுமா என அவரால் கூற முடியுமா? இந்து மெஜாரிட்டி அதிகமாக உள்ளதால் தொடர்ந்து மண்டையில் கொட்டிக் கொண்டே இருக்கிறார்கள். அவர்களது கூட்டணியில் இருப்பவர்கள் கோவிலுக்கு போவார்கள், பட்டை பூசுவார்கள், தீபம் ஏற்றுவார்கள், வீட்டில் பூஜை நடத்துவார்கள் இதையெல்லாம் நாலு சுவற்றுக்குள் நடக்கும் மக்களுக்கு தெரியாது என நினைப்பார்கள்.

    வருகிற தேர்தலில் எந்த கோவிலுக்கும் போக வேண்டாம், எந்த சர்ச், மசூதி பள்ளிவாசலிலும் திருமாவளவன் நிற்க வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன். திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்ற சென்னது பாஜக அல்ல நீதிமன்றம். மகாத்மா காந்தி பெயர் மாற்றம் குறித்து ப.சிதம்பரம் விமர்சிக்கிறார்.

    அவர்கள் ஆட்சி காலத்தில் ராஜீவ்காந்தி பெயரில் திட்டங்களை கொண்டு வந்தார்கள். ஆனால் நாங்கள் மோடி பெயரை எந்த திட்டத்துக்காவது சூட்டினோமா? ராகுல் காந்தி வாக்கு இயந்திரத்தில் தவறு உள்ளது என கூறினார் ஆனால் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் அப்படி எதுவும் இல்லை என கூறினார். காங்கிரசில் உள்ள பல நபர்கள் வாக்கு இயந்திரத்தில் எந்த குளறுபடிகளும் இல்லை என கூறி வருகிறார்கள். சொல்வதற்கு வாய் உள்ளது என வாய்க்கு வந்தபடி எதையும் கூற கூடாது. யோசித்து பேச வேண்டும்.

    விஜயும் சீமானும் ஆர்.எஸ்.எஸ் பிள்ளைகள் என வி.சி.க. தலைவர் திருமாவளவன் கூறுகிறார்.

    அப்போ திருமாவளவன் யாரின் பிள்ளை, தி.மு.க. வின் பிள்ளையா, காங்கிரஸ் பிள்ளையா? அ.தி.மு.க. கூட்டணியில் பாஜகவுக்கு 23 இடங்கள் ஒதுக்கப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது என்ற வதந்திகளுக்கு எல்லாம் பதில் சொல்ல முடியாது. விரைவில் டெல்லி சென்று பியூஷ் கோயலை சந்திக்க உள்ளேன். விரைவில் பா.ஜ.க. மாநில தலைவர் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஒரு நல்ல அறிவிப்பை வெளியிடுவார்கள். பா.ஜ.க. கூட்டணி தொகுதி பங்கீடு தொடர்பாக வந்த கணக்குகள் வதந்தி மட்டுமே என்றார். 

    • காங்கிரஸ் விஜய்யுடன் கூட்டணி அமைக்க வாய்ப்பு உள்ளதாக சூசகமாக தெரிவித்த கருத்துகள் அரசியல் அரங்கில் பூதாகரமாகியுள்ளது.
    • நம்மை அவமானப்படுத்தியவர்களை வீழ்த்த வேண்டும் என்ற வெறி உணர்வில் தான் காங்கிரசின் அடிபட்ட தொண்டர்கள் இருக்கிறார்கள்.

    திருச்சி:

    2026 சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒருசில மாதங்களே உள்ள நிலையில் ஓராண்டுக்கு முன்னரே களத்தில் அனல்பறக்க தொடங்கிவிட்டது. தமிழகத்தை ஆண்ட கட்சியும், ஆளப்போகும் கட்சியும் தங்களுக்கான கூட்டணியை இன்னும் இறுதிசெய்யாத நிலையில் அத்தனை தொகுதிகளில் வெல்வோம், இத்தனை தொகுதிகளில் வெல்வோம் என்று கூக்குரலிட்டு வருகிறார்கள்.

    கடைசி நேரத்தில் கூட்டணியில் மாற்றங்கள் வரும் என்பது அரசியல் நோக்கர்களின் கருத்தாக இருந்தபோதிலும், தி.மு.க. தலைமையில் ஒரு அணியும், அ.தி.மு.க-பா.ஜ.க. கூட்டணியில் ஒரு அணியும், விஜய்யின் த.வெ.க. கூட்டணியும், சீமானின் நாம் தமிழர் கட்சி ஒரு அணியாகவும் தேர்தலை எதிர்கொள்ள தயாராகி விட்டன. இதர கட்சிகளாக தே.மு.தி.க. தனது கூட்டணி குறித்து வருகிற 9-ந்தேதி கடலூர் மாநாட்டில் அறிவிப்போம் என்று அதன் பொதுச்செயலாளர் பிரேமலதா தெரிவித்துள்ளார்.

    அ.ம.மு.க., பா.ம.க., ஓ.பி.எஸ்.சின் அ.தி.மு.க. தொண்டர் மீட்புக்குழு போன்றவை விரைவில் தங்கள் நிலைப்பாட்டை தெரிவிப்போம் என கூறியுள்ளன. அதன் அடிப்படையில் 4 முனை போட்டியா அல்லது 5 முனை போட்டியா என்பது வெகுவிரைவில் தெரியவரும்.

    கட்சி தொடங்கிய பின்னர் முதல் சட்டமன்ற தேர்தலை சந்திக்கும் விஜயின் த.வெ.க. மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதற்காக அக்கட்சியும் கூட்டணி கதவுகளை திறந்து வைத்துள்ளது.

    இந்த கூட்டணியில் காங்கிரஸ் கட்சியும் இடம்பெற வாய்ப்புள்ளதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி வருகின்றன. இது தி.மு.க. கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தி இருந்தபோதிலும் அதன் மூத்த நிர்வாகிகள் தற்போது வரை எந்த விமர்சனமும் செய்யாதது சந்தேகங்களை அதிகப்படுத்தி இருக்கிறது. இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், செய்தி தொடர்பாளருமான திருச்சி வேலுசாமி கன்னியாகுமரி மாவட்டம் அருமனையில் நடந்த கிறிஸ்துமஸ் விழாவில் கலந்து கொண்டு காங்கிரஸ் விஜய்யுடன் கூட்டணி அமைக்க வாய்ப்பு உள்ளதாக சூசகமாக தெரிவித்த கருத்துகள் அரசியல் அரங்கில் பூதாகரமாகியுள்ளது.

    இது தொடர்பாக திருச்சி வேலுச்சாமியிடம் கேட்ட போது அவர் கூறியதாவது:-

    அருமனையில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழா பல ஆண்டுகளாக நடத்தப்பட்டு வருகிறது. அதில் நான் மட்டுமல்ல, விடுதலை சிறுத்தைகள் கட்சி, தமிழக வெற்றிக் கழகம் மற்றும் எங்களது மாவட்ட தலைவர், மாநில பொதுச்செயலாளர் உள்ளிட்டோர் பங்கேற்று பேசியுள்ளனர். விஜய் பற்றி பேசும்போது அங்கு திரண்டிருந்த கூட்டம் ஆர்ப்பரித்தது. கன்னியாகுமரி மாவட்டத்தில் விஜய்க்கு இருக்கும் செல்வாக்கு ஆச்சரியப்படுத்தும் அளவுக்கு உள்ளது.

    காங்கிரசின் அடிமட்ட தொண்டர்கள் தி.மு.க. மீது கோபத்தில் இருப்பது உண்மைதான். ஒரு இயக்கம் அடிமட்டத்தில் வளர வேண்டும் என்றால் உள்ளாட்சி அமைப்புகளில் பிரதிநிதித்துவம் இருக்க வேண்டும். ஆனால் கடந்த உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரசுக்கு உரிய பிரதிநிதித்துவம் வழங்காமல் அவமானப்படுத்தியதாக தொண்டர்கள் கருதுகிறார்கள்.

    பல இடங்களில் பிரதிநிதித்துவம் வழங்கவில்லை. ஒரு சில இடங்களை காங்கிரசுக்கு ஒதுக்கிவிட்டு அந்த இடங்களிலும் பண பலத்தை பயன்படுத்தி காங்கிரஸ் வேட்பாளர்களை தோற்கடித்தார்கள். அந்த குமுறல் தான் இன்றைக்கு ஆர்ப்பரிப்பாக வெளிப்படுகிறது. எரிவதை இழுத்தால் கொதிப்பது அடங்கிவிடும் என தொண்டர்கள் நினைக்கிறார்கள்.

    எம்.எல்.ஏ., எம்.பி.யாக இருப்பவர்கள், ஒரு சில பயனாளிகளை தவிர யாரும் தி.மு.க.வுடன் கூட்டணி அமைப்பதை விரும்பவில்லை. ஒவ்வொரு மாவட்டத்திலும் ஓரிருவரை மட்டும் கையில் வைத்துக் கொண்டு மற்ற காங்கிரஸ் கட்சியினரை கீழ்த்தரமாக நடத்துவதாக நினைக்கிறார்கள். கூட்டணி தோழமை என கூறிவிட்டு காங்கிரசை வேரறுக்கும் வேலையைத்தான் தி.மு.க. செய்தது.

    நம்மை அவமானப்படுத்தியவர்களை வீழ்த்த வேண்டும் என்ற வெறி உணர்வில் தான் காங்கிரசின் அடிபட்ட தொண்டர்கள் இருக்கிறார்கள். இது நூற்றாண்டுகளைக் கடந்த காங்கிரஸ் கட்சி தலைமைக்கும் தெரியும். தமிழ்நாட்டில் காங்கிரஸ் என்றாலே அது பெருந்தலைவர் காமராஜர் தான். ஆனால் அவரையும் அவமானப்படுத்தினார்கள். ஆனால் தி.மு.க. தலைமை உடனடியாக அதை கண்டிக்கவில்லை. இது போன்ற கோபத்தின் வெளிப்பாடுதான் இப்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

    கூட்டணி விவகாரத்தில் காங்கிரஸ் தலைமை சரியான முடிவு எடுக்கும் என தொண்டர்கள் காத்திருக்கிறார்கள். எந்த ஒரு இயக்கமாக இருந்தாலும் தொண்டர்களின் மனநிலையை புரிந்து கொண்டு முடிவெடுக்க வேண்டும். காங்கிரசும் அவ்வாறு முடிவு எடுக்கும் என தொண்டர்கள் நம்புகிறார்கள்.

    ஒரு சாரார் தி.மு.க. கூட்டணியை விரும்புவதாகவும், மற்றொரு தரப்பினர் தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணியை விரும்புவதாகவும் கூறப்படுவதில் உண்மை இல்லை. அவ்வாறு கூறி காங்கிரசை துண்டாக்க முடியாது. அடிபட்ட காங்கிரஸ் தொண்டர்களின் ஒட்டுமொத்த மனநிலையும் தி.மு.க. கூட்டணி கூடாது என்பதாகத்தான் இருக்கிறது. அதன் வெளிப்பாடுதான் காங்கிரசை த.வெ.க.வுடன் கூட்டணி அமைக்க தூண்டுகிறது என்றார். 

    • கோலாலம்பூரில் உள்ள புக்கிட் ஜலில் மைதானத்தில் ‘ஜன நாயகன்’ படத்தின் இசை வெளியீட்டு விழா நாளை நடைபெறுகிறது.
    • ‘தளபதி திருவிழா’ என்ற கார் கோலாலம்பூரில் வலம் வருகிறது.

    நடிகர் விஜயின் 'ஜன நாயகன்' படத்தின் மீதான ஆர்வம் ரசிகர்கள் மட்டுமின்றி திரைப்பிரபலங்களுக்கும் உள்ளது என்றால் அது மிகையல்ல...

    இதனால் படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு ரசிகர்கள் மற்றும் திரைப்பிரபலங்கள் என பலரும் மலேசியாவில் குவிந்த வண்ணம் உள்ளனர். இதன் காரணமாக மலேசியா நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது.

    மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் உள்ள புக்கிட் ஜலில் மைதானத்தில் 'ஜன நாயகன்' படத்தின் இசை வெளியீட்டு விழா நாளை நடைபெறுகிறது. இவ்விழாவில் நடிகரும், நடன இயக்குநருமான பிரபுதேவா, இசையமைப்பாளர் அனிருத், இயக்குநர் நெல்சன், பாடகர்கள், எஸ்.பி.பி. சரண், கிரிஷ், ஹரிஷ் ராகவேந்திரா, திப்பு, பாடகிகள் அனுராதா ஸ்ரீராம், சுஜாதா மோகன் ஆகியோர் பங்கேற்கின்றனர். இவர்கள் மலேசியாவிற்கு பயணம் மேற்கொள்ளும் வீடியோ தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது. இவர்களை தவிர நடிகர் தனுஷ் உள்ளிட்ட பலரும் மலேசியாவிற்கு பயணம் மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    மேலும், 'தளபதி திருவிழா' என்ற கார் கோலாலம்பூரில் வலம் வருகிறது. 



    • 'ஜன நாயகன்' படத்தின் இசை வெளியீட்டு நாளை மலேசியாவில் நடைபெறுகிறது.
    • பல்வேறு நிபந்தனைகளை மலேசிய அரசு விதித்துள்ளதாக கூறப்படுகிறது.

    தமிழக அரசியலில் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதற்கு காரணம் விஜய். நடிப்பில் பயணித்த வந்த விஜய், ரசிகர் மன்றம் மூலம் மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை செய்து வந்தார். இதனை தொடர்ந்து தமிழக வெற்றிக்கழகம் என்ற கட்சியை தொடங்கினார். இதனால் நடிப்பில் இருந்து விலகுவதாக கூறி ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள 'ஜன நாயகன்' படமே தனது கடைசி படம் என்று கூறியுள்ளார்.

    இதனால் 'ஜன நாயகன்' படத்தின் மீதான ஆர்வம் அதிகரித்துள்ளது. மேலும், விஜய் போன்ற நடிகனை தமிழ் சினிமா இழப்பதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

    இதனிடையே, 'ஜன நாயகன்' படத்தின் இசை வெளியீட்டு நாளை மலேசியாவில் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையே, விழாவுக்கு மலேசியா அரசு சில நிபந்தனைகளை விதித்துள்ளது. அதில், முழுக்க முழுக்க சினிமா சார்ந்த பொழுதுபோக்கு நிகழ்ச்சியாக மட்டுமே இருக்க வேண்டும். யாரும் அரசியல் பேச கூடாது. ரசிகர்கள் கட்சி கொடி, டி-சர்ட், துண்டு அணிந்து வரக்கூடாது. மீறினால் கடும் நடவடிக்கை போன்ற நிபந்தனைகளை மலேசிய அரசு விதித்துள்ளதாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில், நாளை நடைபெறும் இசை வெளியீட்டுக்காக நூற்றுக்கணக்கான ரசிகர்கள் மலேசியா புறப்பட்ட வண்ணம் உள்ளனர். இதுதொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

    இதனால் மலேசியா நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. 



    • இப்படம் வருகிற 9-ந்தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
    • இன்று மாலை பாடலாசிரியர் விவேக்கின் வரிகளில் அனிருத் இசையில் தளபதி விஜய் பாடியுள்ள 'செல்ல மகளே...' பாடல் வெளியாக உள்ளது.

    ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜயின் நடிப்பில் வெளியாக உள்ள படம் 'ஜன நாயகன்'. இப்படம் விஜயின் கடைசி படம் எனக்கூறப்படுவதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு மேலோங்கி உள்ளது.

    பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா பைஜூ உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படம் வருகிற 9-ந்தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

    இதனிடையே, இப்படத்தின் பாடல்களான "தளபதி கச்சேரி", 'ஒரே பேரே வரலாறு' ஆகியவை வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து பாடலாசிரியர் விவேக்கின் வரிகளில் அனிருத் இசையில் தளபதி விஜய் பாடியுள்ள 'செல்ல மகளே...' பாடல் இன்று மாலை வெளியாக உள்ளது. இதனால் ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்தில் உள்ளனர்.



    இதற்கிடையே, மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் உள்ள புக்கிட் ஜலில் மைதானத்தில் 'ஜன நாயகன்' படத்தின் இசை வெளியீட்டு விழா நாளை நடைபெற உள்ளது. இசை வெளியீட்டு விழாவிற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

    இந்த நிலையில், 'ஜன நாயகன்' படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்பதற்காக சென்னை விமான நிலையத்தில் இருந்து தனி விமானம் மூலம் நடிகர் விஜய் மலேசியாவுக்கு புறப்பட்டார். 

    • ஆங்கிலேயர்களுக்கு எதிராக ஆயுதமேந்திப் போராடி வெற்றி கண்ட இந்தியாவின் முதல் அரசி வீரமங்கை ராணி வேலு நாச்சியார்.
    • சமய நல்லிணக்கத்தைப் பேணிய எங்கள் கொள்கைத் தலைவர், வீரமங்கை ராணி வேலு நாச்சியார்.

    வீரமங்கை ராணி வேலு நாச்சியார் நினைவு தினத்தையொட்டி அவரது திருவுருவப் படத்திற்கு த.வெ.க. தலைவர் விஜய் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    வீரத்தின் விளைநிலமான தமிழ் மண்ணிலிருந்து, ஆங்கிலேயர்களுக்கு எதிராக ஆயுதமேந்திப் போராடி வெற்றி கண்ட இந்தியாவின் முதல் அரசி, சமூக, சமய நல்லிணக்கத்தைப் பேணிய எங்கள் கொள்கைத் தலைவர், வீரமங்கை ராணி வேலு நாச்சியார் அவர்களின் நினைவு தினத்தையொட்டி, எமது அலுவலகத்தில் அவரின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்தும் மலர்தூவியும் மரியாதை செலுத்தினேன் என்று தெரிவித்துள்ளார்.

    • இப்படத்தின் இசை வெளியீட்டு விழா மலேசியாவில் நடைபெற உள்ளது.
    • போஸ்டரை ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.

    ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடிப்பில், உருவாகி உள்ள படம் 'ஜன நாயகன்'. இப்படம் அடுத்தாண்டு பொங்கலுக்கு திரைக்கு வருகிறது. இப்படத்தில் பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, பிரியாமணி, பாபி தியோல், கவுதம் வாசுதேவ் மேனன், நரேன் ஆகியோர் நடித்துள்ளனர். அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

    அரசியலால் விஜய் நடிக்கும் கடைசிப் படம் இது என்பதால், ரசிகர்கள் மத்தியில் இதற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. சமீபத்தில் இப்படத்தின் பாடல்களான "தளபதி கச்சேரி", 'ஒரே பேரே வரலாறு' ஆகியவை வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதனிடையே இப்படத்தின் இசை வெளியீட்டு விழா மலேசியாவில் நடைபெற உள்ளது.

    இந்த நிலையில், 'ஜன நாயகன்' படத்தின் 3-வது பாடல் குறித்து அறிவிப்பு வெளியாகி உள்ளது. பாடலாசிரியர் விவேக்கின் வரிகளில் அனிருத் இசையில் தளபதி விஜய் பாடியுள்ள 'செல்ல மகளே...' பாடல் நாளை வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிட போஸ்டரை ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர். 


    ×